ஸீதம்ம மாயம்ம ஸ்ரீ ராமுடு3 மா தண்ட்3ரி
அனுபல்லவி
வாதாத்மஜ ஸௌமித்ரி வைனதேய ரிபு மர்த3ன
தா4த ப4ரதாது3லு ஸோத3ருலு மாகு ஓ மனஸா (ஸீ)
சரணம்
பரமேஸ1 வஸிஷ்ட2 பராஸ1ர நாரத3 ஸௌ1னக ஸு1க
ஸுர பதி கௌ3தம லம்போ3த3ர கு3ஹ 1ஸனகாது3லு
த4ர நிஜ பா4க3வதாக்3ரேஸருலெவரோ 2வாரெல்லரு
வர த்யாக3ராஜுனிகி பரம பா3ந்த4வுலு மனஸா (ஸீ)
பொருள் - சுருக்கம்
ஓ மனமே!
- சீதம்மா நமது தாயார், ஸ்ரீ ராமன் நமது தந்தை.
- வாயு மைந்தன், சௌமித்திரி, வினதை மைந்தன், சத்துருக்கினன், தாதை, பரதன்
- ஆகியோர் சோதரர்கள் நமக்கு.
- பரமேசன், வசிட்டர், பராசரர், நாரதர், சௌனகர், சுகர், தேவர் தலைவன், கௌதமர், லம்போதரன், குகன், சனகாதியர்,
- புவியில் நிச பாகவதர்களில் தலைசிறந்தோர் எவரோ, அவர் யாவரும்
- பரமேசன், வசிட்டர், பராசரர், நாரதர், சௌனகர், சுகர், தேவர் தலைவன், கௌதமர், லம்போதரன், குகன், சனகாதியர்,
- அருளுடைத் தியாகராசனுக்கு நெருங்கிய சுற்றத்தினர்.
- சீதம்மா நமது தாயார், ஸ்ரீ ராமன் நமது தந்தை
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸீதம்ம/ மா/-அம்ம/ ஸ்ரீ ராமுடு3/ மா/ தண்ட்3ரி/
சீதம்மா/ நமது/ தாயார்/ ஸ்ரீ ராமன்/ நமது/ தந்தை/
அனுபல்லவி
வாத/-ஆத்மஜ/ ஸௌமித்ரி/ வைனதேய/ ரிபு/ மர்த3ன/
வாயு/ மைந்தன்/ சௌமித்திரி/ வினதை மைந்தன்/ (எதிரியை/ அழிப்போன்) சத்துருக்கினன்/
தா4த/ ப4ரத/-ஆது3லு/ ஸோத3ருலு/ மாகு/ ஓ மனஸா/ (ஸீ)
தாதை/ பரதன்/ ஆகியோர்/ சோதரர்கள்/ நமக்கு/ ஓ மனமே/
சரணம்
பரம-ஈஸ1/ வஸிஷ்ட2/ பராஸ1ர/ நாரத3/ ஸௌ1னக/ ஸு1க/
பரமேசன்/ வசிட்டர்/ பராசரர்/ நாரதர்/ சௌனகர்/ சுகர்/
ஸுர/ பதி/ கௌ3தம/ லம்ப3/-உத3ர/ கு3ஹ/ ஸனக-ஆது3லு/
தேவர்/ தலைவன்/ கௌதமர்/ (பெரு/ வயிற்றோன்) லம்போதரன்/ குகன்/ சனகாதியர்/
த4ர/ நிஜ/ பா4க3வத/-அக்3ரேஸருலு/-எவரோ/ வாரு/-எல்லரு/
புவியில்/ நிச/ பாகவதர்களில்/ தலைசிறந்தோர்/ எவரோ/ அவர்/ யாவரும்/
வர/ த்யாக3ராஜுனிகி/ பரம/ பா3ந்த4வுலு/ மனஸா/ (ஸீ)
அருளுடை/ தியாகராசனுக்கு/ நெருங்கிய/ சுற்றத்தினர்/ மனமே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - வாரெல்லரு - வாரெல்லனு : இவ்விடத்தில், 'வாரெல்லரு' என்பதே பொருந்தும்.
மேற்கோள்கள்
1 - ஸனகாது3லு - சனகாதியர் - சனர், சனகர், சனற்குமாரர், சனந்தனர் - பிரமனின் மைந்தர்கள்
Top
விளக்கம்
வாயு மைந்தன் - அனுமன்
சௌமித்திரி - இலக்குவன்
வினதை மைந்தன் - கருடன்
தாதை - பிரமன்
பரமேசன் - சிவன்
வசிட்டர், பராசரர், நாரதர், சௌனகர், சுகர், கௌதமர் - முனிவர்கள்
லம்போதரன் - கணபதி
குகன் - முருகன்
Top
Updated on 12 Feb 2011
No comments:
Post a Comment