பல்லவி
நம்மின வாரினி மரசேதி3 ந்யாயமா ராம
அனுபல்லவி
கம்ம வில்துனி கன்ன மா சக்கனி
கல்யாண ராம நின்னு (ந)
சரணம்
சரணம் 1
1சின்ன நாடனுண்டி3 நீ சித்தமூர நடி3சி
என்ன ரானியூடி3க3முலெஞ்சுசு பூஜிஞ்சி நின்னு (ந)
சரணம் 2
ஆஸ மிஞ்சி ராம நின்னந்தரங்க3முனனுஞ்சி
வாஸி வாஸியனுசுனு வர்ணிஞ்சுசுனுனெந்தோ நின்னு (ந)
சரணம் 3
போ4க3முலந்து3 வேள பு3த்3தி4 நீயெட3னுஞ்சே
த்யாக3ராஜ ஸன்னுத தாரக சரித நின்னு (ந)
பொருள் - சுருக்கம்
இராமா! மலர்க் கணையோனையீன்ற, எமதினிய
கலியாணராமா! தியாகராசனால் சிறக்கப் போற்றப்பெற்ற, கரையேற்றும் சரிதத்தோனே!
உன்னை நம்பினவர்களை மறப்பது நியாயமா?
(1) சிறு வயதிலிருந்து, உனது நினைவூற முனைந்து, எண்ணற்ற பணிகளை ஆற்றிக்கொண்டு, வழிபட்டும்,
(2) காதல் மிகுந்து, உன்னை உள்ளத்தினிலிருத்தி, இனிது இனிதென, உன்னை வருணித்தும்,
(3) புவியின்பங்களைத் துய்க்கும்போதும், மனத்தையுன்னிடம் செலுத்தியும் -
மிக்கு உன்னை நம்பினவர்களை மறப்பது நியாயமா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நம்மின வாரினி/ மரசேதி3/ ந்யாயமா/ ராம/
நம்பினவர்களை/ மறப்பது/ நியாயமா/ இராமா/
அனுபல்லவி
கம்ம/ வில்துனி/ கன்ன/ மா/ சக்கனி/
மலர்/ கணையோனை/ ஈன்ற/ எமது/ இனிய
கல்யாண/ ராம/ நின்னு/
கலியாண/ ராமா/ உன்னை/ நம்பினவர்களை ...
சரணம்
சரணம் 1
சின்ன/ நாடனு-உண்டி3/ நீ/ சித்தமு-ஊர/ நடி3சி/
சிறு/ வயதிலிருந்து/ உனது/ நினைவூற/ முனைந்து/
என்ன ரானி/-ஊடி3க3முலு/-எஞ்சுசு/ பூஜிஞ்சி/ நின்னு/
எண்ணற்ற/ பணிகளை/ ஆற்றிக்கொண்டு/ வழிபட்டு/ உன்னை / நம்பினவர்களை ...
சரணம் 2
ஆஸ/ மிஞ்சி/ ராம/ நின்னு/-அந்தரங்க3முன/-உஞ்சி/
ஆசை/ மிகுந்து/ இராமா/ உன்னை/ உள்ளத்தினில்/ இருத்தி/
வாஸி/ வாஸி/-அனுசுனு/ வர்ணிஞ்சுசுனு/-எந்தோ/ நின்னு/
இனிது/ இனிது/ என/ வருணித்துக்கொண்டு/ எவ்வளவோ/ உன்னை/ நம்பினவர்களை ...
சரணம் 3
போ4க3முலு/-அந்து3 வேள/ பு3த்3தி4/ நீயெட3/-உஞ்சே/
புவி யின்பங்களை/ துய்க்கும்போதும்/ மனத்தை/ உன்னிடம்/ செலுத்தும்/
த்யாக3ராஜ/ ஸன்னுத/ தாரக/ சரித/ நின்னு/
தியாகராசனால்/ சிறக்கப் போற்றப்பெற்ற/ கரையேற்றும்/ சரிதத்தோனே/ உன்னை/ நம்பினவர்களை ...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1சின்ன நாடனுண்டி3 நீ சித்தமூர - சின்ன நாட3னுண்டி3 நீ சித்தமு ரா
மேற்கோள்கள்
விளக்கம்
இனிது இனிது - இறைவனின் புகழ்பாடுதலில் கிடைக்கும் இன்பம்.
வருணித்தல் - இறைவன் புகழ் பாடுதல்
கரையேற்றல் - பிறவிக்கடலைத் தாண்டுவித்தல்
Top
No comments:
Post a Comment