ரமா ரமண பா4ரமா நன்னு ப்3ரோவ ஸ்ரீ-கர
அனுபல்லவி
1புமானுட3னி காத3னி நாதோ
தெல்புமா நரோத்தம ஸமான ரஹித (ர)
சரணம்
சரணம் 1
ஸரி நீகெவரு தொ3ரகரனி 2க3ர்வமு
அதி3யு கா3க த4ரலோ ஜனுலு 3மர்ம-
மெரிகி3 நம்முகொன லேரண்டி 4த4ர்மாதி3
மோக்ஷ வரமுலொஸங்கி3 ப4க்த
வருல காசின 5கீர்தி விண்டி மரி மரி
நன்னிந்த3ரிலோ 6செயி பட்டி ப்3ரோவ
ஸ1ரணு ஜொச்சிதினய்ய த3ரி
நீவனுகொன்னானு சரணமே க3தியண்டி (ர)
சரணம் 2
7ஸ்மரண தெலிஸியேலே பரமாத்முடு3
நீவேயன்னானு பாமருலதோ
ஸரி போயினடுலே நீ 8கோ3சரமுல நே
பல்குகொன்னானு நா மாடலெல்ல
கருணதோ நிஜமு ஸேய வரதா3
த3ண்ட3முலிடி3னானு ஸ்ரீ ராம ராம
பரம பாவன நாம 9ஸ1ரஜ லோசன
நன்னாத3ரண ஜேயுடகிந்த கருவைன வித4மேமி (ர)
சரணம் 3
வ்யாஜமுலகு நேனு ரா ஜாலனண்டேனு
கோ3பால க3தி லேக நீதோ
நா ஜாலி தெலுப போதே 10லாஜமுலு
வேக3க3னேல ஸ்ரீ ராம ராம
11ஆ-ஜானு பா3ஹ ராஜ ராஜ
ஸகல லோக பால வினு ப4க்த த்யாக3-
ராஜுனியிண்ட நீவு ராஜில்லினாவு க3னுக
நீ ஜபமுனு நீது3 பூஜல விடு3வ ஜால (ர)
பொருள் - சுருக்கம்
- மா மணாளா! சீரருள்வோனே!
- மனிதரில் உத்தமனே! நிகரற்றோனே!
- வரதா! இராமா! முற்றிலும் தூயப் பெயரோனே! கமலக்கண்ணா!
- கோபாலா! முழந்தாள் நீளக்கைகளோனே! அரசர்க்கரசே! அனைத்துலகங்களையும் காப்போனே!
- சுமையோ, என்னைக் காக்க?
- (நீ) ஆண்மகனோ அல்லவோயென எனக்குத் தெரிவியுமைய்யா.
- ஈடுனக்கு எவரும் அகப்படாரெனப் பெருமிதம் (எனக்கு); அஃதன்றி,
- புவியில் மனிதர்கள் (உனது) மருமம் அறிந்து, நம்பமுடியாத அத்தகைய, அறம் முதலான வீடெனும் வரங்களையளித்து, அடியாரிற் சிறந்தோரைக் காத்த புகழ் கேட்டேன்;
- மீண்டும் மீண்டும் என்னை இவ்வனைவரிலும் கைப் பற்றிக் காக்க சரணம் அடைந்தேனய்யா!
- நீழல் நீ எனக் கருதினேன்!
- உனது திருவடியே கதியென்றேன்!
- நினைவு தெரிந்து, (என்னை) ஆளும் பரம்பொருள் நீயேயென்றேன்!
- பாமரர்களுடன் சரி போனது போன்றே, உனது புலப்பாட்டினை நான் சொல்லிக்கொண்டேன்!
- எனது சொற்களையெல்லாம், கருணையுடன் மெய்ப்பிக்க, (உன்னைத்) தெண்டனிட்டேன்!
- என்னை மதிப்பதற்கு இத்துணை அரிதான விதமென்ன?
- சாக்குப் போக்குக்கு நான் ஒப்பமாட்டேன், ஆயினும், போக்கின்றி, உன்னிடம் எனது துயரைத் தெரிவிக்கப் போனால், எள்ளும் கொள்ளும் வெடிப்பதேன்?
- கேளாய்! அடியேன், தியாகராசன் இல்லத்தினில் நீ திகழ்கின்றனை; எனவே
- உனது ஜபத்தையும், உனது வழிபாட்டினையும் விட மாட்டேன்!
- ஈடுனக்கு எவரும் அகப்படாரெனப் பெருமிதம் (எனக்கு); அஃதன்றி,
- சுமையோ, என்னைக் காக்க?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ரமா/ ரமண/ பா4ரமா/ நன்னு/ ப்3ரோவ/ ஸ்ரீ/-கர/
மா/ மணாளா/ சுமையோ/ என்னை/ காக்க/ சீர்/ அருள்வோனே/
அனுபல்லவி
புமானுடு3-அனி/ காது3/-அனி/ நாதோ/
(நீ) ஆண்மகனோ/ அல்லவோ/ யென/ எனக்கு/
தெல்புமா/ நர/-உத்தம/ ஸமான/ ரஹித/ (ர)
தெரிவியுமைய்யா/ மனிதரில்/ உத்தமனே/ நிகர்/ அற்றோனே/
சரணம்
சரணம் 1
ஸரி/ நீகு/-எவரு/ தொ3ரகரு/-அனி/ க3ர்வமு/
ஈடு/ உனக்கு/ எவரும்/ அகப்படார்/ என/ பெருமிதம்/ (எனக்கு);
அதி3யு/ கா3க/ த4ரலோ/ ஜனுலு/ மர்மமு/-
அஃது/ அன்றி/ புவியில்/ மனிதர்கள்/ (உனது) மருமம்/
எரிகி3/ நம்முகொன/ லேரு/-அண்டி/ த4ர்ம/-ஆதி3/
அறிந்து/ நம்ப/ முடியாத/ அத்தகைய/ அறம்/ முதலான/
மோக்ஷ/ வரமுலு/-ஒஸங்கி3/ ப4க்த/
வீடெனும்/ வரங்களை/ யளித்து/ அடியாரிற்/
வருல/ காசின/ கீர்தி/ விண்டி/ மரி/ மரி/
சிறந்தோரை/ காத்த/ புகழ்/ கேட்டேன்/ மீண்டும்/ மீண்டும்/
நன்னு/-இந்த3ரிலோ/ செயி/ பட்டி/ ப்3ரோவ/
என்னை/ இவ்வனைவரிலும்/ கை/ பற்றி/ காக்க/
ஸ1ரணு/ ஜொச்சிதினி/-அய்ய/ த3ரி/
சரணம்/ அடைந்தேன்/ அய்யா/ நீழல்/
நீவு/-அனுகொன்னானு/ சரணமே/ க3தி/-அண்டி/ (ர)
நீ/ எனக் கருதினேன்/ (உனது) திருவடியே/ கதி/ யென்றேன்/
சரணம் 2
ஸ்மரண/ தெலிஸி/-ஏலே/ பரமாத்முடு3/
நினைவு/ தெரிந்து/ (என்னை) ஆளும்/ பரம்பொருள்/
நீவே/-அன்னானு/ பாமருலதோ/
நீயே/ யென்றேன்/ பாமரர்களுடன்/
ஸரி/ போயின/-அடுலே/ நீ/ கோ3சரமுல/ நே/
சரி/ போனது/ போன்றே/ உனது/ புலப்பாட்டினை/ நான்/
பல்குகொன்னானு/ நா/ மாடலு/-எல்ல/
சொல்லிக்கொண்டேன்/ எனது/ சொற்களை/ யெல்லாம்/
கருணதோ/ நிஜமு ஸேய/ வரதா3/
கருணையுடன்/ மெய்ப்பிக்க/ வரதா/
த3ண்ட3முலு/-இடி3னானு/ ஸ்ரீ ராம/ ராம/
(உன்னைத்) தெண்டன்/ இட்டேன்/ ஸ்ரீ ராமா/ ராமா/
பரம/ பாவன/ நாம/ ஸ1ரஜ/ லோசன/ நன்னு/
முற்றிலும்/ தூய/ பெயரோனே/ கமல/ கண்ணா/ என்னை/
ஆத3ரண ஜேயுடகு/-இந்த/ கருவைன/ வித4மு/-ஏமி/ (ர)
மதிப்பதற்கு/ இத்துணை/ அரிதான/ விதம்/ என்ன/
சரணம் 3
வ்யாஜமுலகு/ நேனு/ ரா ஜாலனு/-அண்டேனு/
சாக்குப் போக்குக்கு/ நான்/ ஒப்பமாட்டேன்/ ஆயினும்/
கோ3பால/ க3தி/ லேக/ நீதோ/
கோபாலா/ போக்கு/ இன்றி/ உன்னிடம்/
நா/ ஜாலி/ தெலுப/ போதே/ லாஜமுலு/
எனது/ துயரை/ தெரிவிக்க/ போனால்/ (எள்ளும் கொள்ளும்) பொரி/
வேக3க3னு/-ஏல/ ஸ்ரீ ராம/ ராம/
வெடிப்பது/ ஏன்/ ஸ்ரீ ராமா/ ராமா/
ஆ-ஜானு/ பா3ஹ/ ராஜ/ ராஜ/
முழந்தாள் நீள/ கைகளோனே/ அரசர்க்கு/ அரசே/
ஸகல/ லோக/ பால/ வினு/ ப4க்த/
அனைத்து/ உலகங்களையும்/ காப்போனே/ கேளாய்/ அடியேன்/
த்யாக3ராஜுனி/-இண்ட/ நீவு/ ராஜில்லினாவு/ க3னுக/
தியாகராசன்/ இல்லத்தினில்/ நீ/ திகழ்கின்றனை/ எனவே/
நீ/ ஜபமுனு/ நீது3/ பூஜல/ விடு3வ/ ஜால/ (ர)
உனது/ ஜபத்தையும்/ உனது/ வழிபாட்டினையும்/ விட/ மாட்டேன்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - நம்முகொன லேரண்டி - நம்முகோ லேரண்டி.
5 - கீர்தி விண்டி மரி மரி - கீர்தி மரி மரி : 'விண்டி' என்ற சொல்லில்லாது பொருள் நிறைவுபெறாது.
9 - ஸ1ரஜ லோசன - ஸரஸிஜ லோசன.
Top
மேற்கோள்கள்
1 - புமானுட3னி - ஆண்மகனோ அல்லவோ - வனவாசத்திற்கு சீதையை உடன் அழைத்துச் செல்ல ராமன் மறுத்தான். எவ்வளவோ கூறியும், ராமன் இணங்காததனால், சீதை பொறுமையிழந்து, 'நீ ஆண்மகனோ, அல்லவோ' என்று கேட்டாள். அதனால், நாணம் அடைந்த ராமன், சீதையை அழைத்துச் செல்ல சம்மதித்தான். இந்த சொற்களைத் தியாகராஜரும் பயன்படுத்துகின்றார்.
சீதை கூறியது -
"எனது தந்தையாகிய விதேகன், மிதிலை மன்னன், ராமனை மருமகனாக அடைந்து,
ஆண் உருத்தில் உள்ள பெண்ணென உன்னைக் கருதினாரா?"
(வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், 30-வது அத்தியாயம்)
4 - த4ர்மாதி3 - அறம் முதலான - அறம், பொருள், இன்பம், வீடு. இவை 'புருஷார்த்தம்' (மனிதப் பிறவியில் கடைப்பிடிக்க வேண்டியவை) எனப்படும். முதல் மூன்றினையும் கடைப்பிடிப்பதால்தான் வீடு கிடைக்கும் என்று சாத்திரங்கள் கூறும்.
11 - ஆ-ஜானு பா3ஹ - முழந்தாள் நீளக் கைகளோன் - 32 சாமுத்திரிகா (உடலுறுப்புகளின்) இலக்கணப்படி, ஆண்களுக்கான ஓர் இலக்கணம்.
Top
விளக்கம்
2 - க3ர்வமு - கருவம். சில புத்தகங்களில், இச்சொல் ராமனைக் குறிப்பதாகக் கூறப்பட்டுள்ளது - அதாவது ராமனுக்கு (தனக்கு ஈடில்லையென) கருவம் என. இந்த சரணத்தின் மற்ற வரிகளை நோக்குகையில், இது தியாகராஜர், இராமனைப் பற்றி பெருமிதப்படுவதாகத்தான் கொள்ளமுடியும். எனவே, 'பெருமிதம்' என்று மொழி பெயர்க்கப்பட்டது.
3 - மர்மமு - மருமம். இது இறைவனின் 'அவதார மருமம்' (அரக்கரிடமிருந்து முனிவர்களைக் காத்தல்) அல்லது 'சரணாகதி' எனப்படும் 'இறைவனிடம் அடைக்கலம் புகுதலின் மருமம்' என்றோ, அல்லது இரண்டுமே என்றோ பொருள் கொள்ளலாம்.
3 - மர்மமெரிகி3 நம்முகொன லேரண்டி - மருமம் அறிந்து நம்ப முடியாத - அகலிகையை மீட்டது, ஜடாயு என்ற கழுகுக்கும், சபரிக்கும் மோக்ஷம் அளித்தது, ஆகியவை சாத்திரத்தினால் அங்கீகரிக்கப்படாத, ஆனால் இறைவனின் பெருங்கருணையினால் நிகழ்ந்தவையாகும். இதனைத்தான், தியாகராஜர் 'நம்பமுடியாத' என்று கூறுகின்றார். இறைவனின் 'அவதார மருமம்' மற்றும் 'சரணாகதி மருமம்' அறிந்தவர்களே இவற்றின் சிறப்பினை உணரமுடியும் என்கிறார்.
Top
ராமனே, தனக்கு அத்தகைய வல்லமைகள் ஏதும் இருப்பதாகக் கூறவில்லை. வால்மீகி ராமாணத்தில் (யுத்த காண்டம், 117-வது அத்தியாயம்), சீதை நெருப்பினுள் புகுகையில், சிவனும், பிரமனும், ராமனின் அவதாரத்தை நினைவூட்டித் தடுத்தனர். அவ்வமயம், ராமன் கூறியது -
"நான், என்னை, தசரதன் மைந்தனாகிய, ராமன் எனும் மனிதனாகவே கருதுகின்றேன்.
நான் யார், எங்கிருந்து வந்தேன் என, பெருந்தகைகள் நீவிர் கூறுவீராக."
6 - செயி பட்டி - கைப் பற்றி. இந்த சொல், பெண்ணின் கையினைத் திருமணத்தில், ஆண் பற்றுவதைக் குறிக்கும். இந்த கிருதி, 'நாயகி மனப்பாங்கினில்' அமைந்துள்ளது. அதனால்தானோ என்னவோ, அனுபல்லவியில், தியாகராஜர், சீதையின் சொற்களை (நீ ஆண்மகனா?), தான் பயன்படுத்துகின்றார்.
7 - ஸ்மரண தெலிஸி - நி்னைவு தெரிந்து. பொதுவாக, நான்கு வயதுக்குப் பிறகுதான் குழந்தைக்கு 'நான்' என்ற தன்னுணர்வு உண்டாகும். இதனைத் தானோ, என்னவோ, தியாகராஜர், 'ஸஹஜ பக்தி' (உடன்பிறந்த பக்தி) என்று 'ஸ்வர ராக3 ஸுதா4' என்ற கீர்த்தனையில் கூறுகின்றார்.
Top
8 - கோ3சரமுல நே பல்குகொன்னானு - புலப்பாட்டினை நான் சொல்லிக் கொண்டேன். 'இறைவன் புலன்களுக்கு அப்பாற்பட்டவன்' என்று தியாகராஜரே, தனது 'வாசாமகோ3சரமே' என்ற கீர்த்தனையில் கூறுகின்றார். ஆயினும், பாமரர் (அறிவிலிகள்) போன்று, இறைவனின் புலப்பாட்டினை நான் சொல்லிக்கொண்டேன் என்றும், எனது சொற்களை மெய்ப்பிக்க வேண்டும், அதாவது, இறைவன் புலப்படவேண்டும், என தெண்டனிட்டேன் என்கின்றார். இதனைத்தானோ என்னவோ, மோஹன ராகத்தில் அமைந்துள்ள 'நன்னு பாலிம்ப' மற்றும் 'ப4வ நுத' என்ற கீர்த்தனைகளில், தன் வீட்டிற்கு இறைவன் நேரிடையாக வந்ததாகக் கூறுகின்றார்.
10 - லாஜமுலு வேக3க3னேல - பொரி வெடிப்பதேன். தமிழில் இதனை 'எள்ளும் கொள்ளும் வெடித்தல்' என்று கூறுவர்.
பாமரர் - அறிவீனர்
புலப்பாடு - புலன்களால் அறியப்படுதல்
Top
Updated on 20 Nov 2010
No comments:
Post a Comment