Friday, February 25, 2011

தியாகராஜ கிருதி - நீ நாம ரூபமுலகு - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Ni Nama Rupamulaku - Raga Saurashtram - Prahlada Bhakti Vijayam

பல்லவி
நீ நாம ரூபமுலகு நித்ய ஜய மங்க3ளம்

சரணம்
சரணம் 1
பவமான ஸுதுடு3 பட்டு 1பாதா3ரவிந்த3முலகு (நீ)


சரணம் 2
பங்கஜாக்ஷி நெலகொன்ன 2அங்க3 யுக3முனகு (நீ)


சரணம் 3
நவ முக்தா ஹாரமுலு நடியிஞ்சேயுரமுனகு (நீ)


சரணம் 4
நளினாரி கேரு சிரு நவ்வு க3ல மோமுனகு (நீ)


சரணம் 5
ப்ரஹ்லாத3 நாரதா3தி34க்துலு 3பொக3டு3சுண்டே3 (நீ)


சரணம் 6
ராஜீவ நயன த்யாக3ராஜ வினுதமைன (நீ)


பொருள் - சுருக்கம்
  • கமலக் கண்ணா!

  • உனது பெயர் மற்றும் உருவினுக்கு என்றும் ஜய மங்களம்!

    • வாயு மைந்தன் பற்றும் திருவடித்தாமரைகளுக்கு,
    • கமலக் கண்ணாள் அமரும் அங்க இணையினுக்கு,
    • புதிய முத்து மாலைகள் நடமிடும் மார்பினுக்கு,
    • மதியினை எள்ளும் புன்னகை தவழும் முகத்திற்கு,

  • உனது பெயர் மற்றும் உருவினுக்கு என்றும் ஜய மங்களம்!

  • பிரகலாதன், நாரதர் ஆகிய தொண்டர்கள் புகழ்ந்துகொண்டிருக்கும் உனது பெயர் மற்றும் உருவினுக்கு என்றும் ஜய மங்களம்!
  • தியாகராசனால் போற்றப்பெற்ற உனது பெயர் மற்றும் உருவினுக்கு என்றும் ஜய மங்களம்!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீ/ நாம/ ரூபமுலகு/ நித்ய/ ஜய/ மங்க3ளம்/
உனது/ பெயர்/ மற்றும்/ உருவினுக்கு/ என்றும்/ ஜய/ மங்களம்/


சரணம்
சரணம் 1
பவமான/ ஸுதுடு3/ பட்டு/ பாத3/-அரவிந்த3முலகு/ (நீ)
வாயு/ மைந்தன்/ பற்றும்/ திருவடி/ தாமரைகளுக்கு/ உனது...


சரணம் 2
பங்கஜ/-அக்ஷி/ நெலகொன்ன/ அங்க3/ யுக3முனகு/ (நீ)
கமல/ கண்ணாள்/ அமரும்/ அங்க/ இணையினுக்கு/ உனது...


சரணம் 3
நவ/ முக்தா/ ஹாரமுலு/ நடியிஞ்சே/-உரமுனகு/ (நீ)
புதிய/ முத்து/ மாலைகள்/ நடமிடும்/ மார்பினுக்கு/ உனது...


சரணம் 4
நளின/-அரி/ கேரு/ சிரு/ நவ்வு/ க3ல/ மோமுனகு/ (நீ)
கமல/ பகை (மதி)யினை/ எள்ளும்/ புன்னகை/ தவழும்/ முகத்திற்கு/ உனது...


சரணம் 5
ப்ரஹ்லாத3/ நாரத3/-ஆதி3/ ப4க்துலு/ பொக3டு3சு/-உண்டே3/ (நீ)
பிரகலாதன்/ நாரதர்/ ஆகிய/ தொண்டர்கள்/ புகழ்ந்துகொண்டு/ இருக்கும்/ உனது...


சரணம் 6
ராஜீவ/ நயன/ த்யாக3ராஜ/ வினுதமைன/ (நீ)
கமல/ கண்ணா/ தியாகராசனால்/ போற்றப்பெற்ற/ உனது...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், சரணங்களின் வரிசை மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.

1 - பாதா3ரவிந்த3முலகு - பாதா3ரவிந்த3முனகு.

2 - அங்க3 யுக3முனகு - அங்க3 யுரமுனகு : 'யுரமு' அடுத்த சரணத்தில் வருகின்றது. மேலும், வருணணை, பாதத்திலிருந்து தொடங்கி, முகம் வரையிருப்பதனால், 'மடி'யினைக் குறிக்கும் 'அங்க யுக3மு' என்பதே பொருந்தும் என்று நினைக்கின்றேன்.

3 - பொக3டு3சுண்டே3 - பொக3டு3சுண்டு3 - பொக3டு3சுண்டே : 'பொக3டு3சுண்டே' என்பது தவறாகும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் இறுதிப் பாடலாகும்.

கமலக் கண்ணாள் - சீதை
அங்க இணை - துடைகள் - மடியினைக் குறிக்கும்

Top


Updated on 25 Feb 2011

No comments: