Sunday, December 7, 2008

ஸீதா நாயக - ராகம் ரீதி கௌ3ள - Sita Nayaka - Raga Reeti Gaula

பல்லவி
ஸீதா நாயக ஸ்1ரித ஜன போஷக
1ஸ்ரீ ரகு4 குல திலக ஓ ராம

சரணம்
சரணம் 1
நிரு-பேத34க்துல கரிகோத பட3 லேக
கி3ரி பைனெக்குகொண்டிவோ (ஸ்ரீ வேங்கட கி3ரிபை) (ஸீ)

சரணம் 2
அங்க3லார்பு ஜூசி ரங்க3 புரமுன
2செலங்கு3சு பண்டி3திவோ (ரங்க3 புரமுன) (ஸீ)

சரணம் 3
காசின ப4க்துல ஜூசியா ப3லினே
யாசிஞ்சி வெட3லிதிவோ (ஆ ப3லினே) (ஸீ)

சரணம் 4
3ஆஸ1 மிஞ்சி நின்னாஸு1 4ஜேரெரனி
கீஸு1ல ஜேரிதிவோ (ஜேரெரனி) (ஸீ)

சரணம் 5
ஜாலிதோ வச்சு 5குசேலுனி கனி கோ3பீ
சேலமுலெத்திதிவோ (கனி கோ3பீ) (ஸீ)

சரணம் 6
6இங்கி3தமெரிகி3யுப்பொங்கு3சு ப்3ரோசு
3ங்கா3ரு தொ3ரவைதிவோ (நன்னு ப்3ரோசு) (ஸீ)

சரணம் 7
நீ கு3ணமுல 7கு3ட்டு பா3கு33 தெலிஸெனு
த்யாக3ராஜ வினுத (தெலிஸெனய்ய) (ஸீ)


பொருள் - சுருக்கம்
சீதை நாயகா! நம்பினோரைப் பேணும் இரகு குலத்திலகமே, ஓ இராமா! தியாகராசனால் போற்றப்பெற்றோனே!

1. மிக்கு ஏழை தொண்டர்களின் தொல்லை தாளாது, திருவேங்கட மலை மீதேறிக்கொண்டீரோ?
2. தொண்டர்களின் புலம்பல் கண்டு, திருவரங்க புரத்தினில் ஆனந்தமாகப் பள்ளிகொண்டீரோ?
3. காத்திருக்கும் தொண்டரைக் கண்டு, அந்த மகா பலியிடமே இரந்து சென்றீரோ?
4. ஆசை மிகுந்து, தொண்டர்கள் உன்னை விரைவில் வந்தடைந்தனரென, வானரர்களைச் சேர்ந்தீரோ?
5. துயருற்று வரும் குசேலரைக் கண்டு, கோபியரின் துகில்களையெடுத்தீரோ?
6. இங்கிதமறிந்து களிப்புடன் என்னைக் காக்கும் தங்கத் துரையானீரோ?
7. உனது குணங்களின் இரகசியம் நன்கு வெளிப்பட்டதய்யா.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸீதா/ நாயக/ ஸ்1ரித/ ஜன/ போஷக/
சீதை/ நாயகா/ நம்பினோரை/ பேணும்/


சரணம்
சரணம் 1
நிரு/-பேத3/ ப4க்துல/ கரிகோத/ பட3/ லேக/
மிக்கு/ ஏழை/ தொண்டர்களின்/ தொல்லை/ தாள/ இயலாது/

கி3ரி/ பைன/-எக்குகொண்டிவோ/ (ஸ்ரீ வேங்கட/ கி3ரிபை/) (ஸீ)
மலை/ மீது/ ஏறிக்கொண்டீரோ/ (திருவேங்கட/ மலை மீது/)


சரணம் 2
அங்க3லார்பு/ ஜூசி/ ரங்க3/ புரமுன/
புலம்பல்/ கண்டு/ அரங்க/ புரத்தினில்/

செலங்கு3சு/ பண்டி3திவோ/ (ரங்க3/ புரமுன/) (ஸீ)
ஆனந்தமாக/ பள்ளிகொண்டீரோ/ (திருவரங்க/ புரத்தினில்/)


சரணம் 3
காசின/ ப4க்துல/ ஜூசி/-ஆ/ ப3லினே/
காத்திருக்கும்/ தொண்டரை/ கண்டு/ அந்த/ பலியிடமே/

யாசிஞ்சி/ வெட3லிதிவோ/ (ஆ/ ப3லினே/) (ஸீ)
இரந்து/ சென்றீரோ/ (அந்த/ பலியிடமே/)


சரணம் 4
ஆஸ1/ மிஞ்சி/ நின்னு/-ஆஸு1/ ஜேரெரு/-அனி/
ஆசை/ மிகுந்து/ உன்னை/ விரைவில்/ வந்தடைந்தனர்/ என/

கீஸு1ல/ ஜேரிதிவோ/ (ஜேரெரு/-அனி/) (ஸீ)
வானரர்களை/ சேர்ந்தீரோ/ (வந்தடைந்தனர்/ என/)


சரணம் 5
ஜாலிதோ/ வச்சு/ குசேலுனி/ கனி/ கோ3பீ/
துயருற்று/ வரும்/ குசேலரை/ கண்டு/ கோபியரின்/

சேலமுலு/-எத்திதிவோ/ (கனி/ கோ3பீ/) (ஸீ)
துகில்களை/ எடுத்தீரோ/ (கண்டு/ கோபியரின்/)


சரணம் 6
இங்கி3தமு/-எரிகி3/-உப்பொங்கு3சு/ ப்3ரோசு/
இங்கிதம்/ அறிந்து/ களிப்புடன்/ காக்கும்/

3ங்கா3ரு/ தொ3ர/-ஐதிவோ/ (நன்னு/ ப்3ரோசு/) (ஸீ)
தங்க/ துரை/ ஆனீரோ/ (என்னை/ காக்கும்/)


சரணம் 7
நீ/ கு3ணமுல/ கு3ட்டு/ பா3கு33/ தெலிஸெனு/
உனது/ குணங்களின்/ இரகசியம்/ நன்கு/ வெளிப்பட்டது/

த்யாக3ராஜ/ வினுத/ (தெலிஸெனு/-அய்ய/) (ஸீ)
தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/ (வெளிப்பட்டது/ அய்யா/)


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸ்ரீ ரகு4 குல திலக ஓ ராம - ஸ்ரீ ரகு4 குல திலக.
2 - செலங்கு3சு - செலங்க33.
3 - ஆஸ1 - ஆஸ.
ஒவ்வொரு சரணத்திலும் கடைசியில் திருப்பப்பட்ட பகுதிகள் எல்லா புத்தகங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை. சில புத்தகங்களில் திருப்பமே கொடுக்கப்படவில்லை.

Top
மேற்கோள்கள்
4 - ஜேரெரனி - பரதன் ராமனை சித்ரகூடத்தில் கண்டு சென்றபின், தான் அங்கிருப்பதனால் அயோத்தியிலிருந்து அடிக்கடி தன்னைக்காண குடிமக்கள் வருவரோ என்றஞ்சி, அப்படி வந்தால் தவசிகளுக்கு அதனால் ஏற்படும் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு, தானும் சீதை மற்றும் இலக்குவனுடன் தண்டகாரண்யம் செல்ல தீர்மானித்தான். (வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், அத்தியாயம் 117) ராமன் சித்ரகூடத்தினை விட்டுச் செல்லல் காண்க. இதனை தியாகராஜர் கேலி செய்கின்றார்.
5 - குசேலுனி - குசேலரின் இயற்பெயர் 'சுதாமா'. அவர் மிக்கு வறியவராக இருந்தார். அவர் கந்தலாடைகளை உடுத்தியதனால் அவருக்கு 'குசேலர்' என்று பெயர் வந்தது. அவர் கண்ணனுடன் குருகுலவாசம் செய்தவர். கண்ணன் துவாரகைக்கு மன்னனாக இருக்கையில் அவர், மனைவியின் வேண்டுகோளின் பேரில் கண்ணனைக் காண அவலுடன் வந்து செல்வம் யாவும் பெற்றார். இதற்காகத்தான் கண்ணன் கோபியரின் சேலைகளைத் திருடினான் என தியாகராஜர் கேலி செய்கிறார். குசேலர் - சுதாமா கதை

Top
விளக்கம்
6 - இங்கி3தமெரிகி3 - குறிப்பறிந்து - துரோபதைக்குக் கண்ணன் சேலை அளித்து அவளுடைய மானத்தைக் காத்தல் இதற்கோர் உதாரணம்.
7 - கு3ட்டு பா3கு33 தெலிஸெனு - அடியார் முழுமையாக சரணடைந்தால் இறைவன் அவர்தம் தேவைகளைத் தானே சுமப்பதாக பகவத்-கீதையில் (9.22 நோக்க) கொடுத்த வாக்குறுதியினை தியாகராஜர் குறிப்பிடுகின்றார்.
TopUpdated on 07 Dec 2008

No comments: