Tuesday, February 8, 2011

தியாகராஜ கிருதி - சல்லக3 நாதோ - ராகம் வேக வாஹினி - Challaga Naato - Raga Vega Vahini

பல்லவி
சல்லக3 நாதோ பல்குமீ ராம
ஸாரஸ வத3ன ஸாது4 ஸந்த்ராண

அனுபல்லவி
உல்லமுனனு நீகே மருலுகொன்னானு
உரக31யன நா தப்புலெஞ்சக நீவு (ச)

சரணம்
நிருபம ஸூ1ர நிகி2லாதா4
1பர காமினீ தூ3 பாப விதா3
ஸரஸிஜ நேத்ர ஸ்1யாமள கா3த்ர
வர த்யாக3ராஜ ஹ்ரு2த்3-வாரிஜ மித்ர (ச)


பொருள் - சுருக்கம்
  • இராமா! கமல வதனனே! சாதுக்களைச் சிறக்கக் காப்போனே!
  • அரவணையோனே!
  • உவமையற்ற சூரனே! பல்லுலகிற்கும் ஆதாரமே! பிற பெண்டிர்க்கு எட்டாதவனே! பாவம் களைவோனே! கமலக்கண்ணா! கருநீல உருவே! தியாகராசனின் இதயக் கமலத்தின் உயர் பரிதியே!

    • குளுமையாக என்னுடன் பேசேன்.

    • (எனது) உள்ளத்தில் உன்னிடமே காதல் கொண்டேன்.
    • எனது தவறுகளையெண்ணாதே.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
சல்லக3/ நாதோ/ பல்குமீ/ ராம/
குளுமையாக/ என்னுடன்/ பேசேன்/ இராமா/

ஸாரஸ/ வத3ன/ ஸாது4/ ஸந்த்ராண/
கமல/ வதனனே/ சாதுக்களை/ சிறக்கக் காப்போனே/


அனுபல்லவி
உல்லமுனனு/ நீகே/ மருலுகொன்னானு/
(எனது) உள்ளத்தில்/ உன்னிடமே/ காதல் கொண்டேன்/

உரக3/ ஸ1யன/ நா/ தப்புலு/-எஞ்சக/ நீவு/ (ச)
அரவு/ அணையோனே/ எனது/ தவறுகளை/ யெண்ணாதே/ நீ/ குளுமையாக...


சரணம்
நிருபம/ ஸூ1ர/ நிகி2ல/-ஆதா4ர/
உவமையற்ற/ சூரனே/ பல்லுலகிற்கும்/ ஆதாரமே/

பர/ காமினீ/ தூ3ர/ பாப/ விதா3ர/
பிற/ பெண்டிர்க்கு/ எட்டாதவனே/ பாவம்/ களைவோனே/

ஸரஸிஜ/ நேத்ர/ ஸ்1யாமள/ கா3த்ர/
கமல/ கண்ணா/ கருநீல/ உருவே/

வர/ த்யாக3ராஜ/ ஹ்ரு2த்/-வாரிஜ/ மித்ர/ (ச)
உயர்/ தியாகராசனின்/ இதய/ கமலத்தின்/ பரிதியே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - பர காமினீ தூ3 - பிற பெண்டிர்க்கு எட்டாதவன் - ராமனை, காம எண்ணத்துடன் அணுகியவள், ராவணனின் தங்கையான சூர்ப்பனகை மட்டுமே. ஆயினும், தியாகராஜர், தமது 'நாத2 ப்3ரோவவே' என்ற பை4ரவி ராக கீர்த்தனையில், 'உன்னுடைய கலகலப்பான முகக் களையினைக் கண்டு, (அயோத்தி) நகரப் பெண்டிர் ஆசைப்பட, அவர்களைத் தனது தாய்மார்களாக நீ நோக்கினாய்' என்கின்றார்.

இதயக் கமலத்தின் பரிதி - இதயத்தினை மலரச் செய்வதனால்
Top


Updated on 09 Feb 2011

No comments: