நீவே 1கன்னெட3 ஜேஸிதே நே-
நெவரிதோ தெலுபுது3னய்ய
அனுபல்லவி
2பா4வாபா4வ மஹானுபா4வ ஸ்ரீ ராம சந்த்3ர
பா4வஜ ஜனக நா பா4வமு தெலிஸியு (நீ)
சரணம்
சரணம் 1
கோரின கோரிகலீடே3ருனனுசு நின்னு
ஆராதி4ஞ்சின நன்னு ஆரடி3 பெட்டுட
மேர காது3 நாது3 நேரமேமி
நன்னேலுகோராயீ லோகமுனனிங்க (நீ)
சரணம் 2
3ப4க்திலோ ஸ்ரீ ராம ப4க்தி மேலனி ஸி1வ
ஸ1க்தி ஸந்ததமு விரக்திதோ நுதி ஸேய
ஸ1க்தி ஜூசி நிஜ ப4க்துலு பொக3ட3க3
வ்யக்தினி 4ஜூசியாஸக்தி கலிகெ3னு (நீ)
சரணம் 3
பதித பாவன 5ஸம்மதமுன ஸுஜன
ஸங்க3தி ஸேயுடகு ஸம ரஹித ராம நாமமு
6ஸதமு ஸேய நீ 7வ்ரதமு கோரிதி கானி
8நத ஜனக குலாப்3ஜ ஹித த்யாக3ராஜுனிபை (நீ)
பொருள் - சுருக்கம்
- உள்ளனும் இல்லனுமே! பெருந்தகையே! இராமசந்திரா! காமனை யீன்றோனே!
- வீழ்ந்தோரைத் தூயப்படுத்துவோனே! (தான்) தோன்றிய குலத்தின் பகலவனே!
- நீயே (என்னை) அப்புறப்படுத்தினால், நான் எவரிடம் தெரிவிப்பேனய்யா?
- எனதுள்ளப் பாங்கினை யறிந்தும், நீயே (என்னை) அப்புறப்படுத்தினால், நான் எவரிடம் தெரிவிப்பேனய்யா?
- கோரிய கோரிக்கைகள் ஈடேறுமென, உன்னை வழிபட்ட என்னை, இழிவு படுத்துதல் முறையன்று.
- எனது குற்றமென்ன?
- என்னை ஆண்டுகொள்வாயய்யா.
- பக்தியில் இராம பக்தியே உயர்வென, சிவனும் சக்தியும் எவ்வமயமும் பற்றறுத்து, (உன்னைப்) போற்றி செய்ய,
- (உனது) வல்லமை கண்டு உண்மையான பக்தர்கள் புகழ,
- (உனது) சிறப்பினைக் கண்டு (உன்னிடம்) பற்றுண்டானது.
- முழுமனதுடன், நல்லோர் இணக்கம் கொள்ள, நிகரற்ற, இராம நாமம் இடையறாது செய்ய, உனது அனுமதி கோரினேனே யன்றி,
- கோரிய கோரிக்கைகள் ஈடேறுமென, உன்னை வழிபட்ட என்னை, இழிவு படுத்துதல் முறையன்று.
- பணியும் தியாகராசனை, இவ்வுலகில், இன்னமும், நீயே அப்புறப்படுத்தினால், நான் எவரிடம் தெரிவிப்பேனய்யா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீவே/ கன்னு-எட3 ஜேஸிதே/ நேனு/-
நீயே/ (என்னை) அப்புறப்படுத்தினால்/ நான்/
எவரிதோ/ தெலுபுது3னு/-அய்ய/
எவரிடம்/ தெரிவிப்பேன்/ அய்யா/
அனுபல்லவி
பா4வ/-அபா4வ/ மஹானுபா4வ/ ஸ்ரீ ராம சந்த்3ர/
உள்ளனும்/ இல்லனுமே/ பெருந்தகையே/ ஸ்ரீ ராம சந்திரா/
பா4வஜ/ ஜனக/ நா/ பா4வமு/ தெலிஸியு/ (நீ)
காமனை/ யீன்றோனே/ எனது/ உள்ளப் பாங்கினை/ யறிந்தும்/ நீயே...
சரணம்
சரணம் 1
கோரின/ கோரிகலு/-ஈடே3ருனு/-அனுசு/ நின்னு/
கோரிய/ கோரிக்கைகள்/ ஈடேறும்/ என/ உன்னை/
ஆராதி4ஞ்சின/ நன்னு/ ஆரடி3 பெட்டுட/
வழிபட்ட/ என்னை/ இழிவு படுத்துதல்/
மேர/ காது3/ நாது3/ நேரமு/-ஏமி/
முறை/ யன்று/ எனது/ குற்றம்/ என்ன/
நன்னு/-ஏலுகோரா/-ஈ/ லோகமுன/-இங்க/ (நீ)
என்னை/ ஆண்டுகொள்வாயய்யா/ இந்த/ உலகில்/ இன்னமும்/ நீயே...
சரணம் 2
ப4க்திலோ/ ஸ்ரீ ராம/ ப4க்தி/ மேலு/-அனி/ ஸி1வ/
பக்தியில்/ ஸ்ரீ ராம/ பக்தியே/ உயர்வு/ என/ சிவனும்/
ஸ1க்தி/ ஸந்ததமு/ விரக்திதோ/ நுதி/ ஸேய/
சக்தியும்/ எவ்வமயமும்/ பற்றறுத்து/ (உன்னைப்) போற்றி/ செய்ய/
ஸ1க்தி/ ஜூசி/ நிஜ/ ப4க்துலு/ பொக3ட3க3/
(உனது) வல்லமை/ கண்டு/ உண்மையான/ பக்தர்கள்/ புகழ/
வ்யக்தினி/ ஜூசி/-ஆஸக்தி/ கலிகெ3னு/ (நீ)
(உனது) சிறப்பினை/ கண்டு/ (உன்னிடம்) பற்று/ உண்டானது/
சரணம் 3
பதித/ பாவன/ ஸம்மதமுன/ ஸுஜன/
வீழ்ந்தோரை/ தூயப்படுத்துவோனே/ முழுமனதுடன்/ நல்லோர்/
ஸங்க3தி/ ஸேயுடகு/ ஸம/ ரஹித/ ராம/ நாமமு/
இணக்கம்/ கொள்ள/ நிகர்/ அற்ற/ இராம/ நாமம்/
ஸதமு/ ஸேய/ நீ/ வ்ரதமு/ கோரிதி/ கானி/
இடையறாது/ செய்ய/ உனது/ அனுமதி/ கோரினேனே/ யன்றி/
நத/ ஜனக/ குல/-அப்3ஜ/ ஹித/ த்யாக3ராஜுனிபை/ (நீ)
பணியும்/ (தான்) தோன்றிய/ குலத்தின்/ கமல/ நண்பன் (பகலவனே)/ தியாகராசனை/ நீயே...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கன்னெட3 - நன்னெட3 : புத்தகங்களில், இச்சொல்லுக்கு, 'புறக்கணித்தல்' என்றும் 'கைவிடுதல்' என்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு, சரியான தெலுங்கு சொல், 'கன்னட3' ஆகும். ஆனால், 'கன்னெட3' என்பதனை 'கன்னு+எட3' என்று பிரித்து, அதே பொருள் கொள்ள இயலும். ஆனால், 'நன்னெட3' என்பது தவறாகும். ஏனெனில், மூன்றாவது சரணத்தின் 'தியாக3ராஜுனிபை' என்பதனை பல்லவியுடன் இணைக்க இயலாது.
Top
4 - ஜூசியாஸக்தி - ஜூசினாஸக்தி : சமஸ்கிருதத்தில், 'ஸக்தி' என்றும் 'ஆஸக்தி' என்றும் இரண்டு சொற்கள் உள்ளன. இரண்டு சொற்களுக்கும், 'பற்று' என்றுதான் பொருள். 'ஸக்தி' என்பது, பொதுவாக, மனிதர்கள் உலக ரீதியில் கொள்ளும் பற்றினையும், 'ஆஸக்தி' என்பது, இறைவனிடம், பெருந் தொண்டர்கள் கொள்ளும், நோக்கமற்ற, உயர் பற்றினையும் குறிக்கும். 'ஜூசியாஸக்தி' என்பதனை, 'ஜூசி+ஆஸக்தி' என்றுதான் பிரிக்க இயலும். ஆனால், 'ஜூசினாஸக்தி' என்பதனை 'ஜூசி+நா+ஸக்தி' என்று பிரிக்கலாம். ஆனால், இவ்விடத்தில், 'நா' என்பது தவறாகும் - 'நாகு' என்று இருக்கவேண்டும். மேலும், தியாகராஜர், இறைவனிடம் கொண்ட பற்று, 'ஆஸக்தி' எனப்படும் 'இறைப்பற்றாகும்'. எனவே, 'ஜூசினாஸக்தி' என்பது தவறாகும். ஆனால், தியாகராஜர், தமது, 'ப4க்தி பி3ச்சம்' என்ற கீர்த்தனையில், 'ஆஸக்தி' என்ற சொல்லை, 'உலக ரீதியான பற்று' என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளதாகத் தோன்றுகின்றது.
6 - ஸதமு - ஸததமு : இரண்டு சொற்களுக்கும் பொருள் ஒன்றுதான்.
Top
மேற்கோள்கள்
2 - பா4வாபா4வ - பா4வ அபா4வ - உள்ளன் இல்லன் - கீழ்க்கண்ட திருமந்திரச் செய்யுள் நோக்கவும் -
இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம்மிறை
கல்லது நெஞ்சம் பிளந்திடுங் காட்சியன்
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி
சொல்லருஞ் சோதி தொடர்ந்து நின்றானே (3015)
'லலிதா ஸஹஸ்ர நாம'த்தில் அம்மையின் பெயர்களிலொன்று - 'பா4வாபா4வ விவர்ஜிதா'. இதற்கு, 'உள்ளமைக்கும், இல்லாமைக்கும் புறம்பானவள்' என்று பொருளாகும்.
Top
தெலுங்கு அகராதியின்படி, 'பா4வாபா4வுடு3' என்பதற்கு 'காமன்' என்ற பொருளாகும். அந்த பொருள் இவ்விடம் பொருந்தாது.
3 - ப4க்திலோ ஸ்ரீ ராம ப4க்தி மேலனி - பக்தியில் ராம பக்தி உயர்வு என. 'விஷ்ணு ஸஹஸ்ர நாம'த்தின், 'பயன் பகுதி'யில், பார்வதி, சிவனிடம், 'விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை, பண்டிதர்களால் தினம் பாடிக் கேட்பது எங்ஙனம்' என்று வினவ, சிவன், 'ராம, ராம, ராம' என்று கூறினாலே, விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை உரைத்தற்குச் சமானம் என்று கூறினார்.
Top
4 - ஆஸக்தி - இறைப் பற்று - நாரத பக்தி சூத்திரத்தினில் கூறப்பட்டது -
"பக்தி அல்லது தெய்வீகக் காதல் ஒன்றேயாகிலும், அது பதினோரு விதங்களில் வெளிப்படும். அவையாவன - (1) இறைவன் புகழ் பாடும் பற்று, (2) இறைவனின் திவ்விய உருவினை விரும்பும் பற்று, (3) இறைவனை வழிபடும் பற்று, (4) இறைவனை நினைவு கூறும் பற்று, (5) இறைவனின் ஊழியனாகப் பற்று, (6) இறைவனின் நண்பனாகப் பற்று, (7) இறைவனைக் குழந்தையாகப் பற்று, (8) இறைவனைக் கணவனாகப் பற்று, (9) தன்னையே அர்ப்பணிக்கும் பற்று, (10) இறைவனுடன் ஒன்றும் பற்று, (11) இறைவனின் பிரிவாற்றாமைப் பற்று என." (82) (ஸ்வாமி தியாகீஸாநந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
Top
விளக்கம்
5 - ஸம்மதமுன - முழுமனதுடன் - இதனை, 'கோரினேன்' என்பதுடனோ அல்லது 'இணக்கம் கொள்வதற்கு' என்பதுடனோ இணைக்கலாம்.
7 - வ்ரதமு - விரதம். இவ்விடத்தில், இந்தப் பொருள் பொருந்தாது. இந்த சம்ஸ்கிருதச் சொல்லுக்கு, 'உத்தரவு', 'அனுமதி', 'ஆணை' என்றும் பொருளுண்டு. எனவே, அங்ஙனமே, 'அனுமதி' என்று பொருள் கொள்ளப்பட்டது.
இறைவனை அடைவதற்கு, பக்தி ஒரு சாதனமாகும். ஆனால், இந்த கீர்த்தனையில், இறைவனின் நாமத்தினை இடையறாது கூறும் பேற்றினை அருளும்படி வேண்டுகின்றார். பக்தி செய்வதற்குக் கூட இறைவனின் அருள் வேண்டுமா? அப்படியானால், பக்தி முன் வருமா அல்லது இறைவனின் அருள் முன் வருமா? என் சிற்றறவுக்கு எட்டியவரை, 'ஆஸக்தி' என்று கூறப்படும் 'நோக்கமற்ற இறைப்பற்று' தோன்றுதற்கு, இறைவனின் அருள் தேவை. இதற்கு முந்தைய நிலையான, 'நோக்கத்துடன் கூடிய பக்தி'க்கு மனிதனின் முயற்சி தேவை. தியாகராஜரின், 'ப4க்தி பிச்சம்' என்ற சங்கராபரண ராக கீர்த்தனையினை நோக்கவும்.
Top
8 - நத ஜனக குலாப்3ஜ ஹித - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. சில புத்தகங்களில், இதனை, இரண்டு அடைமொழிகளாக - 'பணிந்தோரின் தந்தை' மற்றும் 'பகலவன் குல சூரியன்' என்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'க' என்பதற்கு 'சூரியன்' என்றும் பொருளுண்டு. எனவே, 'க குலாப்3ஜ ஹித' என்பதற்கு, 'பகலவன் குல சூரியன்' என்று பொருள் கொள்ளலாம். ஆனால், மிகுதியான 'நத ஜன' என்பதற்கு தனித்துப் பொருளேதும் கொள்ள இயலாது. எனவே, இதனை, 'ஜனக குலாப்3ஜ ஹித' என்று பிரித்து, '(தான்) தோன்றிய குலத்தின் சூரியன்' என்று பொருள் கொள்ளப்பட்டது. மிகுதியான, 'நத' என்பதனை, 'த்யாகராஜுனிபை' என்பதுடன் இணைத்து, 'பணிந்த தியாகராஜனை' என்று பொருள் கொள்ளப்பட்டது.
Top
Updated on 27 Feb 2011
No comments:
Post a Comment