ஸமயமு ஏமரகே மனஸா
அனுபல்லவி
ஸுமதுலௌ நருலனு ஜேரி 1நிஜ
ஸுக2மனுப4விஞ்சுடகு 2நீகிதி3 (ஸ)
சரணம்
3அந்தரங்க3முன கலுகு3 ப4யமுன
4ஆந்தரிக ப4க்தி மார்க3மு தெலிஸி
தா3ந்த ஸம்ரக்ஷகுடை3ன ஸ்ரீ
த்யாக3ராஜ ஸன்னுதுனி ஜூட3 (ஸ)
பொருள் - சுருக்கம்
மனமே!
- (இதுவே) தருணம்; ஏமாறாதே.
- மெய்யறிஞர்களாகிய மனிதர்களுடன் இணங்கி,
- உண்மையான சுகத்தினை அனுபவிப்பதற்கு, உனக்கிதுவே தருணம்.
- உள்ளத்தினில் உண்டாகும் அச்சத்துடன்,
- உட்புற பக்தி நெறியினைத் தெரிந்து,
- தவசிகளைப் பேணுவோனாகிய, தியாகராசன் மிக்கு போற்றுவோனை தரிசிக்க,
- உள்ளத்தினில் உண்டாகும் அச்சத்துடன்,
- தருணம் (இதுவே);
- ஏமாறாதே.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸமயமு/ ஏமரகே/ மனஸா/
(இதுவே) தருணம்/ ஏமாறாதே/ மனமே/
அனுபல்லவி
ஸுமதுலௌ/ நருலனு/ ஜேரி/ நிஜ/
மெய்யறிஞர்களாகிய/ மனிதர்களுடன்/ இணங்கி/ உண்மையான/
ஸுக2மு/-அனுப4விஞ்சுடகு/ நீகு/-இதி3/ (ஸ)
சுகத்தினை/ அனுபவிப்பதற்கு/ உனக்கு/ இதுவே/ தருணம்...
சரணம்
அந்தரங்க3முன/ கலுகு3/ ப4யமுன/
உள்ளத்தினில்/ உண்டாகும்/ அச்சத்துடன்/
ஆந்தரிக/ ப4க்தி/ மார்க3மு/ தெலிஸி/
உட்புற/ பக்தி/ நெறியினை/ தெரிந்து/
தா3ந்த/ ஸம்ரக்ஷகுடை3ன/
தவசிகளை/ பேணுவோனாகிய/
ஸ்ரீ த்யாக3ராஜ/ ஸன்னுதுனி/ ஜூட3/ (ஸ)
ஸ்ரீ தியாகராசன்/ மிக்கு போற்றுவோனை/ தரிசிக்க/ தருணம்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - நீகிதி3 - நீகிதே3.
4 - ஆந்தரிக - ஆந்தரீக.
Top
மேற்கோள்கள்
4 - ஆந்தரிக ப4க்தி மார்க3மு - உட்புற பக்தி நெறி - இறைவனை உள்ளத்தில் வழிபடுதல் - புனித தலங்களுக்குச் செல்லல், கடவுளின் மூர்த்தி மற்றும் சின்ன வழிபாடு, புனித புத்தகங்களைப் படித்தல் ஆகியவை, 'உட்புற பக்தி'க்கு முந்தைய நிலையான ‘வெளிப்புற பக்தி’ (bAhya bhakti) எனப்படும்
Top
விளக்கம்
1 - நிஜ ஸுக2மு - உண்மையான சுகம். இது குறித்து கடோபநிடதத்தினில் கூறப்பட்டது -
"நல்லது, இனியது, இவையிரண்டும் மனிதனை அணுகுகின்றன.
தீரன், இவற்றினை பாகுபடுத்துகின்றான்.
தீரன், இனியதினும், நல்லதைத் தேர்ந்தெடுக்கின்றான்.
ஆனால் அறிவிலியோ, தனது உலக சௌக்கியத்திற்காக, இனியதை ஏற்கின்றான்."(I-ii-2)
(ஸ்வாமி கம்பீராநந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
Top
3 - அந்தரங்க3முன கலுகு3 ப4யமுன - உள்ளத்தினில் உண்டாகும் அச்சத்துடன். இதற்கு, சில புத்தகங்களில், 'அச்சத்தினை வெல்லவேண்டும்' என்றும், மற்றவற்றில், 'உள்ளத்தில் ஏற்படும் அச்சத்திற்கிடையே' என்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனக்குத் தெரிந்தவரையில், இங்கு 'அச்சம்' எனப்பட்டது, மிக்குப் புனிதமானவர்களை, புனிதப் பொருள்களை அணுகும்போது, நம்முள் உண்டாகும் 'பயபக்தி' எனப்படும் 'ஒடுக்கம் கலந்த வணக்கத்தினை'க் குறிக்கும். ஒரு தொண்டனுக்கு, இந்த 'பயபக்தி' மிகவும் தேவையானது, அதுவும் பக்தியின் ஆரம்ப நிலைகளில். ஆனால், இந்த 'பயபக்தி' என்பது கீதையில் கூறப்பட்ட 'அச்சத்தினின்றும் விடுபடுவதற்காக மேற்கொள்ளப்படும் பக்தி'யினின்றும் மாறுபட்டது.
Top
பக்தி இருவகைப்படும் - நோக்கத்துடன் இயற்றப்படும் 'கௌ3ண (குணங்களுடன் கூடிய) பக்தி' மற்றும், நோக்கமின்றி, இறைக் காதலுடன் இயற்றப்படும், 'முக்கிய பக்தி' அல்லது 'பரபக்தி' யென. இவற்றில், 'அச்சத்தினின்றும் விடுபட மேற்கொள்ளப்படும் பக்தி', கீழ்க்கூறப்பட்ட 'துயருற்றோர்' என்ற வகையினைச் சேரந்த 'கௌ3ண பக்தி'யாகும்.
கீதையில் (7-வது அத்தியாயம், 16-வது செய்யுள்) கண்ணன் கூறியது -
"என்னை, நான்கு விதமாக, நல்வினை இயற்றும் மக்கள் வழிபடுவர், அர்ஜுனா!
துயருற்றோர், மெய்யறிவு வேண்டுவோர், பொருள் வேண்டுவோர் மற்றும் ஞானி என, பரதர்களில் இடபமே! "
(ஸ்வாமி ஸ்வரூபாநந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
Top
Updated on 15 Nov 2010
No comments:
Post a Comment