ஏ ராமுனி நம்மிதினோ
நேனே பூல பூஜ ஜேஸிதினோ
அனுபல்லவி
வாரமு நிஜ தா3ஸ வருலகு ரிபுலைன
வாரி 1மத3மணசே ஸ்ரீ ராமுடு3 காதோ3 (ஏ)
சரணம்
சரணம் 1
ஏகாந்தமுன ஸீத ஸோகோர்சி ஜோ-கொ3ட்ட
காகாஸுருடு3 சேயு சீகாகு ஸைரிஞ்சுகோக
2மதி3னி த3ய லேக பா3ணமு வேஸி
3ஏகாக்ஷுனி ஜேஸின ஸாகேத பதி காதோ3 (ஏ)
சரணம் 2
தா3ர புத்ருல வத்3த3 சேரனீக ரவி
குமாருனி வெலபட பார-தோ3லி 4கி3ரி
ஜேர ஜேஸினட்டி தாரா நாயகுனி
ஸம்ஹாரமு ஜேஸின ஸ்ரீ ராமுடு3 காதோ3 (ஏ)
சரணம் 3
ரோஷமுனாடு3 து3ர்-பா4ஷலனு வினி
விபீ4ஷணுடா3 வேள கோ4ஷிஞ்சி ஸ1ரணன
தோ3ஷ ராவணு மத3 ஸோ1ஷகுடை3ன
5நிர்-தோ3ஷ த்யாக3ராஜ போஷகுடு3 காதோ3 (ஏ)
பொருள் - சுருக்கம்
- எந்த இராமனை நம்பினேனோ?
- நானெந்த மலர்களினால் வழிபட்டேனோ?
- என்றும் சிறந்த உண்மைத் தொண்டரின் பகைவரான அவர்களின் செருக்கினையடக்கும் இராமனல்லவோ?
- தனிமையில், சீதை, காகாசுரனைப் பொறுத்துத் தாலாட்ட,
- காகாசுரன் செய்யும் தொல்லைப் பொறுத்துக்கொள்ளாது,
- உள்ளத்தில் கருணையின்றி, அத்திரம் எய்து,
- தனிமையில், சீதை, காகாசுரனைப் பொறுத்துத் தாலாட்ட,
- ஒர் கண்ணனாகச் செய்த சாகேத மன்னனல்லவோ?
- மனைவி மக்களை அண்டவொட்ட விடாது,
- பரிதி மைந்தனை வெளியே விரட்டியடித்து,
- மலையினை அடையச்செய்தவனாகிய,
- மனைவி மக்களை அண்டவொட்ட விடாது,
- தாரா நாயகனை வதைத்த இராமனல்லவோ?
- சினத்துடன் கூறும் ஏச்சுச் சொற்களைக் கேட்டு,
- விபீடணன் அவ்வேளை பறைசாற்றிச் சரணென,
- குற்றவாளி இராவணின் செருக்கினை வற்றச்செய்த,
- சினத்துடன் கூறும் ஏச்சுச் சொற்களைக் கேட்டு,
- குற்றமற்ற, தியாகராசனைப் பேணுவோனல்லவோ?
- எந்த இராமனை நம்பினேனோ?
- நானெந்த மலர்களினால் வழிபட்டேனோ?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏ/ ராமுனி/ நம்மிதினோ/
எந்த/ இராமனை/ நம்பினேனோ/
நேனு/-ஏ/ பூல/ பூஜ ஜேஸிதினோ/
நான்/ எந்த/ மலர்களினால்/ வழிபட்டேனோ/
அனுபல்லவி
வாரமு/ நிஜ/ தா3ஸ/ வருலகு/ ரிபுலைன/
என்றும்/ உண்மை/ தொண்டரிற்/ சிறந்தோர்/ பகைவரான/
வாரி/ மத3மு/-அணசே/ ஸ்ரீ ராமுடு3/ காதோ3/ (ஏ)
அவர்களின்/ செருக்கினை/ யடக்கும்/ ஸ்ரீ ராமன்/ அல்லவோ/
சரணம்
சரணம் 1
ஏகாந்தமுன/ ஸீத/ ஸோகு/-ஓர்சி/ ஜோ-கொ3ட்ட/
தனிமையில்/ சீதை/ (காக) அசுரனைப்/ பொறுத்து/ தாலாட்ட/
காக/-அஸுருடு3/ சேயு/ சீகாகு/ ஸைரிஞ்சுகோக/
காக/ அசுரன்/ செய்யும்/ தொல்லை/ பொறுத்துக்கொள்ளாது/
மதி3னி/ த3ய/ லேக/ பா3ணமு/ வேஸி/
உள்ளத்தில்/ கருணை/ யின்றி/ அத்திரம்/ எய்து/
ஏக/-அக்ஷுனி/ ஜேஸின/ ஸாகேத/ பதி/ காதோ3/ (ஏ)
ஒர்/ கண்ணனாக/ செய்த/ சாகேத/ மன்னன்/ அல்லவோ/
சரணம் 2
தா3ர/ புத்ருல/ வத்3த3/ சேரனு/-ஈக/ ரவி/
மனைவி/ மக்களை/ அண்ட/ வொட்ட/ விடாது/ பரிதி/
குமாருனி/ வெலபட/ பார/-தோ3லி/ கி3ரி/
மைந்தனை/ வெளியே/ விரட்டி/ யடித்து/ மலையினை/
ஜேர/ ஜேஸின-அட்டி/ தாரா/ நாயகுனி/
அடைய/ செய்தவனாகிய/ தாரா/ நாயகனை/
ஸம்ஹாரமு ஜேஸின/ ஸ்ரீ ராமுடு3/ காதோ3/ (ஏ)
வதைத்த/ ஸ்ரீ ராமன்/ அல்லவோ/
சரணம் 3
ரோஷமுன/-ஆடு3/ து3ர்/-பா4ஷலனு/ வினி/
சினத்துடன்/ கூறும்/ ஏச்சு/ சொற்களை/ கேட்டு/
விபீ4ஷணுடு3/-ஆ/ வேள/ கோ4ஷிஞ்சி/ ஸ1ரணு/-அன/
விபீடணன்/ அந்த/ வேளை/ பறைசாற்றி/ சரண்/ என/
தோ3ஷ/ ராவணு/ மத3/ ஸோ1ஷகுடை3ன/
குற்றவாளி/ இராவணின்/ செருக்கினை/ வற்றச்செய்த/
நிர்-தோ3ஷ/ த்யாக3ராஜ/ போஷகுடு3/ காதோ3/ (ஏ)
குற்றமற்ற/ தியாகராசனை/ பேணுவோன்/ அல்லவோ/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மத3மணசே - மத3மணசு.
3 - ஏகாக்ஷுனி ஜேஸின - ஏகாக்ஷுனி ஜேயு : இரண்டாவது சரணத்தில் வரும், 'ஸம்ஹாரமு ஜேஸின' என்பதைக் கருதி, 'ஏகாக்ஷுனி ஜேஸின' என்பது ஏற்கப்பட்டது.
Top
மேற்கோள்கள்
2 - மதி3னி த3ய லேக - உள்ளத்தினில் கருணையின்றி. தியாகராஜர், தமது 'பாஹி ரமா ரமண' என்ற வராளி ராக கீர்த்தனையில், இங்ஙனமே, ஆனால் மறைமுகமாக, 'கிளிக்குஞ்சுக்கு பிரமாத்திரம் தகுமா?' என்று கேட்கின்றார். சீதை, காக்கையரக்கன், தனது தனங்களைக் கொத்திக் காயப்படுத்தியும், அந்த வலியினைப் பொறுத்துக்கொண்டு, தனது மடியில் உறங்கும் கணவனுக்குத் தாலாட்டுப் பாடினாள்; ஆனால், இராமனோ, காக்கையரக்கனின் குற்றத்தினைப் பொறுக்காது, பிரமாத்திரம் எய்து, அவனை ஓர்கண்ணனாக்கினான் என்று, இந்த கீர்த்தனையில் சீதையையும் ராமனையும் ஒப்பிடுகின்றார். காக்கையரக்கன் ஓர்கண்ணனானது.
4 - கி3ரி - மலை - ருஷ்யமூகம் எனப்படும் மலையினை சுக்கிரீவன் அடைந்தான்
Top
விளக்கம்
5 - நிர்-தோ3ஷ - குற்றமற்ற - இது, தியாகராஜரையோ, இராமனையோ குறிக்கலாம்.
காயம் பொறுத்து - காகாசுரன் சீதையின் தனங்களைக் கொத்திக் காயப்படுத்தினான்.
தாலாட்ட - தனது மடியில் உறங்கும் கணவனுக்கு
காகாசுரன் - காக்கை வடிவில் அரக்கன்
அத்திரம் - பிரமாத்திரம்.
ஓர் கண்ணனாக - இரண்டு கண்களிலொன்றைப் பறித்து
பரிதி மைந்தன் - சுக்கிரீவன்
தாரா - வாலியின் மனைவி - தாரா நாயகன் - வாலி
சினத்துடன் கூறும் ஏச்சுச் சொற்கள் - இராவணன் விபீடணனை நோக்கிக் கூறயவை.
Top
Updated on 17 Nov 2010
No comments:
Post a Comment