மனஸா எடுலோர்துனே நா மனவி சேகொனவே ஓ (ம)
அனுபல்லவி
தி3ன-கர குல பூ4ஷணுனி தீ3னுட3வை ப4ஜன ஜேஸி
தி3னமு க3டு3புமனின நீவு வினவதே3ல கு3ண விஹீன (ம)
சரணம்
கலிலோ 1ராஜஸ தாமஸ கு3ணமுலு கல வாரி செலிமி
கலஸி மெலஸி திருகு3சு மரி காலமு க3ட3பகனே
ஸுலப4முகா3 கட3 தேரனு ஸூசனலனு தெலிய ஜேயு
இலனு த்யாக3ராஜு மாட வினவதே3ல கு3ண விஹீன (ம)
பொருள் - சுருக்கம்
- ஓ மனமே! குணமிலியே!
- எப்படிப் பொறுப்பேன்? எனது வேண்டுகோளை ஏற்பாய்.
- பகலவன் குல அணிகலனை, பணிவுடையோனாகி, பஜனை செய்து, நாளைக் கழிப்பாயென்றால், நீ கேளாயஃதேன்?
- கலியில், இராசத, தாமத குணங்கள் உடையோரின் நட்பினில், கூடிக்கலந்து, திரிந்துகொண்டு, மேலும் பொழுதை வீணாக்காது, எளிதாக, கடைத்தேறுதற்குக் குறிப்புகளைத் தெரியப்படுத்தும், இங்கு, தியாகராசனின் சொல்லைக் கேளாயஃதேன்?
- பகலவன் குல அணிகலனை, பணிவுடையோனாகி, பஜனை செய்து, நாளைக் கழிப்பாயென்றால், நீ கேளாயஃதேன்?
- எப்படிப் பொறுப்பேன்? எனது வேண்டுகோளை ஏற்பாய்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மனஸா/ எடுல/-ஓர்துனே/ நா/ மனவி/ சேகொனவே/ ஓ/ (ம)
மனமே/ எப்படி/ பொறுப்பேன்/ எனது/ வேண்டுகோளை/ ஏற்பாய்/ ஓ/ மனமே...
அனுபல்லவி
தி3ன-கர/ குல/ பூ4ஷணுனி/ தீ3னுட3வை/ ப4ஜன/ ஜேஸி/
பகலவன்/ குல/ அணிகலனை/ பணிவுடையோனாகி/ பஜனை/ செய்து/
தி3னமு/ க3டு3புமு/-அனின/ நீவு/ வினவு/-அதி3/-ஏல/ கு3ண/ விஹீன/ (ம)
நாளை/ கழிப்பாய்/ என்றால்/ நீ/ கேளாய்/ அஃது/ ஏன்/ குணம்/ இலியே/
சரணம்
கலிலோ/ ராஜஸ/ தாமஸ/ கு3ணமுலு/ கல வாரி/ செலிமி/
கலியில்/ இராசத/ தாமத/ குணங்கள்/ உடையோரின்/ நட்பினில்/
கலஸி/ மெலஸி/ திருகு3சு/ மரி/ காலமு/ க3ட3பகனே/
கூடி/ கலந்து/ திரிந்துகொண்டு/ மேலும்/ பொழுதை/ வீணாக்காது/
ஸுலப4முகா3/ கட3/ தேரனு/ ஸூசனலனு/ தெலிய ஜேயு/
எளிதாக/ கடை/ தேறுதற்கு/ குறிப்புகளை/ தெரியப்படுத்தும்/
இலனு/ த்யாக3ராஜு/ மாட/ வினவு/-அதி3/-ஏல/ கு3ண/ விஹீன/ (ம)
இங்கு/ தியாகராசனின்/ சொல்லை/ கேளாய்/ அஃது/ ஏன்/ குணம்/ இலியே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - ராஜஸ தாமஸ கு3ணமுலு - இராசத, தாமத குணங்கள் - முக்குணங்களைப் பற்றி கண்ணன் விவரித்ததை, கீதையின் 14-வது அத்தியாயத்தினில் காணவும்.
Top
விளக்கம்
பகலவன் குல அணிகலன் - இராமன்
Top
Updated on 07 Feb 2011
No comments:
Post a Comment