Saturday, December 6, 2008

ராக3 ரத்ன - ராகம் ரீதி கௌ3ள - Raga Ratna - Raga Reeti Gaula

பல்லவி
ராக3 ரத்ன மாலிகசே ரஞ்ஜில்லுனட ஹரி ஸ1

அனுபல்லவி
பா33 ஸேவிஞ்சி ஸகல பா4க்3யமந்து3தா3மு ராரே (ரா)

சரணம்
நைக31ஷட்-ஸா1ஸ்த்ர 2புராணாக3மா3ர்த2 ஸஹிதமட
யோகி3 வருலு ஆனந்த3முனொந்தே3 ஸன்-மார்க3மட
பா43வதோத்தமுலு கூடி3 பாடே3 கீர்தனமுலட
த்யாக3ராஜு கட3 தேர தாரகமனி சேஸின ஸ1த (ரா)


பொருள் - சுருக்கம்
தியாகராசன் கடைத்தேற, தாரகமெனப் புனைந்த நூற்றுக்கணக்கான ராகங்களெனும் இரத்தின
மாலையையணிந்து திகழ்வானாம் அரி

மறைகள், ஆறு சாத்திரங்கள், புராணங்கள், ஆகமங்களின் பொருளுடன் கூடியவையாம்;
சிறந்த யோகியர்கள் களிப்புறும் நன்னெறியாம்;
உத்தமமான பாகவதர்கள் கூடி பாடும் கீர்த்தனங்களாம்;

நன்கு தொழுது, அனைத்து பேறடைவோம், வாரீர்!


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராக3/ ரத்ன/ மாலிகசே/ ரஞ்ஜில்லுனட/ ஹரி/ ஸ1த/
ராகங்களெனும்/ இரத்தின/ மாலையையணிந்து/ திகழ்வானாம்/ அரி/ நூற்றுக்கணக்கான/


அனுபல்லவி
பா33/ ஸேவிஞ்சி/ ஸகல/ பா4க்3யமு/-அந்து3தா3மு/ ராரே/ (ரா)
நன்கு/ தொழுது/ அனைத்து/ பேறு/-அடைவோம்/ வாரீர்/



சரணம்
நைக3ம/ ஷட்/-ஸா1ஸ்த்ர/ புராண/-ஆக3ம/-அர்த2/ ஸஹிதமட/
மறைகள்/ ஆறு/ சாத்திரங்கள்/, புராணங்கள்/, ஆகமங்களின்/ பொருளுடன்/ கூடியவையாம்/;

யோகி3/ வருலு/ ஆனந்த3முனு-ஒந்தே3/ ஸன்-மார்க3மட/
யோகியர்களில்/ சிறந்தவர்/ களிப்புறும்/ நன்னெறியாம்/

பா43வத/-உத்தமுலு/ கூடி3/ பாடே3/ கீர்தனமுலட/
பாகவதர்களில்/ உத்தமர்/ கூடி/ பாடும்/ கீர்த்தனங்களாம்/

த்யாக3ராஜு/ கட3 தேர/ தாரகமு/-அனி/ சேஸின/ ஸ1த/ (ரா)
தியாகராசன்/ கடைத்தேற/ தாரகம்/ என/ புனைந்த/ நூற்றுக்கணக்கான/ ராகங்களெனும்..

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - ஷட்-ஸா1ஸ்த்ர - ஆறு சாத்திரங்கள் - சாங்க்2யம், யோக3ம், வேதா3ந்தம், மீமாம்ஸம், ந்யாயம், வைஸே1ஷிக
2 - புராண - பதினெண் புராணங்கள்
3 - ஆகம - ப்3ராஹ்மணம் எனப்படும் வேத மந்திரங்களின் விளக்கவுரை மற்றும் சிவாகமங்கள்.

விளக்கம்
தாரகம் - பிறவிக் கடலைத் தாண்டும் சாதனம்.

தியாகராஜர் தனது ஆக்கங்களின் நோக்கத்தினை தானே விவரிக்கும் பாடல் இது. இந்த மகானின் பாடல்களை விமரிசிக்க அவரைத் தவிர வேறு யாருக்கு தகுதியுண்டு?
Top



Updated on 06 Dec 2008

No comments: