Monday, December 1, 2008

நன்னு விடி3சி - ராகம் ரீதி கௌ3ள - Nannu Vidichi - Raga Reeti Gaula - Prahlaada Bhakti Vijayam

பல்லவி
நன்னு விடி3சி கத3லகுரா ராமய்ய வத3லகுரா
அனுபல்லவி
நின்னு பா3ஸியர நிமிஷமோர்வனுரா (ந)

சரணம்
1சரணம் 1
தரமு கானியெண்ட3 வேள கல்ப
தரு நீட3 தொ3ரிகி3னட்லாயெனீ வேள (ந)

1சரணம் 2
அப்3தி4லோ முனிகி3 ஸ்1வாஸமுனு பட்டி
2ஆணி முத்யமு கன்னட்லாயெ ஸ்ரீ ரமண (ந)

சரணம் 3
வஸுத4னு க2னனமு சேஸி த4
பா4ண்ட3மப்3பி3ன ரீதி கனுகொண்டி டா3ஸி (ந)

3சரணம் 4
வட3லு தகி3லியுன்ன வேள கொ3ப்ப
வட3-க3ண்ட்3லு குரிஸினட்லாயெனீ வேள (ந)

4சரணம் 5
பா3கு33 நன்னேலுகொம்மு5யில
த்யாக3ராஜ நுத தனுவு நீ ஸொம்மு (ந)


பொருள் - சுருக்கம்
இராமய்யா! மாரமணா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
என்னைவிட்டு நகராதீருமய்யா; இவ்வேளை கைவிடாதீருமய்யா
உம்மைப் பிரிந்து அரை நிமிடமும் பொறுக்கவியலேனய்யா;

தாளவியலாத வெய்யில் வேளையில், வானோர் தரு நீழல் கிடைத்தல் போன்று,
மூச்சுப்பிடித்து, கடலில் மூழ்கி, ஆணிமுத்து கண்டதுபோன்று,
வறட்சியான வேளையில், மிக்கு ஆலாங்கட்டி (மழை) பெய்ததுபோன்று உணர்கின்றேன்

நிலத்தைத் தோண்டி, பொற்றாழி அடைந்ததுபோன்று, (உம்மை) கண்டுகொண்டேன்;
என்னை அண்டிவந்தபின், என்னைவிட்டு நகராதீருமய்யா, கைவிடாதீருமய்யா
நன்கு என்னையாளுமய்யா; எனதுடல் உமதுடைமையய்யா;


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நன்னு/ விடி3சி/ கத3லகுரா/ ராமய்ய/ வத3லகுரா/
என்னை/ விட்டு/ நகராதீரும்/ இராமய்யா/ கைவிடாதீரும்/


அனுபல்லவி
நின்னு/ பா3ஸி/-அர/ நிமிஷமு/-ஓர்வனுரா/ (ந)
உம்மை/ பிரிந்து/ அரை/ நிமிடமும்/ பொறுக்கவியலேனய்யா/


சரணம்
சரணம் 1
தரமு/ கானி/-எண்ட3/ வேள/ கல்ப/
தாள/ இயலாத/ வெய்யில்/ வேளையில்/, வானோர் (கற்ப)/

தரு/ நீட3/ தொ3ரிகி3னட்லு-ஆயெனு/-ஈ/ வேள/ (ந)
தரு/ நீழல்/ கிடைத்தல் போன்றானது/ இந்த/ வேளை/ என்னைவிட்டு...

சரணம் 2
அப்3தி4லோ/ முனிகி3/ ஸ்1வாஸமுனு/ பட்டி/
கடலில்/ மூழ்கி/ மூச்சு/ பிடித்து/

ஆணி/ முத்யமு/ கன்னட்லு-ஆயெ/ ஸ்ரீ/ ரமண/ (ந)
ஆணி/ முத்து/ கண்டது போன்றானது/, மா/ ரமணா/

சரணம் 3
வஸுத4னு/ க2னனமு சேஸி/ த4ன/
நிலத்தை/ தோண்டி/ பொன் (செல்வ)/

பா4ண்ட3மு/-அப்3பி3ன/ ரீதி/ கனுகொண்டி/ டா3ஸி/ (ந)
தாழி/ அடைந்தது/ போன்று/ (உம்மை) கண்டுகொண்டேன்/ அண்டி/ (பின்) என்னைவிட்டு..

சரணம் 4
வட3லு தகி3லியுன்ன/ வேள/ கொ3ப்ப/
வறட்சியான/ வேளையில்/ மிக்கு/

வட3-க3ண்ட்3லு/ குரிஸினட்லு-ஆயெனு/-ஈ/ வேள/ (ந)
ஆலாங்கட்டி (மழை)/ பெய்தது போன்றானது/ இந்த/ வேளை/ என்னைவிட்டு..

சரணம் 5
பா3கு33/ நன்னு/-ஏலுகொம்மு/-இல/
நன்கு/ என்னை/ ஆளுமய்யா/ இங்கு/

த்யாக3ராஜ/ நுத/ தனுவு/ நீ/ ஸொம்மு/ (ந)
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ உடல்/ உமது/ உடைமை/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - சரணங்கள் - 1 - 2 - இச்சரணங்கள் சில புத்தகங்களில் வரிசை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
3 - சரணம் 4 - இச்சரணம் ஒரு புத்தகத்தில் தான் கொடுக்கப்பட்டுள்ளது. அங்ஙனமாயினும், இச்சரணம் 3-வதாக வரவேண்டும் - 4-வதாக அல்ல.
4 - சரணம் 5 - சில புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள மாற்று சரணம் - 'பா3கு33 நன்னேலுகோரா வர த்யாக3ராஜ நுத ஈ தனுவு நீதே3ரா (ந)'

மேற்கோள்கள்

விளக்கம்
இப்பாடல் 'ப்ரஹ்லாத34க்தி விஜயம்' எனும் நாட்டிய-நாடகத்தில் வருகின்றது - இப்பாடல் பிரகலாதன் இறைவனை நோக்கி பாடுவதாக.
2 - ஆணி முத்யமு - ஆணி முத்து
5 - இல - இச்சொல் 'ஏலுகொம்மு-இல' என்றோ 'இல த்யாக3ராஜ நுத' என்றோ அல்லது பல்லவியுடன் இணைத்தோ பொருள் கொள்ளலாம்

Top



Updated on 01 Dec 2008

1 comment:

radhakrishnan said...

அருமையான பணி. பாட்டைக் கேட்டுக்கொண்டே அர்த்த்த்தையும் அறிந்துகொண்டு அருமையான பாடலைச் சுவைக்க என்ன பேறு பெற்றேனோ? உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது? மிக்க நன்றி ஜயா. தொடரட்டும் உங்கள் பணி.
ராதாகிருஷ்ணன்
மதுரை