Sunday, October 31, 2010

தியாகராஜ கிருதி - க3ந்த4மு புய்யருகா3 - ராகம் புன்னாகவராளி - Gandhamu Puyyaruga - Raga Punnagavarali -Nauka Charitram

பல்லவி
13ந்த4மு புய்யருகா3 பன்னீரு க3ந்த4மு புய்யருகா3

அனுபல்லவி
அந்த3மைன யது3 நந்த3னுபை
குந்த3 ரத3னலிரவொந்த33 பரிமள (க3)

சரணம்
சரணம் 1
திலகமு தி3த்3தெ3ருகா3 கஸ்தூரி திலகமு தி3த்3தெ3ருகா3
கலகலமனி முக2 கள கனி ஸொக்குசு
பலுகுலனம்ரு2தமுலொலிகெடு3 ஸ்வாமிகி (க3)


சரணம் 2
சேலமு கட்டெருகா33ங்க3ரு சேலமு கட்டெருகா3
மாலிமிதோ கோ3பால பா3லுலதோ-
நால மேபின விஸா1ல நயனுனிகி (க3)


சரணம் 3
2ஹாரதுலெத்தெருகா3 3முத்யால ஹாரதுலெத்தெருகா3
நாரீ மணுலகு வாரமு யௌவன
வாரகமொஸகெ3டு3 வாரிஜாக்ஷுனிகி (க3)


சரணம் 4
பூஜலு ஸேயருகா3 மனஸார பூஜலு ஸேயருகா3
ஜாஜுலு மரி விரிவாஜுலு த3வனமு
ராஜித 4த்யாக3ராஜ நுதுனிகி (க3)


பொருள் - சுருக்கம்
  • சந்தனம் பூசினரே!
  • பன்னீர் சந்தனம் பூசினரே!

  • அழகான யது நந்தன்மீது, முல்லைப் பற்களினர், படிய, வாசனைச் சந்தனம் பூசினரே!

    • திலகம் திருத்தினரே!
    • புனுகுத் திலகம் திருத்தினரே!

  • கலகலப்பான முகக் களை கண்டு சொக்கி, சொற்களில் அமிழ்து சொட்டும் சாமிக்கு சந்தனம் பூசினரே!

    • ஆடை கட்டினரே!
    • பொன்னாடை கட்டினரே!

  • கனிவுடன், இடையர் சிறாருடன், அவர்களையும் ஆண்ட, பரந்த கண்களோனுக்கு சந்தனம் பூசினரே!

    • ஆரத்தி எடுத்தனரே!
    • முத்துக்களின் ஆரத்தி எடுத்தனரே!

  • பெண்மணிகளுக்கு, என்றும் (தனது) இளமையை ஈடளிக்கும், கமலக் கண்ணனுக்கு சந்தனம் பூசினரே!

    • வழிபாடு செய்தனரே!
    • மனதார வழிபாடு செய்தனரே!
    • சாதிமல்லி, இருவாட்சி மற்றும் தவனகத்தினால், திகழும், தியாகராசன் போற்றுவோனை.


  • சந்தனம் பூசினரே!
  • பன்னீர் சந்தனம் பூசினரே!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
3ந்த4மு/ புய்யருகா3/ பன்னீரு/ க3ந்த4மு/ புய்யருகா3/
சந்தனம்/ பூசினரே/ பன்னீர்/ சந்தனம்/ பூசினரே/


அனுபல்லவி
அந்த3மைன/ யது3/ நந்த3னுபை/
அழகான/ யது/ நந்தன்மீது/

குந்த3/ ரத3னலு/-இரவொந்த33/ பரிமள/ (க3)
முல்லை/ பற்களினர்/ படிய/ வாசனை/ சந்தனம்...


சரணம்
சரணம் 1
திலகமு/ தி3த்3தெ3ருகா3/ கஸ்தூரி/ திலகமு/ தி3த்3தெ3ருகா3/
திலகம்/ திருத்தினரே/ புனுகு/ திலகம்/ திருத்தினரே/

கலகலமனி/ முக2/ கள/ கனி/ ஸொக்குசு/
கலகலப்பான/ முக/ களை/ கண்டு/ சொக்கி/

பலுகுலனு/-அம்ரு2தமுலு/-ஒலிகெடு3/ ஸ்வாமிகி/ (க3)
சொற்களில்/ அமிழ்து/ சொட்டும்/ சாமிக்கு/ சந்தனம்...


சரணம் 2
சேலமு/ கட்டெருகா3/ ப3ங்க3ரு/ சேலமு/ கட்டெருகா3/
ஆடை/ கட்டினரே/ பொன்/ ஆடை/ கட்டினரே/

மாலிமிதோ/ கோ3பால/ பா3லுலதோ/-
கனிவுடன்/ இடையர்/ சிறாருடன்/

ஆல/ மேபின/ விஸா1ல/ நயனுனிகி/ (க3)
அவர்களையும்/ ஆண்ட/ பரந்த/ கண்களோனுக்கு/ சந்தனம்...


சரணம் 3
ஹாரதுலு/-எத்தெருகா3/ முத்யால/ ஹாரதுலு/-எத்தெருகா3/
ஆரத்தி/ எடுத்தனரே/ முத்துக்களின்/ ஆரத்தி/ எடுத்தனரே/

நாரீ/ மணுலகு/ வாரமு/ யௌவன/
பெண்/ மணிகளுக்கு/ என்றும்/ (தனது) இளமையை/

வாரகமு/-ஒஸகெ3டு3/ வாரிஜ/-அக்ஷுனிகி/ (க3)
ஈடு/ அளிக்கும்/ கமல/ கண்ணனுக்கு/ சந்தனம்...


சரணம் 4
பூஜலு/ ஸேயருகா3/ மனஸார/ பூஜலு/ ஸேயருகா3/
வழிபாடு/ செய்தனரே/ மனதார/ வழிபாடு/ செய்தனரே/

ஜாஜுலு/ மரி/ விரிவாஜுலு/ த3வனமு/
சாதிமல்லி/ மற்றும்/ இருவாட்சி/ தவனகத்தினால்/

ராஜித/ த்யாக3ராஜ/ நுதுனிகி/ (க3)
திகழும்/ தியாகராசன்/ போற்றுவோனை/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - 3ந்த4மு புய்யருகா3 - சில புத்தகங்களில், பல்லவியின் இச்சொற்கள், ஒரு முறைதான் கொடுக்கப்பட்டுள்ளது.

2 - ஹாரதுலெத்தெருகா3 - ஹாரமுலெத்தெருகா3 : புத்தகங்களில், இதற்கு 'ஆரத்தி' என்றே பொருள் கொள்ளப்பட்டுள்ளதனால், 'ஹாரதுலெத்தெருகா3' ஏற்கப்பட்டது.

4 - த்யாக3ராஜ நுதுனிகி - த்யாக3ராஜ நுதுனிபை : மற்ற சரணங்களை நோக்குகையில், 'த்யாக3ராஜ நுதுனிகி' என்பதே சரியாக இருக்கவேண்டும். அங்ஙனமே இங்கு பொருள் கொள்ளப்பட்டது. 'த்யாக3ராஜ நுதுனிபை' என்பது சரியானால், இது, பல்லவியுடன் இணைத்துப் பொருள் கொள்ளப்படும்.

Top

மேற்கோள்கள்
3 - முத்யால ஹாரதி - முத்துக்களின் ஆரத்தி. பொதுவாக, குங்குமத்தினை நீரில் கரைத்து, கற்பூர ஆரத்தி எடுப்பது வழக்கம். இங்கு தியாகராஜர், 'முத்துக்களின் ஆரத்தி' என்று குறிப்பிட்டள்ளது, கண்ணனும், ஆய்ச்சியரும் இருந்த சூழ்நிலைக் கொத்தவாறு கூறியிருக்கலாம்.

ஆரத்தி யாருக்கு எடுக்கப்படுகின்றதோ, அவர், ஆரத்தித் தட்டில் காணிக்கை வைப்பது வழக்கம். பொதுவாக, இது பணமாக இருக்கும். அந்தப் பணம், ஆரத்தி எடுப்பவரைச் சேரும். இவ்விடத்தில், தியாகராஜர், 'முத்துக்களின் ஆரத்தி' என்று கூறியுள்ளதால், முத்துக்கள் காணிக்கையாக இடப்பட்டிருக்கலாம்.

திருப்பதி வேங்கடேசப் பெருமாளுக்கு, தினப்படி நடக்கும் கடைசி சேவையான, ஏகாந்த சேவையில் (தனிமை சேவை), 'முத்யால ஹாரதி' (முத்துக்களின் ஆரத்தி) எடுக்கப்படும். முத்யால ஹாரதி-1 - (Ekanta Seva); முத்யால ஹாரதி-2 - (Ekanta Seva)

Top

விளக்கம்
'நௌக சரித்திரம்' (ஓடக்கதை) எனும் நாட்டிய நாடகத்தினில் வரும் பாடல் இது.

பாடலின் பின்னணி - ஆய்ச்சியர்கள் கண்ணனை யமுனை நதிக்கரையில் சந்தித்து, எல்லோருமாக ஓடத்தில் பயணம் செய்கின்றனர். கண்ணனை சந்தித்த களிப்பில், ஆய்ச்சியர் கண்ணனை தமது சொத்தாக நினைத்து செருக்கடைகின்றனர். அவர்களுடைய செருக்கினை யடக்க, கண்ணன் புயலை உண்டாக்குகின்றான். புயலில் படகு தத்தளிக்கின்றது. படகினில் ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே புகுகின்றது. கண்ணன் தனக்கு உடல் நலம் குன்றியதாகப் பாசாங்கு செய்கின்றான். அதனால் தாங்கள் எப்படி கரை சேர்வது, கண்ணனை எங்ஙனம் உயிர்காப்பது என பெருங்கவலை கொள்கின்றனர். அதற்கு, கண்ணன் படகின் ஓட்டையை அடைக்க அவர்கள் யாவருடைய ரவிக்கைகளையும் அவிழ்த்து ஓட்டையில் திணிக்கச்சொல்கின்றான். ஆய்ச்சியர் அங்ஙனமே செய்தும் ரவிக்கைகளெல்லாம் நீரில் அடித்துக்கொண்டு போய்விடுகின்றன. கண்ணன் அவர்களை தங்களுடைய சேலைகளையும் அவிழ்த்து ஓட்டையை அடைக்கும்படி கூறுகின்றான். ஆய்ச்சியர் பெரும் தயக்கத்திற்குப் பின்னர் அங்ஙனமே செய்தும், அவைகளும் (சேலைகள்) நீரில் அடித்துச் செல்லப்படவே, செய்வதறியாது, ஆய்ச்சியர், கண்ணனை, சரணடைந்து கதறினர். கண்ணன் அவர்கள் மேல் இரக்கம் கொண்டு, புயல்-மழையினை நிறுத்தி, அவர்களுக்கு ஆடைகளை அளித்தான். செருக்கு அகன்ற ஆய்ச்சியர், கண்ணனைக் கொண்டாடினர். இதற்குமேல் இந்தப் பாடல்.

Top

சந்தனம் பூசினரே - ஆய்ச்சியரைக்குறிக்கும்
யது நந்தன் - பரந்த கண்களோன் - கண்ணன்
முல்லைப் பற்களினர் - ஆய்ச்சியர்
அவர்களையும் - ஆய்ச்சியரைக் குறிக்கும்
தவனகம் - மருக்கொழுந்து
திகழும் - இறைவனைக் குறிக்கும்

Top


Updated on 31 Oct 2010

4 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களுக்கு
 
இப்பாடலில் உள்ள புய்யருகா3, தி3த்3தெ3ருகா3, கட்டெருகா3 , ஹாரதுலெத்தெருகா3, பூஜலு ஸேயருகா3  என்னும் வினைச்சொற்களைப் பற்றி முன்னமே கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டிருக்கிறோம்.  இவற்றின் பொருள் எனக்கு இன்னும் முழுமையாக விளங்கவில்லை.
திருத்தப்பட்ட வலையிடுகையில் நீங்கள் பின்வருமாறு கூறியுள்ளீர்.
Comments -
General – gandhamu puyyarugA – tilakamu didderugA – cElamu kaTTerugA – hAratulu etterugA – pUjalu sEyarugA – These verbs (puyyarugA etc.) cannot be adequately translated in English language. This is sort of wonderment.
 
இவ்வினைச் சொற்களின் முடிவிலுள்ள ‘கா’ விற்கு எப்படிப் பொருள் கொள்வது. இது அசைச்சொல்லா என்று முன்னம் நான் ஐயம் கொண்டேன்.  ஆனால் ‘கா’ என்பதற்கு ‘அன்றோ’ எனும் பொருள் கொண்டு என் கருத்தைக் கீழே கூறியுள்ளேன்.
 
தாங்கள் இவற்றை இறந்தகால வினை முற்றுகளாக எடுத்துக்கொண்டுள்ளீர்(past perfect).  முதலில் உள்ள புய்யருகா இறுதியில் உள்ள ஸேயருகா என்பன எதிர்மறைப் பொருள்களைத் தருகின்றன.  இவை வினை முற்றுகளாக ஒலிக்கவில்லை. இவ்விரண்டினை பூஸெருகா, சேஸெருகா என்று எடுத்துக் கொண்டால் அவை தி3த்3தெ3ருகா3, கட்டெருகா3 , ஹாரதுலெத்தெருகா3 என்பவற்றோடு ஒத்துள்ளன.
This is sort of wonderment  என்று நீங்கள் கூறியுள்ளதன் படி தியாகராஜர் கோபியர் கண்ணனுடன் மகிழ்ந்திருப்பதைத் தன் மணக்கண்ணால் கண்டு ஆச்சரியப்படுவதாக எடுத்துக்கொண்டால்
1க3ந்த4மு பூஸெரு கா3, திலகமு தி3த்3தெ3ருகா3 , சேலமு கட்டெருகா3 , ஹாரதுலெத்தெருகா3, பூஜலு சேஸெருகா3  என்பன சரியா.  இவை சந்தனம் பூசுகிறார்களன்றோ/பூசுகின்றார்களல்லவா, திலகம் திருத்துகிறார்களன்றோ, பொன்னாடை கட்டுகிறார்களன்றோ, ஆரத்தி எடுக்கிறார்களன்றோ, வழிபாடு செய்கிறார்களன்றோ என்று பொருள் தரும். 
 
ஒரு கோபி மற்ற கோபிகளுக்குக் கூறுவதாக எடுத்துக் கொண்டால் பூயெருகா, தித்தெருகா, என்னும் சொற்களுக்கு ”சந்தனம் பூசுங்கள்/ பூசுங்களேன்/ பூசலாகாதா” என்று பொருள் கொள்ளக்கூடாதா. இதேபோல் மற்ற வினைச் சொற்களுக்கும் பொருள் கொள்ளலாமே.
 
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

பொருள் விளங்கா சொற்களுக்கு, கூடியவரையில் பரம்பரையாக வழங்கும் பொருளையே நான் தருவது வழக்கம். அங்ஙனமே, இந்த சொல்லுக்கு, புத்தகங்களில் 'பூசினார்கள்' என்று (கடந்த காலத்தில்) பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அங்ஙனமே, நான் 'பூசினரே' என்று மொழி பெயர்த்துள்ளேன். மற்ற சொற்களும் அங்ஙனமே.

வணக்கம்
கோவிந்தன்

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
திரு கல்லூரி ஸத்யராம ப்ரஸாத் அவர்கள் கொடுத்துள்ள பொருள் மிகத்தெளிவாக உள்ளது. அவரோடு முன்பே தாங்கள் கருத்துப் பறிமாற்றம் செய்துள்ளீர். இருப்பினும் அவர் கூற்றினைக் கொடுத்துள்ளேன்.
இதற்குப் பொருள் பூசமாட்டீர்களா என்பதல்லவா. இதுபோலவே மற்ற வினைச்சொற்களுக்கும் பொருள் கொள்ளவேண்டும்.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

தங்கள் கேள்விகளுக்கு, இந்த கீர்த்தனையின் ஆங்கில வடிவத்தில் பதிலளித்துள்ளேன்.

'புய்யருகா3' என்பது 'பூசுவரன்றோ' என்று மொழிபெயர்க்கலாம். ஆனால் நான் 'பூசினரே' என்று கொடுத்துள்ளேன்.

வணக்கம்
கோவிந்தன்