பல்லவி
ராம நீ ஸமானமெவரு
ரகு4 வம்ஸோ1த்3தா4ரக
அனுபல்லவி
பா4மா 1மருவம்பு மொலக
ப4க்தியனு 2பஞ்ஜரபு சிலுக (ரா)
சரணம்
பலுகு பலுகுலகு தேனெ-
லொலுகு மாடலாடு3
ஸோத3ருலு க3ல ஹரி த்யாக3ராஜ
குல விபூ4ஷ ம்ரு2து3 ஸு-பா4ஷ (ரா)
பொருள் - சுருக்கம்
இராமா! இரகு குலத்தினை உயர்த்தியோனே! அரியே! தியாகராசன் குல அணிகலமே! மெல்லிய இன்சொல்லோனே!
(உனது) மனையாள் மருக்கொழுந்துத் துளிர்; (உனது) பக்தியெனும் கூண்டுக் கிளியவள்;
சொல்லுக்குச் சொல் தேனொழுக உரையாடும் உடன் பிறந்தோரையுடைத்துள்ளாய்;
உனக்கீடு யார்?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ நீ/ ஸமானமு/-எவரு/
இராமா/ உனக்கு/ ஈடு/ யார்/
ரகு4/ வம்ஸ1/-உத்3தா4ரக/
இரகு/ குலத்தினை/ உயர்த்தியோனே
அனுபல்லவி
பா4மா/ மருவம்பு/ மொலக/
மனையாள்/ மருக்கொழுந்து/ துளிர்/
ப4க்தி/-அனு/ பஞ்ஜரபு/ சிலுக/ (ரா)
பக்தி/ எனும்/ கூண்டு/ கிளி/
சரணம்
பலுகு/ பலுகுலகு/ தேனெ/
சொல்லுக்குச்/ சொல்/ தேன்/
ஒலுகு/ மாடலு/- ஆடு3/
ஒழுக/ உரையாடும்/
ஸோத3ருலு/ க3ல/ ஹரி/ த்யாக3ராஜ/
உடன் பிறந்தோரை/ யுடைத்த/ அரியே/ தியாகராசன்/
குல/ விபூ4ஷ/ ம்ரு2து3/ ஸு-பா4ஷ/ (ரா)
குல/ அணிகலமே/ மெல்லிய/ இன்சொல்லோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - மருவம்பு - மருக்கொழுந்து
2 - பஞ்ஜரபு சிலுக - கூண்டுக் கிளி - சில புத்தகங்களில், இச்சொல் ராமனைக் குறிப்பதாக எழுதியுள்ளனர். ஆயின், அனுபல்லவி சீதையையும், சரணம் ராமனுக்கு உடன் பிறந்தோரையும் குறிக்கின்றது. எனவே இச்சொல் சீதையைக் குறிக்கும் எனத் தோன்றுகின்றது.
Top
No comments:
Post a Comment