Thursday, February 10, 2011

தியாகராஜ கிருதி - முத்3து3 மோமு - ராகம் சூர்ய காந்தம் - Muddu Momu - Raga Surya Kantam

பல்லவி
1முத்3து3 மோமு ஏலாகு3 செலங்கெ3னோ
2முனுலெட்ல கனி மோஹிஞ்சிரோ

அனுபல்லவி
3கத்33னுசுனு சிர காலமு ஹ்ரு23யமு
4கரகி3 கரகி3 நில்சு வாரிகெது3ட ராமுனி (மு)

சரணம்
மனஸு நிர்மலமகு3 5பூ4-ஸுர க்ரு2தமௌ
மஞ்சி பூஜா ப2லமோ தொலுதடி தபமோ
4ன நிப4 தே3ஹுனி ஜனன ஸ்வபா4வமோ
64ன பதி ஸகு2டை3ன த்யாக3ராஜார்சிதுனி (மு)


பொருள் - சுருக்கம்
  • கொஞ்சுமுகம் எவ்விதம் தோன்றியதோ!
  • முனிவர்கள் எங்ஙனம், கண்டு, மோகித்தனரோ!

  • நடக்குமென, நெடுநாள் உள்ளம் உருகியுருகி நிற்போர் முன்பு, இராமனின் கொஞ்சுமுகம் எவ்விதம் தோன்றியதோ!

    • உள்ளம் தூய்மையான அந்தணர்கள் செய் நல் வழிபாட்டின் பயனோ! முந்தையத் தவமோ!
    • கார்முகில் நிகர் உடலோனின் பிறவி இயல்போ!

  • குபேரன் நண்பனாம், தியாகராசன் தொழுவோனின் கொஞ்சுமுகம் எவ்விதம் தோன்றியதோ!
  • முனிவர்கள் எங்ஙனம், கண்டு, மோகித்தனரோ!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
முத்3து3/ மோமு/ ஏலாகு3/ செலங்கெ3னோ/
கொஞ்சு/ முகம்/ எவ்விதம்/ தோன்றியதோ/

முனுலு/-எட்ல/ கனி/ மோஹிஞ்சிரோ/
முனிவர்கள்/ எங்ஙனம்/ கண்டு/ மோகித்தனரோ/


அனுபல்லவி
கத்3து3/-அனுசுனு/ சிர/ காலமு/ ஹ்ரு23யமு/
(உண்டு) நடக்கும்/ என/ நெடு/ நாள்/ உள்ளம்/

கரகி3/ கரகி3/ நில்சு வாரிகி/-எது3ட/ ராமுனி/ (மு)
உருகி/ யுருகி/ நிற்போர்/ முன்பு/ இராமனின்/ கொஞ்சுமுகம்...


சரணம்
மனஸு/ நிர்மலமகு3/ பூ4-ஸுர/ க்ரு2தமௌ/
உள்ளம்/ தூய்மையான/ அந்தணர்கள்/ செய்/

மஞ்சி/ பூஜா/ ப2லமோ/ தொலுதடி/ தபமோ/
நல்/ வழிபாட்டின்/ பயனோ/ முந்தைய/ தவமோ/

4ன/ நிப4/ தே3ஹுனி/ ஜனன/ ஸ்வபா4வமோ/
கார்முகில்/ நிகர்/ உடலோனின்/ பிறவி/ இயல்போ/

4ன பதி/ ஸகு2டை3ன/ த்யாக3ராஜ/-அர்சிதுனி/ (மு)
குபேரன்/ நண்பனாம்/ தியாகராசன்/ தொழுவோனின்/ கொஞ்சுமுகம்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
5 - பூ4-ஸுர க்ரு2தமௌ - பூ4-ஸுர க்ரு2தமோ : 'க்ரு2தமோ' என்ற சொல் தனிப்படப் பொருள் ஏதும் தராது. இது 'மஞ்சி பூஜா ப2லமோ' என்பதுடன் இணைத்தால்தான் பொருள் நிறைவுறும். எனவே 'க்ரு2தமௌ' என்பதே பொருந்தும்.

Top

மேற்கோள்கள்
2 - முனுலெட்ல கனி மோஹிஞ்சிரோ - முனிவர்கள் எங்ஙனம், கண்டு, மோகித்தனரோ! - தண்டகாரண்ய முனிவர்களே ஆய்ச்சியராகப் பிறந்தனர் -

"....60,000 முனிவர்களும் விஷ்ணுவின் அவதாரமான ராமனுடன் இணைய விரும்பினர். அதற்கு, ராமன், தான் இந்த அவதாரத்தில் 'ஒர் பத்தினி விரதன்' என்றும், தனது அடுத்த அவதாரமான கிருஷ்ணாவதாரத்தில், முனிவர்கள் ஆய்ச்சியராகப் பிறந்து, அவர்கள் கோரியதைப் பெறலாம் என்றும் வாக்களித்தான்...."

Top

இதனையே, தியாகராஜர், தமது 'நௌக சரித்திரம்' எனப்படும் 'ஓடக்கதை'யின் 'பெருகு3 பாலு பு4ஜியிஞ்சி' என்ற க4ண்டா ராக கீர்த்தனையில், ஆய்ச்சியர் வாயிலாக வெளிப்படுத்துகின்றார் -

"கோடி ஜன்மங்கள் தவம் இயற்றி, கோரியதெல்லாம் இதற்கா?"

4 - கரகி3 கரகி3 நில்சு வாரு - உருகியுருகி நிற்போர் - இது, தண்டகாரண்ய முனிவர்களைக் குறிக்கும். வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், 116-வது அத்தியாயத்தினையும், ஆரண்ய காண்டம், முதலாவது அத்தியாயத்தினையும் நோக்கவும்.

6 - 4ன பதி ஸகு2டை3 - குபேரனின் நண்பனாம் - சிவனைக் குறிக்கும் - சிவ மகா புராணம், ருத்ர சம்ஹிதை - குணநிதி என்ற அந்தணன் கதை நோக்கவும்.

Top

விளக்கம்
1 - முத்3து3 மோமு - கொஞ்சு முகம். தியாகராஜர், தமது, 'எந்த முத்3தோ3' என்ற பி3ந்து3 மாலினி ராக கீர்த்தனையில், இறைவனைக் காதலிக்காது, காம வசப்பட்டுத் திரியும் மக்களைக் கண்டு இரக்கப்படுகின்றார்.

3 - கத்3து3 - உண்டு - நடக்கும். இது, 'ராமாவதாரம் நிகழும்; ராமன் வந்து தங்களைக் காப்பான்' என்று முனிவர்கள் கொண்டிருந்த திடமான நம்பிக்கையினைக் குறிக்கும்.

5 - பூ4-ஸுர - அந்தணர்கள் - இது வசிட்டர், விசுவாமித்திரர், அகத்தியர் போன்ற உயர்ந்த முனிவர்களைக் குறிக்கலாம்.

6 - 4ன பதி ஸகு2டை3ன த்யாக3ராஜார்சித - குபேரனின் நண்பனாம் தியாகராஜன் தொழுத - புத்தகங்களில் இது சிவனைக் குறிப்பதாகக் கொள்ளப்பட்டுள்ளது. அதுவே பொருந்தும்.

முந்தையத் தவமோ - அந்தணர்களைக் குறிக்கும்
தியாகராசன் - இது திருவாரூர் சிவனைக் குறிக்கும்

Top


Updated on 10 Feb 2011

No comments: