Thursday, November 18, 2010

தியாகராஜ கிருதி - நீ த3ய ராதா3 - ராகம் வசந்த பைரவி - Ni Daya Rada - Raga Vasanta Bhairavi

பல்லவி
நீ த3ய ராதா3

அனுபல்லவி
காத3னே வாரெவரு கல்யாண ராம (நீ)

சரணம்
சரணம் 1
நன்னு 1ப்3ரோசுவாரிலனு நாடே3 தெலிய
இன வம்ஸ1 திலக நீகிந்த தாமஸமா (நீ)


சரணம் 2
2அன்னிடிகினதி4காருட3னி நே பொக3டி3தே
3மன்னிஞ்சிதே நீது3 மஹிமகு தக்குவா (நீ)


சரணம் 3
ராம ராம ராம த்யாக3ராஜ ஹ்ரு2த்-ஸத3
நா மதி3 4தல்லடி3ல்லெ ந்யாயமா வேக3மே (நீ)


பொருள் - சுருக்கம்
  • கலியாண இராமா!
  • இனகுலத் திலகமே!
  • இராமா! தியாகராசனின் இதயத்துறைவோனே!

  • உனது தயை வாராதா?
  • கூடாதென்பவர் யார்?

    • என்னைக் காப்பவர் இவ்வுலகில் (நீயென) அன்றே அறிந்தும், உனக்கித்தனைத் தாமதமா?
    • அனைத்திற்கும் அதிகாரியென (உன்னை) நான் புகழ்ந்தும், (என்னை) மன்னித்தால் உனது மகிமைக்குக் குறைவா?

    • எனதுள்ளம் தடுமாறுகின்றது; நியாயமா?


  • வேகமாக உனது தயை வாராதா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீ/ த3ய/ ராதா3/
உனது/ தயை/ வாராதா/


அனுபல்லவி
காது3/-அனே வாரு/-எவரு/ கல்யாண/ ராம/ (நீ)
கூடாது/ என்பவர்/ யார்/ கலியாண/ இராமா/


சரணம்
சரணம் 1
நன்னு/ ப்3ரோசுவாரு/-இலனு/ நாடே3/ தெலிய/
என்னை/ காப்பவர்/ இவ்வுலகில்/ (நீயென) அன்றே/ அறிந்தும்/

இன/ வம்ஸ1/ திலக/ நீகு/-இந்த/ தாமஸமா/ (நீ)
இன/ குல/ திலகமே/ உனக்கு/ இத்தனை/ தாமதமா/


சரணம் 2
அன்னிடிகி/-அதி4காருடு3/-அனி/ நே/ பொக3டி3தே/
அனைத்திற்கும்/ அதிகாரி/ யென/ (உன்னை) நான்/ புகழ்ந்தும்/

மன்னிஞ்சிதே/ நீது3/ மஹிமகு/ தக்குவா/ (நீ)
(என்னை) மன்னித்தால்/ உனது/ மகிமைக்கு/ குறைவா/


சரணம் 3
ராம/ ராம/ ராம/ த்யாக3ராஜ/ ஹ்ரு2த்/-ஸத3ன/
இராமா/ இராமா/ இராமா/ தியாகராசனின்/ இதயத்து/ உறைவோனே/

நா/ மதி3/ தல்லடி3ல்லெ/ ந்யாயமா/ வேக3மே/ (நீ)
எனது/ உள்ளம்/ தடுமாறுகின்றது/ நியாயமா/ வேகமாக/ உனது...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ப்3ரோசுவாரிலனு - ப்3ரோவுவாரிலனு.

2 - அன்னிடிகினதி4காருட3னி - அன்னிடிகதி4காரிவனி.

4 - தல்லடி3ல்லெ - தல்லடி3ல்லக3.

Top

மேற்கோள்கள்


விளக்கம்
3 - மன்னிஞ்சிதே - மன்னித்தால் - 'மதித்தால்' என்றும் கொள்ளலாம்

இன குலம் - பரிதி குலம்

Top


Updated on 18 Nov 2010

No comments: