ஜானகீ ரமண ப4க்த பாரிஜாத
பாஹி ஸகல லோக ஸ1ரண
அனுபல்லவி
கா3ன லோல க4ன 1தமால நீல
கருணாலவால ஸுகு3ண ஸீ1ல (ஜா)
சரணம்
ரக்த நளின த3ள நயன ந்ரு2பால
ரமணீயானன முகுர கபோல
ப4க்தி ஹீன ஜன 2மத3 க3ஜ ஜால
3பஞ்ச வத3ன த்யாக3ராஜ பால (ஜா)
பொருள் - சுருக்கம்
- ஜானகி ரமணா! தொண்டரின் பாரிஜாதமே! அனைத்துலகப் புகலே!
- இசை விரும்பியே! தமால மர நிகர் கரு நீல வண்ணா! கருணைக் கடலே! நற்குணசீலனே!
- செந்தாமரை யிதழ்க் கண்ணா! கொற்றவனே! அழகிய வதனத்தோனே! கண்ணாடிக் கன்னங்களோனே! பக்தியற்ற மக்களெனும் மதக் களிறுகளுக்கு ஐம்முகத்தோனே! தியாகராஜனைப் பேணுவோனே!
- (என்னைக்) காப்பாய்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஜானகீ/ ரமண/ ப4க்த/ பாரிஜாத/
ஜானகி/ ரமணா/ தொண்டரின்/ பாரிஜாதமே/
பாஹி/ ஸகல/ லோக/ ஸ1ரண/
(என்னைக்) காப்பாய்/ அனைத்து/ உலக/ புகலே/
அனுபல்லவி
கா3ன/ லோல/ க4ன/ தமால/ நீல/
இசை/ விரும்பியே/ கரு/ தமால (மர நிகர்)/ நீல (வண்ணா)/
கருணா/-ஆலவால/ ஸுகு3ண/ ஸீ1ல/ (ஜா)
கருணை/ கடலே/ நற்குண/ சீலனே/
சரணம்
ரக்த நளின/ த3ள/ நயன/ ந்ரு2பால/
செந்தாமரை/ யிதழ்/ கண்ணா/ கொற்றவனே/
ரமணீய/-ஆனன/ முகுர/ கபோல/
அழகிய/ வதனத்தோனே/ கண்ணாடி/ கன்னங்களோனே/
ப4க்தி/ ஹீன/ ஜன/ மத3/ க3ஜ ஜால/
பக்தி/ யற்ற/ மக்களெனும்/ மத/ களிறுகளுக்கு/
பஞ்ச வத3ன/ த்யாக3ராஜ/ பால/ (ஜா)
ஐம்முகத்தோனே/ தியாகராஜனை/ பேணுவோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - தமால - தமால மரம் - நெட்டிலிங்கப் பச்சிலை மரம். தமால வண்ணன்
2 - மத3 க3ஜ ஜால பஞ்ச வத3ன - மதக் களிறுகளுக்கு ஐம்முகத்தோன் - கஜாசுரன் எனும் யானையரக்கனை வதைத்து, அவன் தோலையணியும் சிவபெருமானைக்குறிக்கும். இராமனை, சிவனாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. சிவ வழிபாடு - Worship of Siva
3 - பஞ்ச வத3ன - ஐம்முகத்தோன் - சிவனின் ஐந்து முகங்களாவன - ஸத்3யோஜாத, அகோ4ர, தத்புருஷ, ஈஸா1ன, வாமதேவ. திருமூலர், தமது 'திருமந்திர'த்தில், சிவனுக்கு, 'அதோ4முகம் என்று ஆறாவது முகமும் இருப்பதாகக் கூறுகின்றார்.
Top
விளக்கம்
பாரிஜாதம் - விரும்பியதருளும் வானோர் தரு.
Top
Updated on 08 Nov 2010
1 comment:
GREAT WORK , SIR! MY HUMBLE SALUTATIONS. today...birth anniversary of D.K.PATTAMMAL ,the most orthodox singer among the glorious trinity... of 1940-50 (
MS, DKP, N.C.VASANTHAKOKILAM) ..'ஜானகி ரமணா '....டி. கே. பட்டம்மாள் ,பாடியுள்ள இந்த கீர்த்தனைதான், கர்நாடக இசையில் , மிகவும் உன்னதமான கீர்த்தனை என்று கூறலாம்.( SUDDHA SEEMANDHINI..RAAGAM)..YOUR TRANSLATION INTO TAMIL IS VERY NICE. THANK YOU SIR.THE LINK MAY BE USEFUL TO DEVOTEES
http://freemp3host.com/play:13311
Post a Comment