Monday, November 1, 2010

தியாகராஜ கிருதி - தவ தா3ஸோஹம் - ராகம் புன்னாகவராளி - Tava Dasoham - Raga Punnagavarali

பல்லவி
1தவ தா3ஸோஹம் தவ தா3ஸோஹம்
தவ தா3ஸோஹம் தா31ரதே2

சரணம்
சரணம் 1
வர ம்ரு2து3 பா4ஷ விரஹித தோ3
நர வர வேஷ தா31ரதே2 (தவ)


சரணம் 2
ஸரஸிஜ நேத்ர பரம பவித்ர
ஸுர பதி மித்ர தா31ரதே2 (தவ)


சரணம் 3
நின்னு கோரிதிரா நிருபம ஸூ1
நன்னேலுகோரா தா31ரதே2 (தவ)


சரணம் 4
மனவினி வினுமா மரவ ஸமயமா
இன குல த4னமா தா31ரதே2 (தவ)


சரணம் 5
4ன ஸம நீல முனி ஜன பால
2கனக து3கூல தா31ரதே2 (தவ)


சரணம் 6
4ர நீவண்டி தை3வமு லேத3ண்டி
1ரணனுகொண்டி தா31ரதே2 (தவ)


சரணம் 7
ஆக3ம வினுத ராக3 விரஹித
த்யாக3ராஜ நுத தா31ரதே2 (தவ)


பொருள் - சுருக்கம்

  • தசரதன் மகனே!
  • உயர் இன்சொல்லோனே! குற்றங்களற்றோனே! உயர் மனித வேடத்தோனே!
  • கமலக் கண்ணா! முற்றிலும் தூயோனே! வானோர் தலைவன் நண்பனே!
  • இணையற்ற சூரனே!
  • பகலவன் குலச் செல்வமே!
  • கார்முகில் நிகர் நீலவண்ணனே! முனிவர்களைக் காப்போனே! பொற்றுகில் அணிவோனே!
  • ஆகமங்களில் புகழப்பெற்றோனே! பற்றற்றோனே! தியாகராசன் போற்றுவோனே!

  • உனது தொண்டன் நான்.

    • உன்னை வேண்டினேனய்யா.
    • என்னை யாள்வாயய்யா,

    • வேண்டுதலைக் கேளுமய்யா.
    • மறக்க இது சமயமா?

    • புவியினில் உன்னைப் போன்ற தெய்வமில்லை யென்றேன்;
    • (உன்னிடம்) புகலடைந்தேன்.


  • உனது தொண்டன் நான்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தவ/ தா3ஸ:/-அஹம்/ தவ/ தா3ஸ:/-அஹம்/
உனது/ தொண்டன்/ நான்/ உனது/ தொண்டன்/ நான்/

தவ/ தா3ஸ:/-அஹம்/ தா31ரதே2/
உனது/ தொண்டன்/ நான்/ தசரதன் மகனே/


சரணம்
சரணம் 1
வர/ ம்ரு2து3/ பா4ஷ/ விரஹித/ தோ3ஷ/
உயர்/ இன்/ சொல்லோனே/ அற்றோனே/ குற்றங்கள்/

நர/ வர/ வேஷ/ தா31ரதே2/ (தவ)
மனித/ உயர்/ வேடத்தோனே/ தசரதன் மகனே/


சரணம் 2
ஸரஸிஜ/ நேத்ர/ பரம/ பவித்ர/
கமல/ கண்ணா/ முற்றிலும்/ தூயோனே/

ஸுர/ பதி/ மித்ர/ தா31ரதே2/ (தவ)
வானோர்/ தலைவன்/ நண்பனே/ தசரதன் மகனே/


சரணம் 3
நின்னு/ கோரிதிரா/ நிருபம/ ஸூ1ர/
உன்னை/ வேண்டினேனய்யா/ இணையற்ற/ சூரனே/

நன்னு/-ஏலுகோரா/ தா31ரதே2/ (தவ)
என்னை/ யாள்வாயய்யா/ தசரதன் மகனே/


சரணம் 4
மனவினி/ வினுமா/ மரவ/ ஸமயமா/
வேண்டுதலை/ கேளுமய்யா/ மறக்க/ (இது) சமயமா/

இன/ குல/ த4னமா/ தா31ரதே2/ (தவ)
பகலவன்/ குல/ செல்வமே/ தசரதன் மகனே/


சரணம் 5
4ன/ ஸம/ நீல/ முனி ஜன/ பால/
கார்முகில்/ நிகர்/ நீலவண்ணனே/ முனிவர்களை/ காப்போனே/

கனக/ து3கூல/ தா31ரதே2/ (தவ)
பொன்/ துகில் அணிவோனே/ தசரதன் மகனே/


சரணம் 6
4ர/ நீவு/-அண்டி/ தை3வமு/ லேது3/-அண்டி/
புவியினில்/ உன்னை/ போன்ற/ தெய்வம்/ இல்லை/ யென்றேன்/

1ரணு/-அனுகொண்டி/ தா31ரதே2/ (தவ)
(உன்னிடம்) புகல்/ அடைந்தேன்/ தசரதன் மகனே/


சரணம் 7
ஆக3ம/ வினுத/ ராக3/ விரஹித/
ஆகமங்களில்/ புகழப்பெற்றோனே/ பற்று/ அற்றோனே/

த்யாக3ராஜ/ நுத/ தா31ரதே2/ (தவ)
தியாகராசன்/ போற்றுவோனே/ தசரதன் மகனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - தவ தா3ஸோஹம் - உனது தொண்டன் நான். ஒரு சொல்லை மூன்று தடவை சொன்னால், அதனை உறுதிப்படுத்தியதாகும்.

2 - கனக து3கூல - பொற்றுகில் - அரியின் பீதாம்பரம்.

Top


Updated on 01 Nov 2010

No comments: