Monday, December 1, 2008

நீ த3ய கல்கு3டே - ராகம் ரீதி கௌ3ள - Nee Daya Kalgute - Raga Reeti Gaula

பல்லவி
நீ த3ய கல்கு3டே பா4க்3யமனி
நிஜமுக3னேல தோசதோ3

அனுபல்லவி
நாத3 ரூப நீரத3 ஸன்னிப4 தி3
நாதா2ன்வய பூ4ஷண ம்ரு2து3 பா4ஷண (நீ)

சரணம்
சரணம் 1
அவிவேகுலைன தா3ர தனயுல-
நனுதி3னமுனு கலஸி
4வ ஸாக3ரமுனுனீத3 லேக
4யமுன செய்யலஸி
அவனீஸு1ல காசி ஸுக2மு
லேகனாயாஸமு ஸொலஸி
விவித4முலகு3 நீ மாய லோபல
தகி3லின தனகீயவது4லனு தெலிஸி (நீ)

சரணம் 2
வேக3 லேசி தானதி லோபி4 ஜனுல
வெம்ப3டி3கா3 திரிகி3
ரோகி3யை தா கோரின கோர்கெலு
ரோயக மேனு கரகி3
போ43 பா4க்3யமுல கொரகன்ய ஸுருல
பூ4-ஸுருல கோரி திரிகி3
ஏ க3தியு லேகயீ ஸுக2ம்பு3லிட்லனி
தன மதி3னி தானெரிகி3 (நீ)

சரணம் 3
நாக3 நாயக ஸ1யனேந்து3 தி3
நாத2 நயன ஸீதாங்க
யோகி3 வந்தி31பதா3ரவிந்த3
யுக31ரணாகளங்க
ராக3 லோப4 மதா3து3ல கொட்டி
ரக்ஷிஞ்சே பி3ருதா3ங்க
த்யாக3ராஜ பூஜித ரகு4 நாயக
தாரகமனி தெலியு 2நிஸ்11ங்க (நீ)


பொருள் - சுருக்கம்
நாத வடிவினனே! கார்முகில் நிகரோனே! பகலவன் குல அணிகலனே! மென்சொல்லோனே! அரவரசன் மேற்றுயில்வோனே! மதி பரிதிக் கண்களோனே! சீதையமர் மடியோனே! யோகியர் வந்திக்கும் திருவடித் தாமரை இணையோனே! களங்கமற்றோரின் புகலே! இச்சை, பேராசை, ஆணவம் ஆகியவற்றை யழித்துக் காக்கும் விருதணிவோனே! தியாகராசன் தொழும் இரகு நாயகா!

பிறவிக் கடலைக் கடத்துவிப்போனென ஐயமறப் புலப்படும்
உனது தயை உண்டாகுதலே பேறென மக்களுக்கு உண்மையாக ஏன் தோன்றாதோ?

பகுத்தறிவற்ற மனைவி மக்களை அனுதினமும் கலந்து, பிறவிக்கடலை நீந்தவியலாது, அச்சத்தினால் கை சோர்ந்து, மன்னர்களிடம் (கொடைக்கென) காத்திருந்தும் பயனின்றி, ஆயாசத்தினால் தளர்ந்தனர்; பலவிதமான உனது மாயையினுள் சிக்கிய தனக்கு இந்த அவதிகளென உணர்ந்து, உனது தயை உண்டாகுதலே பேறென உண்மையாக ஏன் தோன்றாதோ?

விடியற்காலை யெழுந்து, கருமிகளின் பின்னர் திரிந்து, பிணியுற்று, தான் கோரிய கோரிக்கைகளைக் கைவிடாது, உடல் கரைந்து, இன்பங்கள் மற்றும் செல்வத்திற்காக பிற வானோரையும், அந்தணர்களையும் வேண்டித் திரிந்து, எந்த புகலுமின்றி, இச்சுகங்கள் இவ்விதமேயெனத் தனது மனதில் தானறிந்து உனது தயை உண்டாகுதலே பேறென உண்மையாக ஏன் தோன்றாதோ?


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீ/ த3ய/ கல்கு3டே/ பா4க்3யமு/-அனி/
உனது/ தயை/ உண்டாகுதலே/ பேறு/ என/ (மக்களுக்கு)

நிஜமுக3னு/-ஏல/ தோசதோ3/
உண்மையாக/ ஏன்/ தோன்றாதோ/


அனுபல்லவி
நாத3/ ரூப/ நீரத3/ ஸன்னிப4/
நாத/ வடிவினனே/ கார்முகில்/ நிகரோனே/

தி3ன நாத2/-அன்வய/ பூ4ஷண/ ம்ரு2து3/ பா4ஷண/ (நீ)
பகலவன்/ குல/ அணிகலனே/ மென்/ சொல்லோனே/


சரணம்
சரணம் 1
அவிவேகுலைன/ தா3ர/ தனயுலனு/-
பகுத்தறிவற்ற/ மனைவி/ மக்களை/

அனுதி3னமுனு/ கலஸி/
அனுதினமும்/ கலந்து/

4வ/ ஸாக3ரமுனு/-ஈத3/ லேக/
பிறவி/ கடலை/ நீந்த/ இயலாது/

4யமுன/ செய்யி/-அலஸி/
அச்சத்தினால்/ கை/ சோர்ந்து/,

அவனி/-ஈஸு1ல/ காசி/
புவி/ ஆள்வோரிடம்/ காத்திருந்தும்/

ஸுக2மு/ லேகனு/-ஆயாஸமு/ ஸொலஸி/
பயன்/ இன்றி/ ஆயாசத்தினால்/ தளர்ந்து/

விவித4முலகு3/ நீ/ மாய/ லோபல/
பலவிதமான/ உனது/ மாயையினுள்/

தகி3லின/ தனகு/-ஈ/-அவது4லு/-அனு/ தெலிஸி/ (நீ)
சிக்கிய/ தனக்கு/ இந்த/ அவதிகள்/ என/ உணர்ந்து/ உனது...


சரணம் 2
வேக3/ லேசி/ தானு/-அதி/ லோபி4 ஜனுல/
விடியற்காலை/ யெழுந்து/ தான்/ மிக்கு/ கருமிகளின்/

வெம்ப3டி3கா3/ திரிகி3/
பின்னர்/ திரிந்து/

ரோகி3யை/ தா/ கோரின/ கோர்கெலு/
பிணியுற்று/ தான்/ கோரிய/ கோரிக்கைகளை/

ரோயக/ மேனு/ கரகி3/
கைவிடாது/ உடல்/ கரைந்து/

போ43/ பா4க்3யமுல கொரகு/-அன்ய/ ஸுருல/
இன்பங்கள்/ செல்வத்திற்காக/ பிற/ வானோரையும்/

பூ4-ஸுருல/ கோரி/ திரிகி3/
அந்தணர்களையும்/ வேண்டி/ திரிந்து/

ஏ/ க3தியு/ லேக/-ஈ/ ஸுக2ம்பு3லு/-இட்லு/-அனி/
எந்த/ புகலும்/ இன்றி/ இந்த/ சுகங்கள்/ இவ்விதமே/ என/

தன/ மதி3னி/ தானு/-எரிகி3/ (நீ)
தனது/ மனதில்/ தான்/ அறிந்து/ உனது..


சரணம் 3
நாக3/ நாயக/ ஸ1யன/-இந்து3/
அரவு/ அரசன்/ மேற்றுயில்வோனே/ மதி/

தி3ன நாத2/ நயன/ ஸீதா/-அங்க/
பரிதி/ கண்களோனே/ சீதை/ யமர் மடியோனே/

யோகி3/ வந்தி3த/ பத3/-அரவிந்த3/
யோகியர்/ வந்திக்கும்/ திருவடி/ தாமரை/

யுக3/ ஸ1ரண/-அகளங்க/
இணையோனே/ புகலே/ களங்கமற்றோர்/

ராக3/ லோப4/ மத3/-ஆது3ல/ கொட்டி/
இச்சை/ பேராசை/ ஆணவம்/ ஆகியவற்றை/ யழித்து/

ரக்ஷிஞ்சே/ பி3ருது3/-அங்க/
காக்கும்/ விருது/ அணிவோனே/

த்யாக3ராஜ/ பூஜித/ ரகு4/ நாயக/
தியாகராஜன்/ தொழும்/ இரகு/ நாயகா/

தாரகமு/-அனி/ தெலியு/ நிஸ்11ங்க/ (நீ)
(பிறவிக் கடலைக்) கடத்துவிப்போன்/ என/ புலப்படும்/ ஐயமற/ உனது..


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பதா3ரவிந்த3 - பாதா3ரவிந்த3

மேற்கோள்கள்

விளக்கம்
2 - நிஸ்11ங்க - ஐயமற்ற - ஐயமற - இச்சொல்லினை இறைவனின் அடைமொழியாகவும் (ஐயமற்றோன்) கொள்ளலாம். ஆனால் இதற்குமுன் வரும் 'தெலியு' (புலப்படும்) என்ற சொல்லினால், இதனை 'ஐயமற' என மொழிபெயர்த்து, பல்லவியுடன் சேர்த்தல் சிறந்ததெனத் தோன்றுகின்றது.

Top

3 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
இந்தப் பாடல் மற்ற ஆண்களின் குறைகளைக் கண்டு வருந்தி தியாகராஜர் பாடுவதாக நீங்கள் பொருள் கொண்டு ’ மக்களுக்கு உண்மையாக ஏன் தோன்றாதோ?’ என்று கொடுத்துள்ளீர். எனக்கு அவர் தன் குறைகளைப் பற்றியே பாடுவதாகத் தோன்றுகிறது.
-சரணம் 1 ல் ’தனகீயவது4லனு’ - தனக்கு இந்த அவதிகளென உணர்ந்து
- சரணம் 2 ல் ’ தன மதி3னி தானெரிகி3’- ‘தனது மனதில் தானறிந்து’
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

தியாகராஜரின் பல பாடல்களில், தன்னையே இழிவுசெய்துகொண்டு பாடியுள்ளார். ஆனால், அந்த கீர்ததனைகளெல்லாம், தனது மனதிற்குச் சொல்வதாகவோ, அல்லது தன்னை நேரடியாகவே நொந்துகொள்வதாகவோ அமைந்துள்ளன.

இந்தப் பாடலில், நீங்கள் கூறியபடி அவர் தன்னையும் சேர்த்தே பாடுவதாகக் கொள்ளலாம். 'தன', 'தனகு' என்ற சொற்கள் மூன்றுவிடங்களிலும் (தன்மை, முன்னிலை, படர்க்கை) பயன்படும். எனவே அதனைமட்டும் குறிப்பிட்டு, இப்பாடல் தன்னை மட்டும் குறைகூறிப் பாடுவதாகப் பொருள் கொள்வது கடினம்.

வணக்கம்,
கோவிந்தன்.

Unknown said...

Jai Shri ram