Sunday, November 23, 2008

சேர ராவதே3மி - ராகம் ரீதி கௌ3ள - Tyagaraja Kriti - Chera Raavademi - Raga Reeti Gaula

பல்லவி
1சேர ராவதே3மிரா ராமய்ய

அனுபல்லவி
மேர காது3ரா இக மஹா மேரு தீ4ர ஸ்ரீ கர (சே)

சரணம்
2தல்லி தண்ட்3ரி லேனி 3பா3 தன 4நாது2 கோரு ரீதி
பலுமாரு வேடு3கொண்டே பாலிஞ்ச ராதா3
5வலசுசு நேனு நீது3 வத3னாரவிந்த3முனு
தலசி கரக33 ஜூசி த்யாக3ராஜ ஸன்னுத (சே)


பொருள் - சுருக்கம்
இராமய்யா! மகா மேரு (நிகர்) தீரனே! சீரருள்வோனே! தியாகராசனால் சிறக்க போற்றப் பெற்றோனே!
தாய் தந்தையற்ற இளம்பெண், தனது கணவனைக் கோருதல் போன்று, பன்முறை வேண்டிக் கொண்டாலும், பேணலாகாதா?
காதலுடன், நானுனது வதனத் தாமரையை நினைந்து உருகியிருக்கக் கண்டு, இன்னமும்
(என்னைச்) சேர வாராததேனய்யா? முறையன்றய்யா.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
சேர/ ராவு/-அதே3மிரா/ ராமய்ய/
சேர/ வாராதது/ ஏனய்யா/ இராமய்யா/


அனுபல்லவி
மேர/ காது3ரா/ இக/ மஹா/ மேரு/ தீ4ர/ ஸ்ரீ/ கர/ (சே)
முறை/ அன்றய்யா/ இன்னமும்/ மகா/ மேரு/ தீரனே/ சீ்ர்/ அருள்வோனே/ சேர..


சரணம்
தல்லி/ தண்ட்3ரி/ லேனி/ பா3ல/ தன/ நாது2/ கோரு/ ரீதி/
தாய்/ தந்தை/ அற்ற/ இளம்பெண்/ தனது/ கணவனை/ கோருதல்/ போன்று/

பலுமாரு/ வேடு3கொண்டே/ பாலிஞ்ச ராதா3/
பன்முறை/ வேண்டிக் கொண்டாலும்/ பேணலாகாதா/

வலசுசு/ நேனு/ நீது3/ வத3ன/-அரவிந்த3முனு/
காதலுடன்/ நான்/ உனது/ வதன/ தாமரையை/

தலசி/ கரக33/ ஜூசி/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (சே)
நினைந்து/ உருகியிருக்க/ கண்டும்/ தியாகராசனால்/ சிறக்க போற்றப் பெற்றோனே/ சேர..


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - நாது2 - நாது4 : தெலுங்கு அகராதியின்படி இரண்டு சொற்களுமே சரியாகும்.

மேற்கோள்கள்
3 - பா3 - 16-வயது பெண் - இங்கு மணமாகிய இளம்பெண் என பொருள்.

Top
விளக்கம்
1 - சேர ராவு - சேரயேன் வாராயோ - இப்பாடல் 'காந்தாஸக்தி' எனப்படும் - சூடிக்கொடுத்த நாச்சியார் - ஆண்டாள் போன்று - இறைவனை கணவனாகக் கொண்ட பக்தி நெறி முறையில் அமைந்துள்ளது.
2- தல்லி தண்ட்3ரி லேனி - கணவனுடன் பிணக்குண்டானால், மனைவி 'நான் பிறந்த வீட்டுக்குப் போகின்றேன்' என மிரட்டுவதுண்டு. ஆனால் தாய் தந்தையரும் இல்லாமற்போனால் அவளுக்கு கணவனைத் தவிர வேறு போக்கேது? அப்படிப்பட்ட ஆதரவற்ற நிலையை யுற்று இறைவனிடம் சரணடையும் தொண்டனின் உள்ளப் பாங்கினை தியாகராஜர் சித்தரிக்கின்றார். உலக ஆசைகள் யாவுமே ஒரு தொண்டனை இறைவனிடம் முழுமையாக புகலடைவதைத் தடுக்கும் ஆதரவுகளாக அமைந்துள்ளன. அத்தகைய ஆதரவுகள் அற்றபின்னரே இறைவனை முழுமனதுடன் நெருங்கவியலும். எத்தனை சோதனை வந்தாலும் இறைவனைக் குறை சொல்லாது நிறை மனத்துடன் இறைவனிடம் கொள்ளும் பற்றினை வைணவர்கள் சரணாகதி என்றும் ப்ரபத்தி என்றும் கூறுவர். தன்னுடைய கற்பினை நிரூபிக்க நெருப்பினில் புகநேர்ந்த பின்பும், மறுகணமே ஏதுமே நிகழாதது போன்று ராமனுடன் புஷ்பக விமானத்தினில் அயோத்திக்கு விரைந்த சீதை இதற்கோர் உதாரணம்.
5 - வலசுசு - காதலுடன் - பக்தி சாத்திரத்தில் 'அநுராகம்' எனப்புடும் பெருங்காதலினைக் குறிக்கும். தியாகராஜரின் 'அநுராகமு லேனி' என்று தொடங்கும் 'ஸரஸ்வதி' ராகப் பாடலையும் நோக்கவும். இப்படிப்பட்ட அநுராக பக்தி பற்றிய முழு விவரங்களை நாரத பக்தி சூத்திரம் எனும் நூலில் நோக்கவும்.
Top



Updated on 23 Nov 2008

No comments: