Friday, February 11, 2011

தியாகராஜ கிருதி - எட்லா தொ3ரிகிதிவோ - ராகம் வசந்த - Etlaa Dorikitivo - Raga Vasanta

பல்லவி
எட்லா தொ3ரிகிதிவோ ராம தன(கெட்லா)

அனுபல்லவி
1சுட்லார 23டி3ய தோ3வகு நாது3
பட்லாபி4மானமு லேகுண்ட33 (எ)

சரணம்
பாத3 மஹிமோ பெத்33-
லாஸீ1ர்வாத33லமோ ஸு-ஸ்வரபு
நாத32லமோ த்யாக3ராஜ
கே23 ஹர ஸ்ரீ நாத2 தன(கெட்லா)


பொருள் - சுருக்கம்
  • இராமா!
  • தியாகராசனின் துன்பம் களைவோனே! திருமகள் மணாளா!

  • எப்படிக் கிடைத்தாயோ, தனக்கு!

    • சுற்றி, அரை நாழிகை வழிக்கு, என்னிடத்தில் அன்புள்ளோர் இல்லாதிருக்க,

  • தனக்கெப்படிக் கிடைத்தாயோ!

    • (உனது) திருவடி மகிமையோ!
    • பெரியோர் ஆசீர்வாத வலிமையோ!
    • இனிய சுர நாத (வழிபாட்டின்) பயனோ!

  • தனக்கு எப்படிக் கிடைத்தாயோ!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எட்லா/ தொ3ரிகிதிவோ/ ராம/ தனகு/-(எட்லா)
எப்படி/ கிடைத்தாயோ/ இராமா/ தனக்கு/ எப்படி...


அனுபல்லவி
சுட்ல/-அர/ க3டி3ய/ தோ3வகு/
சுற்றி/ அரை/ நாழிகை/ வழிக்கு/

நாது3 பட்ல/-அபி4மானமு/ லேக/-உண்ட33/ (எ)
என்னிடத்தில்/ அன்புள்ளோர்/ இல்லாது/ இருக்க/ எப்படி...


சரணம்
பாத3/ மஹிமோ/ பெத்33ல-/
(உனது) திருவடி/ மகிமையோ/ பெரியோர்/

ஆஸீ1ர்வாத3/ ப3லமோ/ ஸு-ஸ்வரபு/
ஆசீர்வாத/ வலிமையோ/ இனிய சுர/

நாத3/ ப2லமோ/ த்யாக3ராஜ/
நாத/ (வழிபாட்டின்) பயனோ/ தியாகராசனின்/

கே23/ ஹர/ ஸ்ரீ/ நாத2/ தனகு/-(எட்லா)
துன்பம்/ களைவோனே/ திருமகள்/ மணாளா/ தனக்கு/ எப்படி.../


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - சுட்லார - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, 'அருகில்', 'சுற்றில்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இதே போன்ற சொல் (சுட்டார), 'எட்லா கனுகொ3ந்து3னோ' என்ற க4ண்டா ராக கிருதியிலும் காணப்படுகின்றது. இச்சொல்லின் வடிவம் சரிவர விளங்கவில்லை. 'சுற்றில்' என்ற பொருள் உள்ள தெலுங்கு சொல், 'சுட்டு' ஆகும். எனவே, இதனை, 'சுட்ல'+'அர' என்று பிரித்துப் பொருள் கொள்ளலாமா என்று தெரியவில்லை. அப்படி, 'அர' என்பதனைப் பிரித்தால், அதனை, அடுத்த சொல்லாகிய, 'க3டிய'வுடன் சேர்த்து, 'அர க3டிய' (அரை நாழிகை) என்று பொருள் கொள்ளலாம். அங்ஙனமே இங்கு பொருள் கொள்ளப்பட்டது.

Top

2 - 3டி3 - நாழிகை - 24 நிமிடங்கள். இந்திய நேரக் கணக்குப்படி, நாளுக்கு 24 நிமிடங்கள் கொண்ட 60 நாழிகைகளாகும். மேற்கத்திய கணக்குப்படி 60 நிமிடங்கள் கொண்ட 24 மணிகள் ஒரு நாளாகும்.

2 - 3டி3ய தோ3வகு - தமிழ் அகராதியின்படி, 7.5 நாழிகை அல்லது 180 நிமிடங்கள், 'காத தூரம்', அதாவது 10 மைல் அல்லது 16 கி.மீ எனப்படும். அந்த முறையில், 'நாழிகை வழி' என்பது தோராயமாக 2.1 கீ.மீ ஆகும். 'அரை நாழிகை வழி' என்பது, தோராயமாக 1 கி.மீ ஆகும்.

சுரம் - இசையின் ஏழு சுரங்கள்

Top


Updated on 11 Feb 2011

No comments: