Saturday, October 30, 2010

தியாகராஜ கிருதி - க்ரு2ஷ்ணா மாகேமி - ராகம் புன்னாகவராளி - Krishna Makemi Dova - Raga Punnagavarali - Nauka Charitram

பல்லவி
க்ரு2ஷ்ணா மாகேமி தோ3வ பல்கு
கீர்தி கல்கு3னு 1தே3வ தே3 பா3ல (க்ரு2)

சரணம்
சரணம் 1
ஸரிகெ3 ரவிகலெல்ல போயெ வெர்ரி
2சலிகி மேனுலோர்வனாயெ 3பா3 (க்ரு2)


சரணம் 2
ஸரிவாரிலோ ஸிக்3கு3 போயெ நீரு
ஜானுலபை தாகனாயெ 3பா3 (க்ரு2)


சரணம் 3
ஸர்வமு நேனனுகொன்ன நீது3
ஸாமர்த்2யமு ஜூபு சின்ன 3பா3 (க்ரு2)


சரணம் 4
பா3ய லேனி மம்மு நீவுயே
உபாயமைன தெல்பி ப்3ரோவு 3பா3 (க்ரு2)


சரணம் 5
மாதோ சேரக3யிந்த பா34 கல்கே3
மரதுமாயிக ப்ராண நாத2 3பா3 (க்ரு2)


சரணம் 6
இந்து3கனுசு 4தல்லி ஸாகெனோ லேக-
யே பாபுல கண்ட்3லு தாகெனோ 3பா3 (க்ரு2)


சரணம் 7
ராகேந்து3 முக23ய ராதா3 த்யாக3-
ராஜார்சித ப்3ரோவ ராதா3 3பா3 (க்ரு2)


பொருள் - சுருக்கம்

  • பாலகிருஷ்ணா!
  • சின்ன பாலகிருஷ்ணா!
  • எம்முயிர்த் தலைவா!
  • வானோர் தலைவா!
  • நிறைமதி முகத்தோய்! தியாகராசனால் தொழப்படுவோனே!

  • எமக்கென்ன வழி, சொல்;
  • புகழுண்டாகும்.

    • சரிகை ரவிக்கைகளெல்லாம் போயின;
    • கடும் குளிரினை (எமது) உடல்கள் பொறுக்கலாயின.

    • நிகரானோரிடை (எமது) நாணம் போனது;
    • நீர் முழங்கால்களுக்கு மேல் தொடலானது.

    • 'யாவும் நானே' யெனக் கருதிய உனது திறமையைக் காட்டு.

    • (உன்னைப்) பிரியா எம்மை நீ எந்த வழி வகையாகிலும் கூறிக் காப்பாற்று.

    • எம்முடன் சேரவே, (உனக்கு) இத்தனைத் துன்பங்கள் ஏற்பட்டன;
    • மறப்போமாயினி?

    • இதற்கென்றா தாய்மார்கள் (எம்மை) வளர்த்தனர்? அன்றி
    • எந்த பாவிகளின் கண்கள் பட்டனவோ?

    • கருணை வாராதா?
    • (எம்மைக்) காக்கலாகாதா?


  • எமக்கென்ன வழி, சொல்;
  • புகழுண்டாகும்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
க்ரு2ஷ்ணா/ மாகு/-ஏமி/ தோ3வ/ பல்கு/
கிருஷ்ணா/ எமக்கு/ என்ன/ வழி/ சொல்/

கீர்தி/ கல்கு3னு/ தே3வ/ தே3வ/ பா3ல/ (க்ரு2)
புகழ்/ உண்டாகும்/ வானோர்/ தலைவா/ பால/ கிருஷ்ணா...


சரணம்
சரணம் 1
ஸரிகெ3/ ரவிகலு/-எல்ல/ போயெ/ வெர்ரி/
சரிகை/ ரவிக்கைகள்/ எல்லாம்/ போயின/ கடும்/

சலிகி/ மேனுலு/-ஓர்வனாயெ/ பா3ல/ (க்ரு2)
குளிரினை/ (எமது) உடல்கள்/ பொறுக்கலாயின/ பால/ கிருஷ்ணா...


சரணம் 2
ஸரிவாரிலோ/ ஸிக்3கு3/ போயெ/ நீரு/
நிகரானோரிடை/ (எமது) நாணம்/ போனது/ நீர்/

ஜானுலபை/ தாகனாயெ/ பா3ல/ (க்ரு2)
முழங்கால்களுக்கு மேல்/ தொடலானது/ பால/ கிருஷ்ணா...


சரணம் 3
ஸர்வமு/ நேனு/-அனுகொன்ன/ நீது3/
'யாவும்/ நானே/' யெனக் கருதிய/ உனது/

ஸாமர்த்2யமு/ ஜூபு/ சின்ன/ பா3ல/ (க்ரு2)
திறமையை/ காட்டு/ சின்ன/ பால/ கிருஷ்ணா...


சரணம் 4
பா3ய லேனி/ மம்மு/ நீவு/-ஏ/
(உன்னைப்) பிரியா/ எம்மை/ நீ/ எந்த/

உபாயமைன/ தெல்பி/ ப்3ரோவு/ பா3ல/ (க்ரு2)
வழி வகையாகிலும்/ கூறி/ காப்பாற்று/ பால/ கிருஷ்ணா...


சரணம் 5
மாதோ/ சேரக3/-இந்த/ பா34/ கல்கே3/
எம்முடன்/ சேரவே/ (உனக்கு) இத்தனை/ துன்பங்கள்/ ஏற்பட்டன/

மரதுமா/-இக/ ப்ராண/ நாத2/ பா3ல/ (க்ரு2)
மறப்போமா/ யினி/ எம்முயிர்/ தலைவா/ பால/ கிருஷ்ணா...


சரணம் 6
இந்து3கு/-அனுசு/ தல்லி/ ஸாகெனோ/ லேக/-
இதற்கு/ என்றா/ தாய்மார்கள்/ (எம்மை) வளர்த்தனர்/ அன்றி/

ஏ/ பாபுல/ கண்ட்3லு/ தாகெனோ/ பா3ல/ (க்ரு2)
எந்த/ பாவிகளின்/ கண்கள்/ பட்டனவோ/ பால/ கிருஷ்ணா...


சரணம் 7
ராகா/-இந்து3/ முக2/ த3ய/ ராதா3/ த்யாக3ராஜ/-
நிறை/ மதி/ முகத்தோய்/ கருணை/ வாராதா/ தியாகராசனால்/

அர்சித/ ப்3ரோவ ராதா3/ பா3ல/ (க்ரு2)
தொழப்படுவோனே/ (எம்மைக்) காக்கலாகாதா/ பால/ கிருஷ்ணா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தே3வ தே3 - ஏ தே3வ.

2 - சலிகி மேனுலோர்வனாயெ - கலிகி மேனுலோர்வனாயெ - சலிகி மேமோர்வனாயெ : புத்தகங்களில், இதற்கு, 'எங்கள் உடம்புகள் கடும் குளிரைத் தாங்கவேண்டியதாயிற்று' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, 'சலிகி மேனுலோர்வனாயெ' என்பது ஏற்கப்பட்டது.

3 - பா3 - ஸ்ரீ.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
4 - தல்லி ஸாகெனோ - 'தல்லி' (தாய்) என்ற சொல், சில புத்தகங்களில், கிருஷ்ணனின் தாயைக் குறிப்பதாகவும், சில புத்தகங்களில், ஆய்ச்சியர்களின் தாய்மார்களைக் குறிப்பதாகவும், பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனக்குத் தெரிந்தவரை, 'ஆய்ச்சியர்களின் தாய்மார்கள்' என்பதே இவ்விடத்தில் பொருந்தும். அங்ஙனமே பொருள் கொள்ளப்பட்டது.

Top

இப்பாடல் 'நௌக சரித்ரம்' (ஓடக்கதை) எனப்படும் நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும்.

(பாடலின் பின்னணி - ஆய்ச்சியர், யமுனைக் கரையில், கண்ணனைச் சந்தித்து, அவனுடன் படகில் யமுனை நதியில் பயணம் செய்தனர். கண்ணனை சந்தித்த மகிழ்ச்சியில், அவர்கள், கண்ணன், 'தங்களது சொத்து' என்று செருக்குற்றனர். அவர்களுடைய செருக்கினைப் போக்குதற்காக, யமுனையில், புயலையும், மழையையும் உண்டாக்கினான் கண்ணன். அந்தப் புயல் - மழையினால், படகு, நீரில் தத்தளித்தது. அதனால் படகில் ஓட்டை விழுந்து, தண்ணீர் படகினுள் நுழைய ஆரம்பித்தது. இதனைக் கண்டு ஆய்ச்சியர் செய்வதறியாது தத்தளித்தனர். அச்சமயம், கண்ணன் தனக்கு உடல் நலம் இல்லாதது போன்று நடித்தான். ஆய்ச்சியர் தமது விதியை நொந்துகொண்டனர். கண்ணன், அவர்களை, தமது ரவிக்கைகளையெல்லாம் கழற்றி, படகின் ஓட்டையில் அடைக்கச் சொன்னான். அவர்கள் அப்படியே செய்தும், ரவிக்கைகளெல்லாம் அங்கு நிலைக்காது நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இப்பாடலில், ஆய்ச்சியர், கண்ணனிடம் இனி என்ன செய்வதென்று கேட்கின்றனர்.)

Top


Updated on 30 Oct 2010

No comments: