Friday, November 7, 2008

பராகு நீகேலரா - ராகம் கிரணாவளி - Paraaku Neekelaraa - Raga Kiranaavali

பல்லவி
பராகு நீகேலரா ராம

அனுபல்லவி
சராசரமுல வஸியிஞ்சே ஓ
ஸாரஸாக்ஷ நா பனுலண்டேயீ (ப)

சரணம்
புரான 113ரியொஸங்கி3னயடு நே
பு4ஜிஞ்சுகொன்ன ஸே1ஷமா ராம
4ரா தலமுன கு3ஹுனி வலெ 2பத்ர
தல்ப
மொனர்சிதினா3 4ஸ்ரீ த்யாக3ராஜுபை (ப)



பொருள் - சுருக்கம்
இராமா! அசைவன மற்றும் அசையாதனவற்றி லுறையும் ஓ கமலக்கண்ணா!
எனது பணிகளென்றால் இப்புறக்கணிப்பு உனக்கேனய்யா?

முன்பு சபரி வழங்கியது போன்று நான் உண்ட மிகுதியையும், குகனைப்போன்று, புவித்தரையில் இலைப் படுக்கையுமா அளித்தேன்?

பின்னர், தியாகராசனிடம் புறக்கணிப்பு உனக்கேனய்யா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பராகு/ நீகு/-ஏலரா/ ராம/
புறக்கணிப்பு/ உனக்கு/ ஏனய்யா/ இராமா/



அனுபல்லவி
சர/-அசரமுல/ வஸியிஞ்சே/ ஓ/
அசைவன/ அசையாதனவற்றில்/ உறையும்/ ஓ/

ஸாரஸ/-அக்ஷ/ நா/ பனுலு/-அண்டே/-ஈ/ (ப)
கமல/ கண்ணா/ எனது/ பணிகள்/ என்றால்/ இந்த/ புறக்கணிப்பு..



சரணம்
புரான/ ஸ13ரி/-ஒஸங்கி3ன/-அடு/ நே/
முன்பு/ சபரி/ வழங்கியது/ போன்று/ நான்/

பு4ஜிஞ்சுகொன்ன/ ஸே1ஷமா/ ராம/
உண்ட/ மிகுதியையுமா/ இராமா/!

4ரா/ தலமுன/ கு3ஹுனி/ வலெ/ பத்ர/
புவி/ தரையில்/ குகனை/ போன்று/ இலை/

தல்பமு/-ஒனர்சிதினா/ ஸ்ரீ த்யாக3ராஜுபை/(ப)
படுக்கையுமா/ அளித்தேன்/ ஸ்ரீ தியாகராசனிடம்/ புறக்கணிப்பு..



குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - ஸ்ரீ த்யாக3ராஜுபை - த்யாக3ராஜுபை
Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - 13ரி - சபரி, தான் சுவைத்து, சிறந்ததென தேர்ந்தெடுத்த (எச்சில்) பழங்களை அளித்தாள் என கர்ண பரம்பரையாக ராமாயண காதை. ஆனால் வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், 74-வது அத்தியாயத்தின்படி, சபரி எச்சில் பழம் வழங்கியதாக சொல்லப்படவில்லை.

2பத்ர தல்ப - வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், 50-வது அத்தியாயத்தில் குகன் சிறந்த படுக்கைகளை வழங்கியதாகவும், ராமன் அவற்றினை ஏற்றுக்கொள்ளாது இலைப்படுக்கையில் உறங்கினான் என்றும் கூறப்பட்டுள்ளது. வனவாசம் ஏற்றுக்கொண்டபின் அரச போகங்கள் அனுபவித்தல் முறையன்று என ராமன் அங்ஙனம் செய்தான்.


தியாகராஜர் ஆனந்த ராமாயணத்தினைத் தழுவி தனது கீர்த்தனைகளை இயற்றினார் எனச் சொல்வர்.

3 - ஒனர்சிதினா - அளித்தேனா - இது சபரி, குகன் இருவருக்கும் பொதுவான சொல்.
Top



No comments: