Thursday, November 13, 2008

சேதுலார ஸ்1ரு2ங்கா3ரமு - ராகம் க2ரஹர ப்ரிய - Chetulaara Srngaaramu - Raga Kharahara Priya

பல்லவி
சேதுலார ஸ்1ரு2ங்கா3ரமு ஜேஸி ஜூதுனு ஸ்ரீ ராம

அனுபல்லவி
ஸேது ப3ந்த4ன ஸுர பதி
ஸரஸீருஹ ப4வாது3லு பொக33 நா (சே)

சரணம்
சரணம் 1
மெருகு33ங்கா3ரந்தெ3லு பெட்டி
மேடியௌ ஸரிக3 வல்வலு கட்டி
ஸுர தரு ஸுமமுல ஸிக3 நிண்ட3 ஜுட்டி
ஸுந்த3ரமகு3 மோமுன முத்3து3 பெட்டி (சே)

சரணம் 2
மொலனு குந்த3னபு க3ஜ்ஜெலு கூர்சி
முத்3து33 நுது3டனு திலகமு தீர்சி
அலகலபை 1ராவி ரேகயு ஜார்சி
அந்த3மைன நின்னுரமுன ஜேர்சி (சே)

சரணம் 3
ஆணி முத்யால கொண்டெ3 வேஸி
2ஹௌஸுக3 பரிமள க3ந்த4மு பூஸி
வாணி ஸுரடிசே விஸரக3 3வாஸி வாஸி-
யனுசு
த்யாக3ராஜ நுத4யன்னி ரோஸி (சே)



பொருள் - சுருக்கம்
இராமா! (கடலுக்கு) அணை கட்டியவனே!
தியாகராசனால் போற்றப்பெற்றோனே!

இந்திரன், மலரோன் முதலானோர் புகழ, எனது
கையார சிங்காரித்து, நோக்குவேன்;

துலங்கும் பொற் சிலம்புகள் அணிவித்து,
சிறந்த சரிகையாடைகள் கட்டி,
பாரிஜாத மலர்களை சிகை நிரம்பச் சுற்றி,
இடுப்பில், பசும்பொற் சதங்கைகள் கோர்த்து,
எழிலாக நெற்றியில் திலகமிட்டு,
சுருளல்கள்மீது, சுடிகை தொங்கவிட்டு,
ஆணிமுத்துக் கொண்டை வேய்ந்து,
சொகுசாக, பரிமள சந்தனம் பூசி,
அழகான முகத்தினில் முத்தமிட்டு,
அழகான உன்னை மார்போடணைத்து,
வாணி விசிறியினால் விசிற, 'நன்று நன்று' என,
(மற்று) அனைத்தும் துறந்து,
கையார சிங்காரித்து, நோக்குவேன்



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
சேதுலார/ ஸ்1ரு2ங்கா3ரமு ஜேஸி/ ஜூதுனு/ ஸ்ரீ ராம/
கையார/ சிங்காரித்து/ நோக்குவேன்/ ஸ்ரீ ராமா/



அனுபல்லவி
ஸேது/ ப3ந்த4ன/ ஸுர/ பதி/
(கடலுக்கு) அணை/ கட்டியவனே/ வானோர்/ தலைவன்/

ஸரஸீ-ருஹ/ ப4வ/-ஆது3லு/ பொக33/ நா/ (சே)
கமலத்தினில்/ உறைவோன்/ முதலானோர்/ புகழ/ எனது/ கையார..



சரணம்
சரணம் 1
மெருகு3/ ப3ங்கா3ரு/-அந்தெ3லு/ பெட்டி/
துலங்கும்/ பொற்/ சிலம்புகள்/ அணிவித்து/

மேடியௌ/ ஸரிக3/ வல்வலு/ கட்டி/
சிறந்த/ சரிகை/ ஆடைகள்/ கட்டி/

ஸுர/ தரு/ ஸுமமுல/ ஸிக3/ நிண்ட3/ ஜுட்டி/
வானோர்/ தரு/ மலர்களை/ சிகை/ நிரம்ப/ சுற்றி/

ஸுந்த3ரமகு3/ மோமுன/ முத்3து3/ பெட்டி/ (சே)
அழகான/ முகத்தினில்/ முத்தம்/ இட்டு/ கையார..



சரணம் 2
மொலனு/ குந்த3னபு/ க3ஜ்ஜெலு/ கூர்சி/
இடுப்பில்/ பசும்பொன்/ சதங்கைகள்/ கோர்த்து/

முத்3து33/ நுது3டனு/ திலகமு/ தீர்சி/
எழிலாக/ நெற்றியில்/ திலகம்/ இட்டு/

அலகலபை/ ராவி ரேகயு/ ஜார்சி/
சுருளல்கள்மீது/ சுடிகை/ தொங்கவிட்டு/

அந்த3மைன/ நின்னு/-உரமுன/ ஜேர்சி/ (சே)
அழகான/ உன்னை/ மார்போடு/ அணைத்து/ கையார..



சரணம் 3
ஆணி/ முத்யால/ கொண்டெ3/ வேஸி/
ஆணிமுத்து/ கொண்டை/ வேய்ந்து/

ஹௌஸுக3/ பரிமள/ க3ந்த4மு/ பூஸி/
சொகுசாக/ பரிமள/ சந்தனம்/ பூசி/

வாணி/ ஸுரடிசே/ விஸரக3/ வாஸி/ வாஸி/-
வாணி/ விசிறியினால்/ விசிற/ 'நன்று/ நன்று/'

அனுசு/ த்யாக3ராஜ/ நுத/-அன்னி/ ரோஸி/ (சே)
என/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/ அனைத்தும்/ துறந்து/ கையார..



குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - அன்னி ரோஸி - ஆனி ரோஸி : 'ஆனி ரோஸி' - சரியன்று

மேற்கோள்கள்
2 - ஹௌஸுக3 - இஃது அரபிய மொழிச்சொல். தெலுங்கில் இதற்கு 'சிங்காரமாக' என பொருள்
Top

விளக்கம்
இப்பாடல் கௌசலை குழந்தை ராமனை சீராட்டிப் பாடுவது போன்று அமைந்துள்ளது.

1 - ராவி ரேக - சுடிகை - நெற்றிச் சுட்டி

3 - வாஸி வாஸியனுசு - தான் உணரும் சுகத்தினை வெளிப்படுத்தும் சொற்கள்.

மலரோன் - பிரமன்

வானோர் தரு - பாரிஜாதம்

வாணி - கலைமகள்

Top



No comments: