Tuesday, November 16, 2010

தியாகராஜ கிருதி - பராகு ஜேஸின - ராகம் ஜுஜாஹுளி - Paraaku Jesina - Raga Jujahuli

பல்லவி
பராகு ஜேஸின நீகேமி
2லமு 1கலிகெ3ரா பராத்பரா

அனுபல்லவி
2ஸுராவனீ ஸுராப்த மா
வராஜராபக4ன நாயெட3 (ப)

சரணம்
முதா3ன நீது3 பதா3ரவிந்த3முலனு
பட்டி ம்ரொக்கக3 லேதா3
3நிதா3ன ரூப3ரி தா3பு லேது3
உதா3ர ஸ்ரீ த்யாக3ராஜ நுத (ப)


பொருள் - சுருக்கம்
  • பராபரமே!
  • வானோர், அந்தணரின் நற்றுணையே! இலக்குமி மணாளா! தளர்வற்ற உடலோனே!
  • நிதான உருவே! வள்ளலே! தியாகராசன் போற்றுவோனே!

  • அசட்டை செய்தவுனக்கென்ன பயன் கிடைத்ததய்யா?
    • களிப்புடன் உனது திருவடித் தாமரைகளைப் பற்றி வணங்கவில்லையா?
    • புகலோ, நீழலோ, இல்லை;


  • என்னிடம் அசட்டை செய்தவுனக்கென்ன பயன் கிடைத்ததய்யா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பராகு/ ஜேஸின/ நீகு/-ஏமி/
அசட்டை/ செய்த/ உனக்கு/ என்ன/

2லமு/ கலிகெ3ரா/ பராத்பரா/
பயன்/ கிடைத்ததய்யா/ பராபரமே/


அனுபல்லவி
ஸுர/-அவனீ ஸுர/-ஆப்த/ மா/
வானோர்/ அந்தணரின்/ நற்றுணையே/ இலக்குமி/

வர/-அஜர/-அபக4ன/ நாயெட3/ (ப)
மணாளா/ தளர்வற்ற/ உடலோனே/ என்னிடம்/ அசட்டை...


சரணம்
முதா3ன/ நீது3/ பத3/-அரவிந்த3முலனு/
களிப்புடன்/ உனது/ திருவடி/ தாமரைகளை/

பட்டி/ ம்ரொக்கக3 லேதா3/
பற்றி/ வணங்கவில்லையா/

நிதா3ன/ ரூப/ த3ரி/ தா3பு/ லேது3/
நிதான/ உருவே/ புகலோ/ நீழலோ/ இல்லை/

உதா3ர/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/ (ப)
வள்ளலே/ ஸ்ரீ தியாகராசன்/ போற்றுவோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கலிகெ3ரா - கலுகு3ரா : இவ்விடத்தில் 'கலிகெ3ரா' என்பதே பொருந்தும்.

2 - ஸுராவனீ ஸுராப்த - ஸுராவன ஸுராப்த.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
3 - நிதா3ன ரூப - நிதான உரு - 'ஆதி காரணம்' என்றோ, 'நிதானமானவன்' என்றோ கொள்ளலாம்.

பராபரம் - பரம்பொருள்

Top


Updated on 16 Nov 2010

No comments: