தீ3ன ஜனாவன ஸ்ரீ ராம தா3னவ ஹரண ஸ்ரீ ராம
வீன விமான ஸ்ரீ ராம மீன ஸ1ரீர ஸ்ரீ ராம
சரணம்
சரணம் 1
நிர்மல ஹ்ரு2த3ய ஸ்ரீ ராம 1கார்முக பா3ண ஸ்ரீ ராம
ஸ1ர்ம ப2ல ப்ரத3 ஸ்ரீ ராம கூர்மாவதார ஸ்ரீ ராம (தீ3)
சரணம் 2
ஸ்ரீ-கர ஸு-கு3ண ஸ்ரீ ராம ஸ்ரீ கர லாலித ஸ்ரீ ராம
ஸ்ரீ கருணார்ணவ ஸ்ரீ ராம ஸூகர ரூப ஸ்ரீ ராம (தீ3)
சரணம் 3
ஸரஸிஜ நயன ஸ்ரீ ராம ஸுர பதி வினுத ஸ்ரீ ராம
நர வர வேஷ ஸ்ரீ ராம நர ஹரி ரூப ஸ்ரீ ராம (தீ3)
சரணம் 4
காமித ப2லத3 ஸ்ரீ ராம பாமர தூ3ர ஸ்ரீ ராம
ஸாமஜ வரத3 ஸ்ரீ ராம வாமன ரூப ஸ்ரீ ராம (தீ3)
சரணம் 5
அக4 திமிராதி3த்ய ஸ்ரீ ராம விக3ளித மோஹ ஸ்ரீ ராம
ரகு4 குல திலக ஸ்ரீ ராம ப்4ரு2கு3 ஸுத ரூப ஸ்ரீ ராம (தீ3)
சரணம் 6
குஸ1 லவ ஜனக ஸ்ரீ ராம குஸ1லத3 சதுர ஸ்ரீ ராம
த3ஸ1 முக2 மர்த3ன ஸ்ரீ ராம 2த3ஸ1ரத2 நந்த3ன ஸ்ரீ ராம (தீ3)
சரணம் 7
3கலி மல ஹரண ஸ்ரீ ராம ஜலஜ ப4வார்சித ஸ்ரீ ராம
ஸ-லலித வசன ஸ்ரீ ராம ஹல த4ர ரூப ஸ்ரீ ராம (தீ3)
சரணம் 8
ஸித்3த4 ஜன ப்ரிய ஸ்ரீ ராம ப்ரஸித்3த4 சரித்ர ஸ்ரீ ராம
ப3த்3த4 ஸு-வஸன ஸ்ரீ ராம பு3த்3தா4வதார ஸ்ரீ ராம (தீ3)
சரணம் 9
ஜய கர நாம ஸ்ரீ ராம விஜய ரத2 ஸாரதே2 ஸ்ரீ ராம
ப4ய நாஸ1ன ஹரே ஸ்ரீ ராம 4ஹய முக2 ரூப ஸ்ரீ ராம (தீ3)
சரணம் 10
பா4க3வத ப்ரிய ஸ்ரீ ராம ஆக3ம மூல ஸ்ரீ ராம
நாக3 ஸு-ஸ1யன ஸ்ரீ ராம த்யாக3ராஜார்சித ஸ்ரீ ராம (தீ3)
பொருள் - சுருக்கம்
- தீனரைக் காக்கும், இராமா!
- அசுரரை அழித்த, இராமா!
- பறவையரசன் வாகனனே, இராமா!
- மீன் உருவோனே, இராமா!
- தூய இதய, இராமா!
- வில்லம்பு ஏந்தும், இராமா!
- மகிழ்ச்சி அருளும், இராமா!
- ஆமை அவதாரமே, இராமா!
- சீரருளும் நற்குண, இராமா!
- இலக்குமி கரங்களால் வருடப்படும், இராமா!
- கருணைக் கடலே, இராமா!
- பன்றி உருவோனே, இராமா!
- தாமரைக் கண்ணா, இராமா!
- வானோர் தலைவன் போற்றும், இராமா!
- உயர் மனித வேட, இராமா!
- நர-சிங்க உருவோனே, இராமா!
- வேண்டுவதருளும், இராமா!
- தீயோருக்குத் தூரமே, இராமா!
- கரிக்கருளும், இராமா!
- வாமன உருவோனே, இராமா!
- பாவ இருளுக்குப் பரிதியே, இராமா!
- மோகம் வென்ற, இராமா!
- இரகு குலத் திலகமே, இராமா!
- பரசுராமன் உருவோனே, இராமா!
- குச, லவரை ஈன்ற, இராமா!
- நலமருள்வதில் வல்லவனே, இராமா!
- பத்துத் தலையனை வதைத்த, இராமா!
- தசரதன் மைந்தா, இராமா!
- கலி மலம் போக்கும், இராமா!
- மலரோன் தொழும், இராமா!
- இன்சொல்லோனே, இராமா!
- பலராமன் உருவோனே, இராமா!
- சித்தர்களுக்கினிய, இராமா!
- புகழ்பெற்ற சரிதத்தோனே, இராமா!
- நல்லுடையணியும், இராமா!
- புத்தன் அவதாரமே, இராமா!
- வெற்றி தரும் பெயரோய், இராமா!
- விஜயன் தேரோட்டியே, இராமா!
- பயத்தை யழிக்கும், ஏ இராமா!
- குதிரைமுகன் உருவோனே, இராமா!
- பாகவதருக்கு இனிய, இராமா!
- ஆகம மூலமே, இராமா!
- உயர் அரவணையோனே, இராமா!
- தியாகராஜன் தொழும், இராமா!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தீ3ன ஜன/-அவன/ ஸ்ரீ ராம/ தா3னவ/ ஹரண/ ஸ்ரீ ராம/
தீனரை/ காக்கும்/ ஸ்ரீ ராமா/ அசுரரை/ அழித்த/ ஸ்ரீ ராமா/
வி/-இன/ விமான/ ஸ்ரீ ராம/ மீன/ ஸ1ரீர/ ஸ்ரீ ராம/
பறவை/ யரசன்/ வாகனனே/ ஸ்ரீ ராமா/ மீன்/ உருவோனே/ ஸ்ரீ ராமா/
சரணம்
சரணம் 1
நிர்மல/ ஹ்ரு2த3ய/ ஸ்ரீ ராம/ கார்முக/ பா3ண/ ஸ்ரீ ராம/
தூய/ இதய/ ஸ்ரீ ராமா/ அம்பு/ வில் (ஏந்தும்)/ ஸ்ரீ ராமா/
ஸ1ர்ம/ ப2ல/ ப்ரத3/ ஸ்ரீ ராம/ கூர்ம/-அவதார/ ஸ்ரீ ராம/ (தீ3)
மகிழ்ச்சி/ பயன்/ அருளும்/ ஸ்ரீ ராமா/ ஆமை/ அவதாரமே/ ஸ்ரீ ராமா/
சரணம் 2
ஸ்ரீ/-கர/ ஸு-கு3ண/ ஸ்ரீ ராம/ ஸ்ரீ/ கர/ லாலித/ ஸ்ரீ ராம/
சீர்/ அருளும்/ நற்குண/ ஸ்ரீ ராமா/ இலக்குமி/ கரங்களால்/ வருடப்படும்/ ஸ்ரீ ராமா/
ஸ்ரீ/ கருணா/-அர்ணவ/ ஸ்ரீ ராம/ ஸூகர/ ரூப/ ஸ்ரீ ராம/ (தீ3)
ஸ்ரீ/ கருணை/ கடலே/ ஸ்ரீ ராமா/ பன்றி/ உருவோனே/ ஸ்ரீ ராமா/
சரணம் 3
ஸரஸிஜ/ நயன/ ஸ்ரீ ராம/ ஸுர/ பதி/ வினுத/ ஸ்ரீ ராம/
தாமரை/ கண்ணா/ ஸ்ரீ ராமா/ வானோர்/ தலைவன்/ போற்றும்/ ஸ்ரீ ராமா/
நர/ வர/ வேஷ/ ஸ்ரீ ராம/ நர/ ஹரி/ ரூப/ ஸ்ரீ ராம/ (தீ3)
மனித/ உயர்/ வேட/ ஸ்ரீ ராமா/ நர/-சிங்க/ உருவோனே/ ஸ்ரீ ராமா/
சரணம் 4
காமித/ ப2லத3/ ஸ்ரீ ராம/ பாமர/ தூ3ர/ ஸ்ரீ ராம/
வேண்டுவதன்/ பயன் அருளும்/ ஸ்ரீ ராமா/ தீயோருக்கு/ தூரமே/ ஸ்ரீ ராமா/
ஸாமஜ/ வரத3/ ஸ்ரீ ராம/ வாமன/ ரூப/ ஸ்ரீ ராம/ (தீ3)
கரிக்கு/ அருளும்/ ஸ்ரீ ராமா/ வாமன/ உருவோனே/ ஸ்ரீ ராமா/
சரணம் 5
அக4/ திமிர/-ஆதி3த்ய/ ஸ்ரீ ராம/ விக3ளித/ மோஹ/ ஸ்ரீ ராம/
பாவ/ இருளுக்கு/ பரிதியே/ ஸ்ரீ ராமா/ வென்றோனே/ மோகத்தினை/ ஸ்ரீ ராமா/
ரகு4/ குல/ திலக/ ஸ்ரீ ராம/ ப்4ரு2கு3/ ஸுத/ ரூப/ ஸ்ரீ ராம/ (தீ3)
இரகு/ குல/ திலகமே/ ஸ்ரீ ராமா/ பிருகு/ மைந்தன் (பரசுராமன்)/ உருவோனே/ ஸ்ரீ ராமா/
சரணம் 6
குஸ1/ லவ/ ஜனக/ ஸ்ரீ ராம/ குஸ1லத3/ சதுர/ ஸ்ரீ ராம/
குச/ லவரை/ ஈன்ற/ ஸ்ரீ ராமா/ நலமருள்வதில்/ வல்லவனே/ ஸ்ரீ ராமா/
த3ஸ1/ முக2/ மர்த3ன/ ஸ்ரீ ராம/ த3ஸ1ரத2/ நந்த3ன/ ஸ்ரீ ராம/ (தீ3)
பத்து/ தலையனை/ வதைத்த/ ஸ்ரீ ராமா/ தசரதன்/ மைந்தா/ ஸ்ரீ ராமா/
சரணம் 7
கலி/ மல/ ஹரண/ ஸ்ரீ ராம/ ஜலஜ ப4வ/-அர்சித/ ஸ்ரீ ராம/
கலி/ மலம்/ போக்கும்/ ஸ்ரீ ராமா/ மலரோன்/ தொழும்/ ஸ்ரீ ராமா/
ஸ-லலித/ வசன/ ஸ்ரீ ராம/ ஹல/ த4ர/ ரூப/ ஸ்ரீ ராம/ (தீ3)
இன்/ சொல்லோனே/ ஸ்ரீ ராமா/ கலப்பை/ ஏந்துவோன் (பலராமன்)/ உருவோனே/ ஸ்ரீ ராமா/
சரணம் 8
ஸித்3த4 ஜன/ ப்ரிய/ ஸ்ரீ ராம/ ப்ரஸித்3த4/ சரித்ர/ ஸ்ரீ ராம/
சித்தர்களுக்கு/ இனிய/ ஸ்ரீ ராமா/ புகழ்பெற்ற/ சரிதத்தோனே/ ஸ்ரீ ராமா/
ப3த்3த4/ ஸு-வஸன/ ஸ்ரீ ராம/ பு3த்3த4/-அவதார/ ஸ்ரீ ராம/ (தீ3)
அணிவோனே/ நல்லுடை/ ஸ்ரீ ராமா/ புத்தன்/ அவதாரமே/ ஸ்ரீ ராமா/
சரணம் 9
ஜய/ கர/ நாம/ ஸ்ரீ ராம/ விஜய/ ரத2/ ஸாரதே2/ ஸ்ரீ ராம/
வெற்றி/ தரும்/ பெயரோய்/ ஸ்ரீ ராமா/ விஜயன்/ தேர்/ ஓட்டியே/ ஸ்ரீ ராமா/
ப4ய/ நாஸ1ன/ ஹரே/ ஸ்ரீ ராம/ ஹய/ முக2/ ரூப/ ஸ்ரீ ராம/ (தீ3)
பயத்தை/ யழிக்கும்/ ஏ/ ஸ்ரீ ராமா/ குதிரை/ முகன்/ உருவோனே/ ஸ்ரீ ராமா/
சரணம் 10
பா4க3வத/ ப்ரிய/ ஸ்ரீ ராம/ ஆக3ம/ மூல/ ஸ்ரீ ராம/
பாகவதருக்கு/ இனிய/ ஸ்ரீ ராமா/ ஆகம/ மூலமே/ ஸ்ரீ ராமா/
நாக3/ ஸு-ஸ1யன/ ஸ்ரீ ராம/ த்யாக3ராஜ/-அர்சித/ ஸ்ரீ ராம/ (தீ3)
அரவு/ உயர் அணையோனே/ ஸ்ரீ ராமா/ தியாகராஜன்/ தொழும்/ ஸ்ரீ ராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - த3ஸ1ரத2 நந்த3ன - த3ஸ1ரத2 தனய.
Top
மேற்கோள்கள்
1 - கார்முக - வில்லுக்கு, சாப, கார்முக, தனுஸ், கோதண்ட என்ற பல பெயர்கள் உண்டு. கார்முகம் எனும் வில், க்ருமுக மரத்தினின்றும் தயாரிக்கப்படுவது.
3 - கலி மல - கலியின் மலங்கள் - இவை எவையெவையென பாகவத புராணத்தினில் (12-வது புத்தகம், 2-வது அத்தியாயம்) நோக்கவும்.
Top
4 - ஹய முக2 - குதிரை முக உருவம். கல்வியின் உருவாகக் கருதப்படும், மறைகளை மீட்பதற்காக எடுக்கப்பட்ட, விஷ்ணுவின் அவதாரம். ஆனால் தசாவதாரம் என்று கூறப்படும் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுவதில்லை.
மறைகளைக் கவர்ந்து சென்றது, 'சோமகன்' எனப்படும் சோமகாசுரன் என்றும், 'ஹயக்ரீவ' என்னும் குதிரைமுக அரக்கனென்றும், மது-கைடபர்கள் என்றும், மறைகளை மீட்டது விஷ்ணுவின் மீன் அவதாரத்தில் என்றும், 'ஹயக்ரீவ' என்ற குதிரை முக அவதாரத்தில் என்றும் முரண்பாடான கருத்துகள் பாகவத புராணத்தினில் காணப்படுகின்றன. பாகவத புராணம் 5.18 மற்றும் பாகவத புராணம் 8.24 நோக்கவும்.
Top
விளக்கம்
தியாகராஜர், தமது 'ஸ்1யாம ஸுந்த3ராங்க3' என்ற கீர்த்தனையிலும், 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் முன்னுரையிலும், இராமனை, தனது 'மனதிற்குகந்த தெய்வம்' என்று குறிப்பிடுகின்றார். அதனால்தானோ என்னவோ, விஷ்ணுவின் பத்து அவதாரங்களைப் புகழும் இந்தப் பாடலில், தியாகராஜர் ஒவ்வோர் அடியிலும் 'ஸ்ரீ ராம' என்று குறிப்பிடுகின்றார்.
இப்பாடலில் 'கல்கி அவதாரம்' குறிப்பிடப்படவில்லை. அத்துடன், விஷ்ணுவின் பத்து அவதாரங்களில், 'பூர்ணாவதாரம்' என்று கருதப்படும் 'கிருஷ்ணாவதார'த்தினைக் குறிப்பிடாதது வியக்கத்தக்கதாகும். 9-வது சரணத்தில், 'விஜயன் தேரோட்டி' என்று கூறியிருந்தாலும், கிருஷ்ணனின் பெயர் காணப்படவில்லை. தியாகராஜர், இராமனை 'பரிபூர்ணாவதார' என்று தமது 'ரகு4பதே ராம' என்ற ஸ1ஹான ராகக் கீர்த்தனையில் குறிப்பிடுகின்றார்.
Top
பறவையரசன் - கருடன்
பத்துத் தலையன் - இராவணன்
கலி - கலியுகம்
விஜயன் - அர்ஜுனன்
Top
Updated on 09 Nov 2010
No comments:
Post a Comment