பல்லவி
1மித்ரி பா4க்3யமே பா4க்3யமு மனஸா 2ஸௌ(மித்ரி)
அனுபல்லவி
சித்ர ரத்ன-மய 3ஸே1ஷ தல்பமந்து3
ஸீதா பதினி 4உனிசியூசு ஸௌ(மித்ரி)
சரணம்
பா3கு3க3 விந்த ராக3முலனாலாபமு
ஸேயக3 மேனு புலகரிஞ்சக3
த்யாக3ராஜ நுதுட3கு3 ஸ்ரீ 5ராமுனி
தத்வார்த2முனு பொக3டி3 ஜூசு ஸௌ(மித்ரி)
பொருள் - சுருக்கம்
ஏ மனமே!
சிறந்த, இரத்தினங்களிழைத்த, அரவணையில், சீதை மணாளனையிருத்தி ஊசலாட்டும் இலக்குவனுடைய பேறே பேறாகும்.
நன்கு, புதுமையான ராகங்களில் ஆலாபனை செய்ய, மேனி புல்லரிக்க, தியாகராசனால் போற்றப்பெற்றோனாகிய, இராமனின் மெய்ப்பொருளினை புகழ்ந்து பார்க்கும் இலக்குவனுடைய பேறே பேறாகும்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மித்ரி/ பா4க்3யமே/ பா4க்3யமு/ மனஸா/ ஸௌ(மித்ரி)
இலக்குவனுடைய/ பேறே/ பேறாகும்/ மனமே/
அனுபல்லவி
சித்ர/ ரத்ன-மய/ ஸே1ஷ/ தல்பமு-அந்து3/
சிறந்த/ இரத்தினங்களிழைத்த/ அரவு/ அணையில்/
ஸீதா/ பதினி/ உனிசி/-ஊசு/ ஸௌ(மித்ரி)
சீதை/ மணாளனை/ இருத்தி/ ஊசலாட்டும்/ இலக்குவனுடைய..
சரணம்
பா3கு3க3/ விந்த/ ராக3முலனு/-ஆலாபமு/
நன்கு/ புதுமையான/ ராகங்களில்/ ஆலாபனை/
ஸேயக3/ மேனு/ புலகரிஞ்சக3/
செய்ய/ மேனி/ புல்லரிக்க/
த்யாக3ராஜ/ நுதுட3கு3/ ஸ்ரீ ராமுனி/
தியாகராசனால்/ போற்றப்பெற்றோனாகிய/ ஸ்ரீ ராமனின்/
தத்வ/-அர்த2முனு/ பொக3டி3/ ஜூசு/ ஸௌ(மித்ரி)
மெய்/ பொருளினை/ புகழ்ந்து/ பார்க்கும்/ இலக்குவனுடைய..
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மித்ரி பா4க்3யமே பா4க்3யமு மனஸா - மித்ரி பா4க்3யமே பா4க்3யமு ஸௌமித்ரி பா4க்3யமே பா4க்3யமு
4 - உனிசி - உனிகி : 'உனிசி' - பொருந்தும்
மேற்கோள்கள்
2 - ஸௌமித்ரி - துளசிதாஸர், சுமித்ராவைக் குறித்து விவரித்துள்ளபடி இலக்குவன் தனது தாயிடமிருந்து அவ்வுயர் பண்புகளைப் பெற்றான் எனத் தெரிகிறது
Top
விளக்கம்
1 - மித்ரி - இலக்குவனின் தாயார் 'சுமித்ரா'; அதனால் அவனுக்கு 'சௌமித்ரி' என்று பெயர். ஆனால் பொதுவாக 'சு', 'சௌ' ஆகிய அடைமொழிகளை நீக்கினால் 'மித்ரா', 'மித்ரி' யும் மிஞ்சும்; அதன்படி இலக்குவனை 'மித்ரி' எனலாம் எனத் தோன்றுகிறது
3 - ஸே1ஷ - இலக்குவன் சேடனின் அவதாரம். அதனால், அனுபல்லவியில் கூறியபடி நோக்கினால், இலக்குவன், தன்மீது இறைவனை இருத்தி தான் தாலாட்டுவதாகக் கொள்ளலாம். பரம்பொருளுக்கு 'சேஷி' என்றும் மற்ற எல்லாவும் 'சேஷ' என்றும் அழைக்கப்படும். இராமனை, தியாகராஜர் பரம்பொருளாகக் கொண்டாடுவதனால், அந்த சேஷி-க்கும் சேஷனாகி்ய தனக்கும் உள்ள தொடர்பினையும் குறித்து வியப்பதாகவும் கொள்ளலாம்.
5 - ராமுனி தத்வார்த2முனு பொக3டி3 - சேஷி - சேஷன்
ஆலாபனை செய்ய - தியாகராசரைக் குறிக்கும்
மேனி புல்லரிக்க - இலக்குவனைக் குறிக்கும்
Top
No comments:
Post a Comment