Tuesday, February 22, 2011

தியாகராஜ கிருதி - தே3வ ராம ராம - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Deva Rama Rama - Raga Saurashtram

பல்லவி
தே3வ ராம ராம மஹாதே3வ ராம ரகு4வர

அனுபல்லவி
பா4வஜாரி ரூப கே2ல பா41பாவனாவ மஹா(தே3வ)

சரணம்
1ங்கர கருணாகரானிஸ1ம் கர த்4ரு2த ஸ1ர ப4க்த
வஸ1ங்கர 23னுஜாஹவ 3நிஸ்11ங்க 4ரஸிக த்யாக3ராஜ (தே3வ)


பொருள் - சுருக்கம்
  • தேவா! இராமா! மகாதேவா! இரகுவரா!
  • காமன் பகைவன் உருவே! திருவிளையாடல் தன்மையோனே! தூயோனே!
  • மங்களமானவனே! கருணாகரனே! எவ்வமயமும் கரத்தில் அம்பேந்துவோனே! தொண்டரைக் கவர்வோனே! அசுரரை பலியிடுவோனே! அச்சமற்றோனே! தியாகராசனின் இசை ரசிகனே!

    • காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தே3வ/ ராம/ ராம/ மஹாதே3வ/ ராம/ ரகு4வர/
தேவா/ இராமா/ இராமா/ மகாதேவா/ இராமா/ இரகுவரா/


அனுபல்லவி
பா4வஜ/-அரி/ ரூப/ கே2ல/ பா4வ/ பாவன/-அவ/ மஹா-(தே3வ)/
காமன்/ பகைவன்/ உருவே/ திருவிளையாடல்/ தன்மையோனே/ தூயோனே/ காப்பாய்/ மகாதேவா/


சரணம்
1ங்கர/ கருணாகர/-அனிஸ1ம்/ கர/ த்4ரு2த/ ஸ1ர/ ப4க்த/
மங்களமானவனே/ கருணாகரனே/ எவ்வமயமும்/ கரத்தில்/ ஏந்துவோனே/ அம்பு/ தொண்டரை/

வஸ1ங்கர/ த3னுஜ/-ஆஹவ/ நிஸ்11ங்க/ ரஸிக/ த்யாக3ராஜ/ (தே3வ)
கவர்வோனே/ அசுரரை/ பலியிடுவோனே/ அச்சமற்றோனே/ (இசை) ரசிகனே/ தியாகராசனின்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பாவனாவ - பா4வனாவ : 'பா4வனாவ' என்பது பொருத்தமாகத் தோன்றவில்லை.

2 - 3னுஜாஹவ - த3னுஜ ஹர.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
3 - நிஸ்11ங்க - இவ்விதமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்ஸ்கிருதச் சொல்லின் சரியான வடிவம், 'நி:ஸ1ங்க' ஆகும். ஆனால், பொதுவாக 'நிஸ்11ங்க' என்று உபயோகிப்பதுண்டு.

4 - ரஸிக த்யாக3ராஜ - 'ரஸிக' என்ற சொல், தனியாக இறைவனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம் - 'ஓ இசை ரசிகனே!' என்று. அங்ஙனமானால், 'தியாகராஜ' என்பதனைப் பல்லவியுடன் இணைத்து, 'தியாகராஜனின் தேவா' என்று பொருள் கொள்ளலாம்.

காமன் பகைவன் - சிவன்
அச்சமற்றோனே - தயக்கமற்றோனே என்றும் கொள்ளலாம்.

Top


Updated on 22 Feb 2011

No comments: