Wednesday, October 1, 2008

தனயந்தே3 ப்ரேமயனுசு - ராகம் பை4ரவி - Tanayande Premayanuchu - Raga Bhairavi

பல்லவி
தனயந்தே3 ப்ரேமயனுசு விரி போ3ணுலு
தல தெலியகனாடெ33ரு

அனுபல்லவி
அனயமு மோஹமு மீரக3 க்ரு2ஷ்ணுடு3
அந்த3ரிகன்னி 1ரூபமுலெத்தியாட33 (த)

சரணம்
சரணம் 1
கொந்த3ரி ப3ங்கா3ரு கொங்கு3லு பட்ட
கொந்த3ரி பத3முல பா3கு33 நெட்ட
கொந்த3ரி ஸொக3ஸுனு கனுலார ஜூட3
கொந்த3ரி மனஸு தெலிஸி மாடலாட3 (த)

சரணம் 2
2கொந்த3ரியங்கமுனனு பவ்வளிம்ப
கொந்த3ரி பெத3வுல ப3லு கெம்புலுஞ்ச
கொந்த3ரி தனுவுல கர லீல ஸேய
கொந்த3ரி வெனுக நிலிசி ஜட3 வேய (த)

சரணம் 3
கொந்த3ரி நுது3ட கஸ்தூரி பொ3ட்டு பெட்ட
கொந்த3ரி தளுகு செக்குல முத்3து3 பெட்ட
கொந்த3ரி பாலிண்ட்3ல பன்னீரு ஜில்க
கொந்த3ரிதோ த்யாக3ராஜ நுதுடு3 பல்க (த)


பொருள் - சுருக்கம்
தன்னிடமே காதலெனப் பூங்குழலியர்
தலை தெரியாதாடினர்

சிலரின் சரிகைத் தலைப்புகளைப் பற்ற, சிலரின் பாதங்களை நன்கு உதைக்க,
சிலரின் ஒயிலைக் கண்ணாரக் காண, சிலரின் மனதறிந்து உரையாட,
சிலரின் மடியில் படுத்திருக்க, சிலரின் உதடுகளில் கருஞ்சிவப்புச் சாயமிட,
சிலரின் உடலில் கரங்கள் விளையாட, சிலரின் பின் நின்று தலை பின்ன,
சிலரின் நெற்றியில் கத்துரி பொட்டிட, சிலரின் மின்னும் கன்னத்தில் முத்தமிட,
சிலரின் கொங்கைகளில் பன்னீர் தெளிக்க, சிலருடன் பேச,
இங்ஙனம், தியாகராசனால் போற்றப் பெற்ற, கண்ணன், தொடர்ந்து மோகம் மீற, அனைவருக்கும் அத்தனை உருவங்களெடுத்தாட, ஒவ்வொருத்தியும் கண்ணனுக்கு தன்னிடமே காதலென தலை தெரியாதாடினர்


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தன-அந்தே3/ ப்ரேம-அனுசு/ விரி போ3ணுலு/
தன்னிடமே/ காதலென/ பூங்குழலியர்/

தல/ தெலியகனு/-ஆடெ33ரு/
தலை/ தெரியாது/ ஆடினர்



அனுபல்லவி
அனயமு/ மோஹமு/ மீரக3/ க்ரு2ஷ்ணுடு3/
தொடர்ந்து/ மோகம்/ மீற/ கண்ணன்/

அந்த3ரிகி/-அன்னி/ ரூபமுலு/-எத்தி/-ஆட33/
அனைவருக்கும்/ அத்தனை/ உருவங்கள்/ எடுத்து/ ஆட/
தன்னிடமே காதலென ....



சரணம்
சரணம் 1
கொந்த3ரி/ ப3ங்கா3ரு/ கொங்கு3லு/ பட்ட/
சிலரின்/ சரிகை/ தலைப்புகளை/ பற்ற/

கொந்த3ரி/ பத3முல/ பா3கு33/ நெட்ட/
சிலரின்/ பாதங்களை/ நன்கு/ உதைக்க/

கொந்த3ரி/ ஸொக3ஸுனு/ கனுலார/ ஜூட3/
சிலரின்/ ஒயிலை/ கண்ணார/ காண/

கொந்த3ரி/ மனஸு/ தெலிஸி/ மாடலு-ஆட3/
சிலரின்/ மனது/ அறிந்து/ உரையாட,
தன்னிடமே காதலென ...


சரணம் 2
கொந்த3ரி/-அங்கமுனனு/ பவ்வளிம்ப/
சிலரின்/ மடியில்/ படுத்திருக்க/,

கொந்த3ரி/ பெத3வுல/ ப3லு கெம்புலு-உஞ்ச/
சிலரின்/ உதடுகளில்/ கருஞ்சிவப்புச் சாயமிட/

கொந்த3ரி/ தனுவுல/ கர/ லீல ஸேய/
சிலரின்/ உடலில்/ கரங்கள்/ விளையாட/

கொந்த3ரி/ வெனுக/ நிலிசி/ ஜட3/ வேய/
சிலரின்/ பின்/ நின்று/ தலை/ பின்ன/
தன்னிடமே காதலென ...


சரணம் 3
கொந்த3ரி/ நுது3ட/ கஸ்தூரி/ பொ3ட்டு பெட்ட/
சிலரின்/ நெற்றியில்/ கத்துரி/ பொட்டிட/

கொந்த3ரி/ தளுகு/ செக்குல/ முத்3து3 பெட்ட/
சிலரின்/ மின்னும்/ கன்னத்தில்/ முத்தமிட/

கொந்த3ரி/ பாலிண்ட்3ல/ பன்னீரு/ ஜில்க/
சிலரின்/ கொங்கைகளில்/ பன்னீர்/ தெளிக்க/

கொந்த3ரிதோ/ த்யாக3ராஜ/ நுதுடு3/ பல்க/
சிலருடன்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோன்/ பேச/
தன்னிடமே காதலென ...

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1ரூபமுலெத்தியாட33 - ரூபமுலெத்தியாட3

2கொந்த3ரியங்கமுனனு - கொந்த3ரியங்க3முனனு : கொந்த3ரியங்க3முனனு - தவறாகும்

மேற்கோள்கள்


விளக்கம்

தலை தெரியாது - முன்பின் கவனியாது

'நௌக சரித்திர'மெனும் நாட்டிய நாடகத்தில் கண்ணனுடன் ஆய்ச்சியர் இன்பம் துய்த்தலை வருணிக்கும் பாடல்
Top


No comments: