Saturday, November 15, 2008

நட3சி நட3சி - ராகம் க2ரஹர ப்ரிய - Nadachi Nadachi - Raga Kharahara Priya

பல்லவி
நட3சி நட3சி ஜூசேரயோத்4யா
நக3ரமு கானரே

அனுபல்லவி
புட3மி ஸுத ஸஹாயுடை3 செலங்கே3
1பூர்ணுனி 2ஆத்மாராமுனி கூடி3யாட3 (ந)

சரணம்
3அட்டே 4கன்னுலு கூர்சி தெரசி ஸூத்ரமு
பட்டி வெலிகி 5வேஷ தா4ருலை
6புட்டு சாவு லேனி தாவு தெலியக
பொக3டெ33ரு 7த்யாக3ராஜ வினுதுனி (ந)


பொருள் - சுருக்கம்
புவி மகள் உடனுறையாக விளங்கும் பூரணனை, ஆன்மாராமனை, தியாகராசனால் போற்றப்பெற்றோனை கூடியிருப்பதற்கு நடந்து நடந்து நோக்கினர் அயோத்தி நகரத்திற்கு, (ஆயின்) காணரே!

அப்படியே, கண்களைக் கோர்த்து, (பகுதி) திறந்து, செபமாலை பற்றி, வெளியில் வேடமணிந்து, பிறப்பு, இறப்பற்ற இடத்தினை யறியாது, புகழ்ந்தனர்.

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நட3சி/ நட3சி/ ஜூசேரு/-அயோத்4யா/
நடந்து/ நடந்து/ நோக்கினர்/ அயோத்தி/

நக3ரமு/ கானரே/
நகரத்திற்கு/ (ஆயின்) காணரே/

அனுபல்லவி
புட3மி/ ஸுத/ ஸஹாயுடை3/ செலங்கே3/
புவி/ மகள்/ உடனுறையாக/ விளங்கும்/

பூர்ணுனி/ ஆத்மாராமுனி/ கூடி3-ஆட3/ (ந)
பூரணனை/ ஆன்மாராமனை/ கூடியிருப்பதற்கு/ நடந்து..

சரணம்
அட்டே/ கன்னுலு/ கூர்சி/ தெரசி/ ஸூத்ரமு/
அப்படியே/ கண்களை/ கோர்த்து/ (பகுதி) திறந்து/ செபமாலை/

பட்டி/ வெலிகி/ வேஷ/ தா4ருலை/
பற்றி/ வெளியில்/ வேடம்/ அணிவோராகி/

புட்டு/ சாவு/ லேனி/ தாவு/ தெலியக/
பிறப்பு/ இறப்பு/ அற்ற/ இடத்தினை/ யறியாது/

பொக3டெ33ரு/ த்யாக3ராஜ/ வினுதுனி/ (ந)
புகழ்ந்தனர்/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனை/ நடந்து..

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - பூர்ணுனி - பூரணன் - பரம்பொருள் : 'ஓம் பூர்ணமத:' என்று தொடங்கும் ஈஸா1வஸ்ய உபநிடதச் செய்யுள் நோக்கவும்
2 - ஆத்மாராமுனி - ஆன்மாராமன் - சீவான்மாவாக உள்ளொளிரும் பரமான்மா - 'ஆத்மாராம' என்ற சொல்லுக்கு் 'தன்னுள் களித்திருப்பவன்' என்று பொருளானாலும், இங்கு தியாகராஜர், 'அயோத்தி' நகரைக் குறிப்பிட்டமையால், இதனை 'சீவான்மாவாக விளங்கும் ராமன்' என பொருள் கொள்ளவேண்டும்
Top
3 - அட்டே - அப்படியே - உடலசைவின்றி - கல் மாதிரி
4 - கன்னுலு கூர்சி தெரசி - கண்களைக் கோர்த்து பகுதி திறந்து - மனதை ஒருமைப் படுத்தும் தியான முறை
5 - வேஷ தா4ருலை - உள்ளொளிரும் இறைவனை உணராது யோகி வேடமிடுவோர்
6 - புட்டு சாவு லேனி தாவு - பிறப்பு, இறப்பற்ற இடம் - சீவான்மாவாக ஒளிரும் பரமான்மாவினை உணர்தல்
7 - த்யாக3ராஜ வினுதுனி - இச்சொல்லை 'பொக3டெ33ரு' உடன் இணைக்கலாம் அல்லது பல்லவியுடன் இணைக்கலாம். ஆனால் பல்லவியுடன் இணைத்தலே சரியெனத் தோன்றுகின்றது.
புவி மகள் - சீதை
Top

2 comments:

Govindaswamy said...

அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
’ நடந்து நோக்கினர் அயோத்தி நகரத்திற்கு’ – அயோத்தி நகரினை என்பதல்லவா பொருள்?
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

தியாகராஜர் குறிப்பிடுவது, 'ராமனைக் காண' என்று - 'அயோத்தியா நகரினைக் காண'வல்ல. எனவே, (ராமனைக் காண) 'அயோத்தியா நகரத்திற்கு' என்பதே பொருந்தும் என நான் கருதுகின்றேன்.

வணக்கம்
கோவிந்தன்.