Tuesday, November 23, 2010

தியாகராஜ கிருதி - தே3வி ஸ்ரீ துளஸம்ம - ராகம் மாயாமாளவ கௌ3ள - Devi Sri Tulasamma - Raga Mayamalava Gaula

பல்லவி
தே3வி ஸ்ரீ துளஸம்ம ப்3ரோசுட-
கிதே3 ஸமயமம்ம மாயம்ம

அனுபல்லவி
1பாவனீ ப்3ரஹ்மேந்த்3ராது3லு நீ
4க்திசே விலஸில்லிரட மஹா(தே3வி)

சரணம்
நீவு லேக 21ங்கரு மா ரமணுடு3 3நீரஜாது3லனொல்லரட
நீவு லேக 4தீர்த2மு ஸேவிஞ்சுட நீரனுசு பேராயெனட
நீவு லேக 5த்ராஸுன ஸ்ரீ ஹரி ஸரி நில்வக 6போயெனட
நீவு லேக 7வனமாலயனி பலிகிரா
நீ ஸரியெவ்வரே த்யாக3ராஜ நுத மஹா(தே3வி)


பொருள் - சுருக்கம்
  • தேவி! துளசித்தாயே! எந்தாயே!
  • தூயவளே! மகாதேவி!
  • தியாகராசனால் போற்றப் பெற்றவளே!

  • (என்னைக்) காக்க இதுவே தருணமம்மா!

    • பிரமன் இந்திராதியர் உனது பக்தியினால் ஒளிர்ந்தனராம்!

    • நீயின்றி, சங்கரன், மா மணாளன், தாமரை ஆகியவற்றை விரும்பராம்!
    • நீயின்றி, தீர்த்தம் சேவனம் செய்ய, நீரெனப் பெயராகியதாம்!
    • நீயின்றி, தராசினில், அரிக்கு (எப்பொருளும்) சரி நில்லாமற்போனதாம்!
    • நீயின்றி, (மாலையை) வனமாலை யென்றனரா?


  • உனக்கிணை யாரே!

  • (என்னைக்) காக்க இதுவே தருணமம்மா!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தே3வி/ ஸ்ரீ துளஸம்ம/ ப்3ரோசுடகு/-
தேவி/ ஸ்ரீ துளசித்தாயே/ (என்னைக்) காக்க/

இதே3/ ஸமயமம்ம/ மாயம்ம/
இதுவே/ தருணமம்மா/ எந்தாயே/


அனுபல்லவி
பாவனீ/ ப்3ரஹ்மா/-இந்த்3ர-ஆது3லு/ நீ/
தூயவளே/ பிரமன்/ இந்திராதியர்/ உனது/

4க்திசே/ விலஸில்லிரி-அட மஹா/(தே3வி)
பக்தியினால்/ ஒளிர்ந்தனராம்/ மகா/ தேவி!


சரணம்
நீவு/ லேக/ ஸ1ங்கரு/ மா/ ரமணுடு3/ நீரஜ/-ஆது3ல/-ஒல்லரு-அட/
நீ/ யின்றி/ சங்கரன்/ மா/ மணாளன்/ தாமரை/ ஆகியவற்றை/ விரும்பராம்/

நீவு/ லேக/ தீர்த2மு/ ஸேவிஞ்சுட/ நீரு/-அனுசு/ பேரு/-ஆயெனு-அட/
நீ/ யின்றி/ தீர்த்தம்/ சேவனம் செய்ய/ நீர்/ என/ பெயர்/ ஆகியதாம்/

நீவு/ லேக/ த்ராஸுன/ ஸ்ரீ ஹரி/ ஸரி/ நில்வக/ போயெனு-அட/
நீ/ யின்றி/ தராசினில்/ ஸ்ரீ அரிக்கு/ (எப்பொருளும்) சரி/ நில்லாமற்/ போனதாம்/

நீவு/ லேக/ வனமால/-அனி பலிகிரா/
நீ/ யின்றி/ (மாலையை) வனமாலை/ யென்றனரா/

நீ/ ஸரி/-எவ்வரே/ த்யாக3ராஜ/ நுத/ மஹா/(தே3வி)
உனக்கு/ இணை/ யாரே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றவளே/ மகா/ தேவி!


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - 1ங்கரு - ஸ1ங்கரி.

3 - நீரஜாது3லனொல்லரட - நீரஜாது3லனொல்லட3ட : 'ஸ1ங்கரி' என்பது சரியானால், 'நீரஜாது3லனொல்லட3ட' என்பது சரியாக இருக்கலாம். அன்றேல், அது தவறாகும்.

6 - போயெனட - பா3ஸெனட : இவ்விடத்தில் 'பா3ஸெனட' என்பது தவறாகும்.

Top

மேற்கோள்கள்
5 - த்ராஸுன - தராசு - சத்தியபாமை கண்ணனை எடைபோட்ட நிகழ்ச்சி. மகாபாரதத்தில் இக்கதை காணப்படுகின்றது. கதைச் சுருக்கம் நோக்கவும்.

7 - வனமால - வனமாலை - துழாய் (துளசி) மற்றும், மல்லிகை, மந்தாரம், பாரிஜாதம், தாமரை ஆகிய மலர்களால் தொடுக்கப்படும், அரியணியும் மாலை, 'வைஜயந்தி' அல்லது 'வனமாலை' எனப்படும். மாலைகளைப்பற்றியும், முக்கியமாக, 'வைஜயந்தி', 'வனமாலை'யைப் பற்றிய கட்டுரை நோக்கவும்.

Top

விளக்கம்
1 - பாவனீ - துயவள் அல்லது தூய்மைப் படுத்துபவள் - சரணத்தின் 'தீர்த2மு' என்ற வரியினை நோக்கவும். துழாய் சேர்க்காது, தீர்த்தம், 'தீர்த்தம்' என வழங்காது.

4 - தீர்த2மு - தீர்த்தம் - கோயிலில், இறைவன் வழிபாட்டுக்குப் பின்னர் வழங்கப்படும் புனித நீர்.

Top


Updated on 23 Nov 2010

No comments: