Monday, December 8, 2008

நாடி மாட - தே3வக்ரிய - Naati Maata - Raga Devakriya

பல்லவி
1நாடி மாட மரசிதிவோ ஓ ராம சின்ன (நா)

அனுபல்லவி
மாடி மாடிகி நாபை 2மன்னன ஜேயுசு
ஏடிகி யோசன ஈ பா4க்3யமு நீத3னு (நா)

சரணம்
தருணுல பா3கு3 நர்தனமுல ஜூசு வேள
சரணமுலனு கனி கரகு3சு ஸேவிம்ப
4ரதுனி கர சாமரமுனு நில்புசு
கருணனு 3த்யாக3ராஜ வரது33னி பல்கின (நா)


பொருள் - சுருக்கம்
ஓ இராமா! சிறு வயதினில் பகர்ந்த சொல்லினை மறந்தாயோ?

ஒவ்வோர் முறையும், என்மீது தயவு காட்டி, 'என்ன யோசனை? இப்பேறு உன்னுடையது' என்றனை;
மடந்தையரின் இனிய நடனத்தைக் காணும் போழ்து,(உனது) திருவடிகளைக் கண்டுருகிச் சேவிக்க, பரதனின் கை சாமரத்தினை நிறுத்தி, கருணையுடன், 'தியாகராச வரதன்' என்று பகர்ந்தனை;
அன்றைய சொல்லினை மறந்தாயோ?


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நாடி/ மாட/ மரசிதிவோ/ ஓ ராம/ சின்ன/ (நா)
அன்றைய/ சொல்லினை/ மறந்தாயோ/ ஓ இராமா/சிறு (வயதினில் பகர்ந்த)/


அனுபல்லவி
மாடி மாடிகி/ நாபை/ மன்னன/ ஜேயுசு/
ஒவ்வோர் முறையும்/ என்மீது/ தயவு/ காட்டி/

ஏடிகி/ யோசன/ ஈ/ பா4க்3யமு/ நீதி3/-அனு/ (நா)
'என்ன/ யோசனை/ இந்த/ பேறு/ உன்னுடையது/ எனும்/ அன்றைய..


சரணம்
தருணுல/ பா3கு3/ நர்தனமுல/ ஜூசு/ வேள/
மடந்தையரின்/ இனிய/ நடனத்தை/ காணும்/ போழ்து/

சரணமுலனு/ கனி/ கரகு3சு/ ஸேவிம்ப/
திருவடிகளை/ கண்டு/ உருகி/ சேவிக்க/

4ரதுனி/ கர/ சாமரமுனு/ நில்புசு/
பரதனின்/ கை/ சாமரத்தினை/ நிறுத்தி/

கருணனு/ த்யாக3ராஜ/ வரது3டு3/-அனி/ பல்கின/ (நா)
கருணையுடன்/ 'தியாகராச/ வரதன்'/ என்று/ பகர்ந்த/ அன்றைய..


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - நாடி - பல்லவியில் இச்சொல் 'சின்ன' என்ற சொல்லுடன் இணைந்து 'சிறு வயதினில்' என்ற பொருளும், அனுபல்லவி மற்றும் சரணத்தினை இணைக்கையில் 'அன்றைய' என்ற பொருளும் கொள்ளப்படும்.

2 - மன்னன ஜேயுசு - 'மன்னன' என்ற சொல்லுக்கு 'மன்னித்தல்', 'தயவு கூர்தல்' ஆகிய பொருள்கள் உண்டு. இவ்விடத்தில் 'மன்னித்தல்' என்ற பொருள் கொள்வதற்கு காரணம் ஏதும் கொடுக்கப்படவில்லை. எனவே 'தயவு செய்து' என்ற பொருள் கொள்ளப்பட்டது.

3 - த்யாக3ராஜ வரது33னி - தியாகராச வரதன் - இச்சொற்களுக்கு சில புத்தகங்களில் 'தியாகராசனுக்கு நான் வரமருள்வேன்' என்று இராமன் பரதனிடம் பகர்வதாக பொருள் கொணடுள்ளனர். இவ்விடத்தில் அத்தகைய பொருள் பொருந்தினாலும், சொற்களின் அமைப்பு அத்தகைய பொருளை நேரிடையாக குறிக்கவில்லை. தியாகராசர் தன்னுடைய சொந்த அனுபவத்தினை இப்பாடலில் விவரித்துள்ளார். அவருடைய மனப்பாங்கினையும், இப்பாடல் பாடப்பெற்ற தருணத்தினையும் (context) அறியாது, இதற்கு உண்மையான பொருள் சொல்வது கடினம்.

Top


Updated on 08 Dec 2008

No comments: