Tuesday, November 18, 2008

பேரிடி3 நினு - ராகம் க2ரஹர ப்ரிய - Peridi Ninu - Raga Kharahara Priya

பல்லவி
1பேரிடி3 நினு பெஞ்சின வாரெவரே

அனுபல்லவி
வாரினி ஜூபவே ஸ்ரீ ராமய்ய

சரணம்
சரணம் 1
2ஸார ஸாரதர தாரக நாமமுனு (பே)

சரணம் 2
3ஸர்வ மதமுலகு ஸம்மதமைன (பே)

சரணம் 3
கோ4ர பாதகமுல கொப்புனயணசு (பே)

சரணம் 4
த்யாக3ராஜு ஸதா3 பா3கு334ஜியிஞ்சு (பே)



பொருள் - சுருக்கம்
இராமய்யா! பெயரிட்டுன்னை வளர்த்தவர் யாரே? அவர்தம்மைக் காட்டுவாய்.

சாரமான, மேன்மையான, பிறவிக் கடலைக் கடத்துவிப்பதான,
அனைத்து மதங்களுக்கும் சம்மதமான,
கொடுமையான பாதகங்களையும் (உனது) வில் நுனியினால் களையும்,
தியாகராசன் எப்போதும் நன்கு பசனை செய்யும்,
பெயரிட்டுன்னை வளர்த்தவர் யாரே?


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பேரு/-இடி3/ நினு/ பெஞ்சின வாரு/-எவரே/
பெயர்/ இட்டு/ உன்னை/ வளர்த்தவர்/ யாரே/



அனுபல்லவி
வாரினி/ ஜூபவே/ ஸ்ரீ ராமய்ய/
அவர்தம்மை/ காட்டுவாய்/ ஸ்ரீ ராமய்யா/



சரணம்
சரணம் 1
ஸார/ ஸாரதர/ தாரக/ நாமமுனு/ (பே)
சாரமானதும்/ மேன்மையானதும்/ (பிறவிக் கடலைக்) கடத்துவிப்பதான/ நாமத்தினை/ பெயரிட்டு..


சரணம் 2
ஸர்வ/ மதமுலகு/ ஸம்மதமைன/ (பே)
அனைத்து/ மதங்களுக்கும்/ சம்மதமான/ பெயரிட்டு..


சரணம் 3
கோ4ர/ பாதகமுல/ கொப்புன/-அணசு/ (பே)
கொடுமையான/ பாதகங்களையும்/ (உனது) வில் நுனியினால்/ அடக்கும்/ பெயரிட்டு..


சரணம் 4
த்யாக3ராஜு/ ஸதா3/ பா3கு33/ ப4ஜியிஞ்சு/ (பே)
தியாகராஜன்/ எப்போதும்/ நன்கு/ பஜனை செய்யும்/ பெயரிட்டு..


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)


மேற்கோள்கள்
1 - பேரிடி3 நினு - பெயரிட்டுன்னை - வசிட்டரால் இடப்பட்ட பெயர்.
2 - ஸார ஸாரதர தாரக நாமமுனு - 'ராம' எனும் நாமம் பிரணவத்திற்கு சமானமான, பிறவிக்கடலைத் தாண்டுவிக்கும் 'தாரக நாமம்' எனப்படும். இதுபற்றி காஞ்சி மாமுனிவரின் சொற்பொழிவினை நோக்கவும்.
3 - ஸர்வ மத - அனைத்து மதங்கள் - ஆறுவிதமான தெய்வ வழிபாட்டு முறைகள் - சிவன், விஷ்ணு, சக்தி, கணபதி, முருகன், சூரியன்
Top
விளக்கம்

No comments: