Tuesday, October 12, 2010

தியாகராஜ கிருதி - கா3ரவிம்ப ராதா3 - ராகம் க4ண்டா - Gaaravimpa Rada - Raga Ghanta

பல்லவி
கா3ரவிம்ப ராதா33ருட33மன 1வாதா3 நனு (கா3)

அனுபல்லவி
ஸ்ரீ ரமா 2மனோ-ஹர ஸ்1ரித ஹ்ரு232விஹார
சேர ராவதே3மிரா ஸ்ரீ ரகு4வர 2தீ4 (கா3)

சரணம்
சரணம் 1
பேருகைன லேதா3 3பிலிசிதே ரா ராதா3 4ஸரி-
வாரலாட3 லேதா3
வினி வரத3 கருண ராதா3
மாரு பல்க வாதா3 5மும்மாரு நம்ம லேதா3 (கா3)


சரணம் 2
தனயுடா3டு3 மாட தல்லி தண்ட்3ருலகதி3யாட காதா3
6நினு பாடி3ன பாட வினி நீ முத்3து3 நோட-
யேமன வலதி3ச்சோட
மாத47யிங்க தெர சாடா (கா3)


சரணம் 3
8ரூகலொஸகி3 கொன்ன ஸதி 9ரூபமெட்லுன்ன
ஸ்ரீ கர கு3ணமுன்ன செலி செலிமி வீட3ரன்ன
பராகு நீகு 10மின்ன த்யாக3ராஜ வினுத 11பி3ன்ன (கா3)


பொருள் - சுருக்கம்
  • கருட வாகனனே!
  • இலக்குமி மனம் கவர்வோனே! சார்ந்தோர் உள்ளத்துறைவோனே! இரகுவரா, தீரனே!
  • வரதா!
  • மாதவா!
  • சீரருள்வோனே! தந்தையே! தியாகராசன் போற்றும் மாற்றற்றோனே!
  • என்னிடம் அன்பு காட்டாயோ? வாதா?

    • (என்னைச்) சேர வாராததேனய்யா,
    • பேருக்காகிலும் இல்லையோ?
    • அழைத்தால் வரக்கூடாதோ?
    • ஈடானோர் என்னை இகழவில்லையோ?
    • கேட்டும், கருணை வாராதோ?
    • பதில் சொல்ல வாதோ?
    • முற்றும் நம்பவில்லையோ?
    • மக்கள் கூறும் சொல், தாய் தந்தையருக்கு அது கேளிக்கையன்றோ?
    • உன்னைப் பாடிய பாட்டைக்கேட்டு, உன் அழகான வாயினால் ஏதும் சொல்லக்கூடாதா இங்கு?
    • இன்னும் திரை மறைவோ?
    • பொருள் தந்து கொண்ட மனைவியின் உருவம் எவ்வாறாயினும், பண்புடைய பெண்ணின் தோழமை வீடார்;
    • அசட்டை, உமக்குப் பெருமையோ?
  • என்னிடம் விரைவில் அன்பு காட்டாயோ? வாதா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கா3ரவிம்ப ராதா3/ க3ருட3/ க3மன/ வாதா3/ நனு/ (கா3)
அன்பு காட்டாயோ/ கருட/ வாகனனே/ வாதா/ என்னிடம்/


அனுபல்லவி
ஸ்ரீ ரமா/ மனோ/-ஹர/ ஸ்1ரித/ ஹ்ரு23ய/ விஹார/
இலக்குமி/ மனம்/ கவர்வோனே/ சார்ந்தோர்/ உள்ளத்து/ உறைவோனே/

சேர/ ராவு/-அதே3மிரா/ ஸ்ரீ ரகு4வர/ தீ4ர/ (கா3)
(என்னைச்) சேர/ வாராதது/ ஏனய்யா/ ஸ்ரீ ரகுவரா/ தீரனே/


சரணம்
சரணம் 1
பேருகைன/ லேதா3/ பிலிசிதே/ ரா/ ராதா3/ ஸரி-வாரலு/-
பேருக்காகிலும்/ இல்லையோ/ அழைத்தால்/ வர/ கூடாதோ/ ஈடானோர்/

ஆட3/ லேதா3/ வினி/ வரத3/ கருண/ ராதா3/
(என்னை) இகழவில்லையோ/ கேட்டும்/ வரதா/ கருணை/ வாராதோ/

மாரு/ பல்க/ வாதா3/ மும்மாரு/ நம்ம லேதா3/ (கா3)
பதில்/ சொல்ல/ வாதோ/ முற்றும்/ நம்பவில்லையோ/


சரணம் 2
தனயுடு3/-ஆடு3/ மாட/ தல்லி/ தண்ட்3ருலகு/-அதி3/-ஆட/ காதா3/
மக்கள்/ கூறும்/ சொல்/ தாய்/ தந்தையருக்கு/ அது/ கேளிக்கை/ அன்றோ/

நினு/ பாடி3ன/ பாட/ வினி/ நீ/ முத்3து3/ நோட/-
உன்னை/ பாடிய/ பாட்டை/ கேட்டு/ உன்/ அழகான/ வாயினால்/

ஏமி/-அன/ வலது3/-இச்சோட/ மாத4வ/-இங்க/ தெர/ சாடா/ (கா3)
ஏதும்/ சொல்ல/ கூடாதா/ இங்கு/ மாதவா/ இன்னும்/ திரை/ மறைவோ/


சரணம் 3
ரூகலு/-ஒஸகி3/ கொன்ன/ ஸதி/ ரூபமு/-எட்ல/-உன்ன/
பொருள்/ தந்து/ கொண்ட/ மனைவியின்/ உருவம்/ எவ்வாறு/ ஆயினும்/

ஸ்ரீ/ கர/ கு3ணமு/-உன்ன/ செலி/ செலிமி/ வீட3ரு/-அன்ன/
சீர்/ அருள்வோனே/ பண்பு/ உடைய/ பெண்ணின்/ தோழமை/ வீடார்/ தந்தையே/

பராகு/ நீகு/ மின்ன/ த்யாக3ராஜ/ வினுத/ பி3ன்ன/ (கா3)
அசட்டை/ உமக்கு/ பெருமையோ/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/ விரைவில்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வாதா3 - ராம.

2 - மனோ-ஹர - விஹார - தீ4 : மனோ-ஹரா - விஹாரா - தீ4ரா.

3 - பிலிசிதே - பிலிசின.

6 - ஏமன வலதி3ச்சோட - ஏமன வலனிச்சோட - ஏமன வலதே3யிச்சோட.

7 - இங்க தெர சாடா - இக தெர சாடா.

9 - ரூபமெட்லுன்ன - ரூபமுலெட்லுன்ன.

10 - மின்ன - முன்ன : இவ்விடத்தில் 'முன்ன' என்பதற்குப் பொருளேதும் இல்லை.

11 - பி3ன்ன - பி4ன்ன : இவ்விடத்தில் 'பி3ன்ன' என்பதே பொருந்தும் எனக் கருதுகின்றேன்.

Top

மேற்கோள்கள்
8 - ரூகலொஸகி3 - பொருள் தந்து. முன்னாளில், மாப்பிள்ளை வீட்டார், பெண்ணின் பாதுகாப்புக்காக, பொருள் கொடுத்துப் பெண் கொண்டனர். இது 'ஸ்த்ரீ த4னம்' அல்லது 'கன்யா த4னம்' அல்லது 'கன்யா ஸு1ல்கம்' எனப்படும். இந்த 'ஸ்த்ரீ த4னம்' தான் இன்று 'சீதனம்' என்று தவறான பொருளில் வழங்குகின்றது. 'வரதக்ஷிணை' என்ற, பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்குப் பொருளும் கொடுத்துப் பெண் கொடுக்கும் வழக்கம், பிற்காலத்தில் ஏற்பட்டதாகும்.

Top


விளக்கம்
4 - ஸரி-வாரலாட3 லேதா3 - 'ஸரிவாரலு' என்பது ஈடானோரைக் குறிக்கும். சில புத்தகங்களில், இதற்கு, 'இறைவனுக்கு ஈடானோர்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவ்விடத்தில், தியாகராஜர், 'தனக்கு ஈடானவர்களை'க் குறிப்பிடுவதாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

5 - மும்மாரு - மும்முறை - ஒரு சொல்லினை, மும்முறை திரும்பச் சொன்னால், அது உறுதி என்று பொருளாகும்.

6 - நினு பாடி3ன பாட வினியேமன வலது3 - இதற்கு 'உன்னைப் பாடிய பாடலைக் கேட்டு ஏதும் சொல்லக் கூடாதா' என்று பொருள் கொள்ளப்பட்டது. தியாகராஜரின், இறைவனுடன், இத்தகைய உரையாடலுக்குச் சரிவர பொருள் கொள்வது மிகவும் கடினமாகும். மேலும், முன்னம் குறிப்பிட்டுள்ள 'வேறுபாடு'களினால், இதற்கு சரியான பொருள் கூறுவது முடியாததாகின்றது. இங்கு கொள்ளப்பட்டுள்ள பொருள், சரியா அல்லது, இதற்கு வேறு ஏதும் பொருளுண்டா என்பதும் விளங்கவில்லை.

Top

7 - தெர சாடா - திறை மறைவு - இது, இறைவனின் 'மாயை' எனப்படும் திரையினைக் குறிக்கலாம்.

8 - ரூகலொஸகி3 - பொருள் தந்து - சில புத்தகங்களில் இதற்கு 'விலைகொடுத்து வாங்கிய மனைவி, அழகுள்ளவளானாலும், பண்புக்காக மணந்த பெண்ணைப் போன்று, கணவனுடன் நெடுங்காலம் வாழமாட்டாள்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனக்குத் தெரிந்த வரையில், பாடலில் அப்படிப்பட்ட சொற்கள் ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை. மேலே கூறியது போன்று, 'பொருள் தந்து பெண் கொள்வது' அக்காலத்து வழக்கம். அதனை, 'விலைகொடுத்து வாங்குதல்' என்று கூறுவது பொருந்தாது என்று நான் கருதுகின்றேன்.

இங்கேதும் சொல்லக் கூடாதா - 'இங்கென்ன சொல்வாயோ' என்றும் கொள்ளலாம்.
Top


Updated on 21 Feb 2014

No comments: