பல்லவி
ஜோ ஜோ ராம ஆனந்த3 க4ன
சரணம்
சரணம் 1
ஜோ ஜோ த3ஸ1ரத2 பா3ல ராம
ஜோ ஜோ பூ4ஜா லோல ராம (ஜோ)
சரணம் 2
ஜோ ஜோ ரகு4 குல திலக ராம
ஜோ ஜோ குடில தராலக ராம (ஜோ)
சரணம் 3
ஜோ ஜோ நிர்கு3ண ரூப ராம
ஜோ ஜோ ஸு-கு3ண கலாப ராம (ஜோ)
சரணம் 4
ஜோ ஜோ ரவி ஸ1ஸி1 நயன ராம
ஜோ ஜோ ப2ணி வர ஸ1யன ராம (ஜோ)
சரணம் 5
ஜோ ஜோ ம்ரு2து3 தர பா4ஷ ராம
ஜோ ஜோ மஞ்ஜுள வேஷ ராம (ஜோ)
சரணம் 6
ஜோ ஜோ த்யாக3ராஜார்சித ராம
ஜோ ஜோ 1ப4க்த ஸமாஜ ராம (ஜோ)
பொருள் - சுருக்கம்
தாலேலோ, இராமா! ஆனந்த வடிவோனே!
தாலேலோ, தசரதன் மைந்தா, இராமா
தாலேலோ, புவி மகள் காதலனே, இராமா!
தாலேலோ, இரகு குலத் திலகமே, இராமா!
தாலேலோ, சுருள் முடியோனே, இராமா!
தாலேலோ, குணங்களற்ற உருவத்தோனே, இராமா!
தாலேலோ, நற்குணக் குவியலே, இராமா!
தாலேலோ, பரிதி மதி கண்களோனே, இராமா!
தாலேலோ, உயர் அரவணையோனே, இராமா!
தாலேலோ, மென்சொல்லோனே, இராமா!
தாலேலோ, இனிய வேடத்தோனே, இராமா!
தாலேலோ, தியாகராசனால் வழிபடப்பட்டோனே, இராமா!
தாலேலோ, தொண்டர் சமூகத்துறைவோனே, இராமா!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஜோ ஜோ/ ராம/ ஆனந்த3/ க4ன/
தாலேலோ/ இராமா/ ஆனந்த/ வடிவோனே/
சரணம்
சரணம் 1
ஜோ ஜோ/ த3ஸ1ரத2/ பா3ல/ ராம/
தாலேலோ/ தசரதன்/ மைந்தா/ இராமா/
ஜோ ஜோ/ பூ4ஜா/ லோல/ ராம/ (ஜோ)
தாலேலோ/ புவி மகள்/ காதலனே/ இராமா/
சரணம் 2
ஜோ ஜோ/ ரகு4/ குல/ திலக/ ராம/
தாலேலோ/ இரகு/ குல/ திலகமே/ இராமா/
ஜோ ஜோ/ குடில தர/-அலக/ ராம/ (ஜோ)
தாலேலோ/ சுருள்/ முடியோனே/ இராமா/
சரணம் 3
ஜோ ஜோ/ நிர்கு3ண/ ரூப/ ராம/
தாலேலோ/ குணங்களற்ற/ உருவத்தோனே/ இராமா/
ஜோ ஜோ/ ஸு-கு3ண/ கலாப/ ராம/ (ஜோ)
தாலேலோ/ நற்குண/ குவியலே/ இராமா/
சரணம் 4
ஜோ ஜோ/ ரவி/ ஸ1ஸி1/ நயன/ ராம/
தாலேலோ/ பரிதி/ மதி/ கண்களோனே/ இராமா/
ஜோ ஜோ/ ப2ணி/ வர/ ஸ1யன/ ராம/ (ஜோ)
தாலேலோ/ உயர்/ அரவணையோனே/ இராமா/
சரணம் 5
ஜோ ஜோ/ ம்ரு2து3/ தர/ பா4ஷ/ ராம/
தாலேலோ/ மெல்லிய/ சொல்லோனே/ இராமா/
ஜோ ஜோ/ மஞ்ஜுள/ வேஷ/ ராம/ (ஜோ)
தாலேலோ/ இனிய/ வேடத்தோனே/ இராமா/
சரணம் 6
ஜோ ஜோ/ த்யாக3ராஜ/-அர்சித/ ராம/
தாலேலோ/ தியாகராசனால்/ வழிபடப்பட்டோனே/ இராமா/
ஜோ ஜோ/ ப4க்த/ ஸமாஜ/ ராம/ (ஜோ)
தாலேலோ/ தொண்டர்/ சமூகத்துறைவோனே/ இராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - ப4க்த ஸமாஜ - தொண்டர் சமூகத்துறைவோனே - கீழ்க்கண்ட பிரபலமான பஜனை ஸ்லோகத்தினை நோக்கவும் -
நாஹம் வஸாமி வைகுண்டே2 ந யோகி3 ஹ்ரு2த3யே ரவௌ ||
மத்3ப4க்தா: யத்ர கா3யந்தி தத்ர திஷ்டா2மி நாரத3 ||
இறைவன் பகர்ந்தது -
ஓ நாரதா! நான் வைகுண்டத்திலோ, யோகிகளின் இதயங்களிலோ வசிப்பதில்லை;
எனது தொண்டர்கள் எவ்விடத்தில் பாடுகின்றனரோ அங்கு இருக்கின்றேன்.
Top
விளக்கம்
No comments:
Post a Comment