பல்லவி
1விடெ3மு ஸேயவே நன்னு 2விட3னாட3கவே
அனுபல்லவி
புட3மி தனய சேதி மஞ்சி
3மடு3புலனுசு தலசி தலசி (வி)
சரணம்
ராஜ மான்யுடௌ3 ஸௌமித்ரி ரத்ன தம்ம படி3க3 பட்டி
தேஜரில்ல நிலிசினாடு3 தே3வ தே3வ
ஜாஜி காயலு ஏலகுலு ஜாபத்ரி 4வக்கலாகுலு
ராஜ ராஜ வர த்யாக3ராஜு ப்ரேமதோனொஸங்கே3 (வி)
பொருள் - சுருக்கம்
வானோர்க்கிறைவா! ஒப்பற்ற பேரரசனே!
தியாகராசன் காதலுடனளிக்கும், சாதிக்காய், ஏலக்காய், சாதிப்பூ, பாக்கு, வெற்றிலை வீடிகையினை, புவிமகள் கைகளின் சிறந்த (வெற்றிலை) மடிப்புகளென எண்ணி, ஏற்றுக்கொள்வாய்;
அரசர்களால் மதிக்கப்பெற்ற இலக்குவன், இரத்தின வெற்றிலைப் படிகமேந்தி, ஒளிர நின்றுள்ளான்;
என்னை விட்டுவிடாதே;
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
விடெ3மு/ ஸேயவே/ நன்னு/ விட3-ஆட3கவே/
வீடிகை/ ஏற்றுக்கொள்வாய்/ என்னை/ விட்டுவிடாதே/
அனுபல்லவி
புட3மி/ தனய/ சேதி/ மஞ்சி/
புவி/ மகள்/ கைகளின்/ சிறந்த/
மடு3புலு/-அனுசு/ தலசி/ தலசி/ (வி)
மடிப்பு்கள்/ என/ எண்ணி/ யெண்ணி/ வீடிகை..
சரணம்
ராஜ/ மான்யுடௌ3/ ஸௌமித்ரி/ ரத்ன/ தம்ம/ படி3க3/ பட்டி/
அரசர்களால்/ மதிக்கப்பெற்ற/ இலக்குவன்/ இரத்தின/ வெற்றிலை/ படிகம்/ ஏந்தி/
தேஜரில்ல/ நிலிசினாடு3/ தே3வ/ தே3வ/
ஒளிர/ நின்றுள்ளான்/ வானோர்க்கு/ இறைவா/
ஜாஜி காயலு/ ஏலகுலு/ ஜாபத்ரி/ வக்கலு/-ஆகுலு/
சாதிக்காய்/ ஏலக்காய்/ சாதிப்பூ/ பாக்கு/ வெற்றிலை/
ராஜ/ ராஜ/ வர/ த்யாக3ராஜு/ ப்ரேமதோனு/-ஒஸங்கே3/ (வி)
அரசரர்க்கு/ அரசே/ தலைசிறந்த/ தியாகராசன்/ காதலுடன்/ அளிக்கும்/ வீடிகை..
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - விடெ3மு - வீடிகை - தாம்பூலம்
2 - விட3னாட3கவே - விட்டுவிடாதே - விருந்தாளிகளுக்கு உணவுக்குப் பின் தாம்பூலம் அளிக்கப்படும். அதன்பின்னர் விருந்தாளிகள் விடைபெறுவர். தியாகராஜர் இறைவனை வேண்டுவது என்னவென்றால் நான் உனக்கு தாம்பூலம் அளித்தேனென்று நீ விருந்தாளி போன்று என்னை விட்டுச் சென்றுவிடாதே என்று.
3 - மடு3புலு - வெற்றிலை மடிப்புகள் - ஒவ்வொரு வெற்றிலையாக சுண்ணாம்பு தடவி, நீளவாட்டில் இரண்டாக மடித்து, நடு நரம்பைக் களைந்து, அழகாக மடித்து, கைவிரலிடுக்குகளில் வைத்துக்கொண்டு, மனைவி கணவனுக்கு அளிப்பது நம் நாட்டு வழக்கம்.
Top
4 - வக்கலாகுலு - தெலுங்கில், இச்சொல்லுக்கு 'வெற்றிலை'யென்றோ 'வெற்றிலையும் பாக்கும்' என்றோ பொருள் கொள்ளலாம். தமிழ் நாட்டில் வெற்றிலையைத் தனியாக கடைகளில் கூட தரமாட்டார்கள். வெற்றிலை என்று கேட்டால், அத்துடன் சிறிது சீவல் வைத்தே தருவார்கள். அதுபோன்றே சுண்ணாம்பும் தனியாகக் கொடுக்கமாட்டார்கள். வெற்றிலையில் தடவியே கொடுப்பார்கள்.
வெற்றி்லைக்கு 'வெற்றிலை' என்று ஏன் பெயர் வந்தது? காஞ்சி மாமுனிவரின் விளக்கம் என்னவென்றால், மற்ற எல்லா செடிகளும் இலைக்குப்பின் பூ, காய், பழம், என்று வளரும். ஆனால் வெற்றிலையோ இலையோடு நின்றுவிடுகின்றது. அதனால் அதற்கு 'வெற்றிலை'- வெற்று இலை என்று பெயர். காஞ்சி மாமுனிவரின் உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு நோக்கவும்.
புவிமகள் - சீதை
புவிமகள் கைகளின் - சீதையினால் தயாரிக்கப்பெற்ற
சாதிப்பூ - சாதிக்காய்ப்பூ
Top
No comments:
Post a Comment