பல்லவி
தனயுனி ப்3ரோவ ஜனனி வச்சுனோ
தல்லி வத்3த3 பா3லுடு3 போனோ
அனுபல்லவி
இன குலோத்தம 1ஈ ரஹஸ்யமுனு
எரிகி3ம்புமு மோமுனு 2கனுபிம்புமு (த)
சரணம்
வத்ஸமு வெண்ட தே4னுவு சனுனோ
வாரித3முனு கனி பைருலு சனுனோ
3மத்ஸ்ய கண்டிகி விடுடு3 வெட3லுனோ
மஹினி த்யாக3ராஜ வினுத ரம்மு தெல்புமு (த)
பொருள் - சுருக்கம்
பரிதி குலோத்தமா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
மகனைக் காக்க, ஈன்றவள் வருவாளோ (அன்றி) தாயிடம் சிறுவன் செல்வானோ?
இந்த இரகசியத்தினை விளக்குவாய்; (உனது) முகத்தினைக் காட்டுவாய்;
கன்றின் பின் பசு செல்லுமோ? முகில் தேடி பயிர்கள் செல்லுமோ? கயற்கண்ணியிடம் காதலன் செல்வானோ? வாரும்; தெரிவியும்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தனயுனி/ ப்3ரோவ/ ஜனனி/ வச்சுனோ/
மகனை/ காக்க/ ஈன்றவள்/ வருவாளோ/
தல்லி வத்3த3/ பா3லுடு3/ போனோ/
தாயிடம்/ சிறுவன்/ செல்வானோ/
அனுபல்லவி
இன/ குல/-உத்தம/ ஈ/ ரஹஸ்யமுனு/
பரிதி/ குல/ உத்தமா/ இந்த/ இரகசியத்தினை/
எரிகி3ம்புமு/ மோமுனு/ கனுபிம்புமு/ (த)
விளக்குவாய்/ முகத்தினை/ காட்டுவாய்/
சரணம்
வத்ஸமு/ வெண்ட/ தே4னுவு/ சனுனோ/
கன்றின்/ பின்/ பசு/ செல்லுமோ/
வாரித3முனு/ கனி/ பைருலு/ சனுனோ/
முகில்/ தேடி/ பயிர்கள்/ செல்லுமோ/
மத்ஸ்ய கண்டிகி/ விடுடு3/ வெட3லுனோ/
கயற்கண்ணியிடம்/ காதலன்/ செல்வானோ/
மஹினி/ த்யாக3ராஜ/ வினுத/ ரம்மு/ தெல்புமு/
புவியில்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ வாரும்/ தெரிவியும்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2கனுபிம்புமு - கனிபிம்புமு
மேற்கோள்கள்
விளக்கம்
1ஈ ரஹஸ்யமுனு - சரணத்தில் குறப்பிட்டுள்ள மூன்று கேள்விகள்
3மத்ஸ்ய கண்டி - பெண்ணைக் குறிக்கும்
சரணத்தில் எழுப்பியுள்ள மூன்று கேள்விகளுக்கும் 'இல்லை' என்பதுதான் பதில். பசுவின் பின்தான் கன்று செல்லும்; பயிர்கள் முகிலின் வரவைத்தான் நோக்கும்; காதலிதான் காதலனைத் தேடிச் செல்வாள். எனவே, தியாகராஜர் இறைவனை மறைமுகமாக, 'தனது முயற்சி எத்தனையுண்டானாலும், இறைவன் தொண்டருக்கு இரங்கினால்தான் தொண்டன் உய்ய முடியும்' என்கிறார்
Top
2 comments:
திரு கோவிந்தன் அவர்களுக்கு
தாயிடம் சிறுவன் செல்வானோ?
கன்றின் பின் பசு செல்லுமோ? என்று
தியாகராஜர் எழுப்பியுள்ள எழுப்பியுள்ள முதலிரண்டு கேள்விகளுக்கு ஆம் என்றும் பதில் கூறலாமே. இவற்றில் எந்த முரண்பாடும் இல்லையே.
தாய் மகனைக் காக்கக் செல்வதும், சிறுவன் தாயிடம் தன் தேவைகளுக்காகவோ அல்லது துன்பம் நிகழும் போது செல்வதோ, இரண்டுமே சரி தானே.
முகில் தேடி பயிர்கள் செல்லுமோ என்னும் கேள்விக்கு மட்டும் இல்லையென்பது தான் பதில்.
தியாகராஜருக்கு இவை தெரியாது என்று எண்ணுவதே பாவம்.
தியாகராஜர் எழுப்பிய இக்கேள்விகளுக்கு ஏதேனும் உட்பொருள் உள்ளதா.
வணக்கம்
கோவிந்தசாமி
திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
தியாகராஜர் இந்த கீர்த்தனையில் தனது ஐயங்களைக் கேட்கவில்லை. அவர் மறைமுகமாக, இறைவன் தன்னைக் காப்பதற்கு வரவில்லை என்பதனைக் குத்திக் காட்டுவதற்காக இத்தகைய மேற்கோள்களைக் கொடுத்துள்ளார். அவருக்கு அவைகளுக்கு விடை தெரியாது என்பதனால் அவர் அப்படிக் கேட்பதாகக் கொள்வது தவறாகும்.
நீங்கள் கூறியபடி, தாயிடம் மகவு செல்வதும், காதலியைத் தேடி காதலன் செல்வதும் நடைமுறையில் உண்டு. ஆனால் இப்பாடலின் நோக்கத்தினைக் கருத்தில் கொண்டுதான் இக்கேள்விகளுக்கு விடை காணவேண்டும் என்று நான் கருதுகின்றேன்.
வணக்கம்
கோவிந்தன்
Post a Comment