Saturday, November 8, 2008

கோரி ஸேவிம்ப ராரே - ராகம் க2ரஹர ப்ரிய - Kori Sevimpa Raare - Raga Kharahara Priya

பல்லவி
கோரி ஸேவிம்ப ராரே கோர்கலீடே3

அனுபல்லவி
ஸ்ரீ ரமணீ-கரமௌ கோவூரி ஸுந்த3ரேஸ்1வருனி (கோ)

சரணம்
ஸுருலு வேயி வன்னெ ப3ங்கா3ரு விருலசே பூஜிம்பக3 பூ4-
ஸுருலு ஸனகாதி3 மௌனி வருலு நுதிம்பக3
ஸிருலித்துனனி கொலுவையுண்டே3 1ஸ்ரீ ஸௌந்த3ர்ய நாயிகா
வருனி ஸ்ரீ த்யாக3ராஜ வரது3னி பரமாத்முனி 2ஹருனி (கோ)


பொருள் - சுருக்கம்
சீருடைத்த, எழில் மிக்கு, கோவூருறை சுந்தரேசுவரனை வேண்டி வணங்க வாரீர், கோரிக்கைகளீடேற

வானோர், ஆயிரம் வண்ணப் பொன் மலர்கொடுத் தொழ, அந்தணர்களும், சனகர் முதலான சிறந்த முனிவர்களும் போற்ற,
சீரருள்வோமென, கொலுவிருக்கும் சௌந்தரிய நாயகி மணாளனை, தியாகராசனுக்கு வரமருள்வோனை, பரம்பொருளினை, அரனை வேண்டி வணங்க வாரீர், கோரிக்கைகளீடேற

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கோரி/ ஸேவிம்ப/ ராரே/ கோர்கலு/-ஈடே3ர/
வேண்டி/ வணங்க/ வாரீர்/ கோரிக்கைகள்/ ஈடேற/

அனுபல்லவி
ஸ்ரீ/ ரமணீ-கரமௌ/ கோவூரி/ ஸுந்த3ரேஸ்1வருனி/ (கோ)
சீருடைத்த/ எழில் மிக்கு/ கோவூருறை/ சுந்தரேசுவரனை/ வேண்டி..

சரணம்
ஸுருலு/ வேயி/ வன்னெ/ ப3ங்கா3ரு/ விருலசே/ பூஜிம்பக3/
வானோர்/ ஆயிரம்/ வண்ண/ பொன்/ மலர்கொடு/ தொழ/

பூ4-ஸுருலு/ ஸனக/-ஆதி3/ மௌனி/ வருலு/ நுதிம்பக3/
அந்தணர்களும்/ சனகர்/ முதலான/ முனிவர்களில்/ சிறந்தோர்/ போற்ற/

ஸிருலு/-இத்துனு/-அனி/ கொலுவை-உண்டே3/ ஸ்ரீ ஸௌந்த3ர்ய/ நாயிகா/
சீர்/ அருள்வோம்/ என/ கொலுவிருக்கும்/ ஸ்ரீ சௌந்தரிய/ நாயகி/

வருனி/ ஸ்ரீ த்யாக3ராஜ/ வரது3னி/ பரமாத்முனி/ ஹருனி/ (கோ)
மணாளனை/ ஸ்ரீ தியாகராசனுக்கு/ வரமருள்வோனை/ பரம்பொருளினை/ அரனை/ வேண்டி..

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஸ்ரீ ஸௌந்த3ர்ய நாயிகா - திருவுடை நாயகி - கோவூர் அம்மையின் பெயர்.
2 - ஹருனி - அரன் - பிரளய காலத்தில் பேரண்டத்தினை தன்னுள் அடக்கிக் கொள்வதனால் அப்பெயர்.

Top


No comments: