மேரு ஸமான தீ4ர வரத3 ரகு4
வீர ஜூதாமு ராரா மஹா (மேரு)
அனுபல்லவி
1ஸார ஸார ஒய்யாரபு நட3லனு
நீரத3 காந்தினி நீ டீ2வினி மஹா (மேரு)
சரணம்
அலகல முத்3து3னு திலகபு தீருனு
தளுகு செக்குலசே தனரு நெம்மோமுனு
க3ளமுன ஸோ1பி4ல்லு கனக பூ4ஷணமுல
த3ளித து3ர்-மானவ த்யாக3ராஜார்சித (மேரு)
பொருள் - சுருக்கம்
- மகாமேரு நிகர் தீரனே! வரதா! இரகுவீரா!
- சாரத்தின் சாரமே!
- தீயோரை வதைத்தோனே! தியாகராசன் வழிபடுவோனே!
- காண்போம்.
- வாருமய்யா.
- ஒய்யார நடையினை,
- கார்முகில் (நிகர்) ஒளியினை,
- உனது மாட்சிமையினை,
- (முடிச்) சுருளல்களின் ஒயிலினை,
- திலகத்தின் நேர்த்தியினை,
- தளுக்குக் கன்னங்களுடன் மின்னும் இன்முகத்தினை,
- கழுத்தில் மிளிரும் பொன் அணிகலன்களினை,
- ஒய்யார நடையினை,
- காண்போம்.
- வாருமய்யா.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மேரு/ ஸமான/ தீ4ர/ வரத3/ ரகு4/
மேரு/ நிகர்/ தீரனே/ வரதா/ இரகு/
வீர/ ஜூதாமு/ ராரா/ மஹா/ (மேரு)
வீரா/ காண்போம்/ வாருமய்யா/ மகா/ மேரு...
அனுபல்லவி
ஸார/ ஸார/ ஒய்யாரபு/ நட3லனு/
சாரத்தின்/ சாரமே/ ஒய்யார/ நடையினை/
நீரத3/ காந்தினி/ நீ/ டீ2வினி/ மஹா/ (மேரு)
கார்முகில்/ (நிகர்) ஒளியினை/ உனது/ மாட்சிமையினை/ மகா/ மேரு...
சரணம்
அலகல/ முத்3து3னு/ திலகபு/ தீருனு/
(முடிச்) சுருளல்களின்/ ஒயிலினை/ திலகத்தின்/ நேர்த்தியினை/
தளுகு/ செக்குலசே/ தனரு/ நெம்மோமுனு/
தளுக்கு/ கன்னங்களுடன்/ மின்னும்/ இன்முகத்தினை/
க3ளமுன/ ஸோ1பி4ல்லு/ கனக/ பூ4ஷணமுல/
கழுத்தில்/ மிளிரும்/ பொன்/ அணிகலன்களினை/
த3ளித/ து3ர்-மானவ/ த்யாக3ராஜ/-அர்சித/ (மேரு)
வதைத்தோனே/ தீயோரை/ தியாகராசன்/ வழிபடும்/ மேரு...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - ஸார ஸார - சாரத்தின் சாரம் - பரம்பொருளின் இலக்கணம். இது குறித்து பிருஹதாரண்யக உபநிடதம் கூறுவது -
"....(பரம்பொருளின்) மருமப் பெயர் சத்தியத்தின் சத்தியம்; பிராணம் சத்தியமாம் - அது அதனுடைய சத்தியம்." (II. i. 20)
"பிராணத்தின் பிராணத்தினை, பார்வையின் பார்வையினை, செவியின் கேள்வியினை, உள்ளத்தின் உள்ளத்தினை அறிந்தோர், அந்த முதற்-பழம்-பொருளினை உணர்ந்தவராவர்." (IV. iv. 18)
(ஸ்வாமி மாதவானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
Top
விளக்கம்
மகாமேரு - பொன்மலை
Top
Updated on 24 Nov 2010
No comments:
Post a Comment