1ஜய மங்க3ளம் நித்ய ஸு1ப4 மங்க3ளம்
சரணம்
சரணம் 1
கருணா ரஸாக்ஷாய காமாரி வினுதாய
2தருணாருணாதி ஸுந்த3ர பதா3ய
நிருபம ஸ1ரீராய நிகி2லாக3ம சராய
ஸுர வினுத சரிதாய ஸு-வ்ரதாய (ஜய)
சரணம் 2
குந்த3 ஸம ரத3னாய கும்ப4ஜ ஸு-கே3யாய
மந்த3ராக3 த4ராய மாத4வாய
கந்த3ர்ப ஜனகாய காமித ஸு-ப2லதா3ய
ப்3ரு2ந்தா3ரகாராதி பீ4-கராய (ஜய)
சரணம் 3
ஸர்வ லோக ஹிதாய ஸாகேத ஸத3னாய
நிர்விகாராய மானித கு3ணாய
ஸார்வபௌ4மாய போஷித த்யாக3ராஜாய
நிர்வாண ப2லதா3ய நிர்மலாய (ஜய)
பொருள் - சுருக்கம்
- ஜய மங்களம்! என்றும் சுபமங்களம்!
- கருணை ரசக் கண்களோனுக்கு,
- காமன் பகைவன் புகழ்வோனுக்கு,
- இளங்காலைப் பரிதி நிகர், சிவந்த, மிக்கெழில் திருவடியோனுக்கு,
- ஒப்பற்ற உடலோனுக்கு,
- அனைத்தாகமங்கள் உள்ளுறைவோனுக்கு,
- அமரர் புகழும் ஒழுக்கத்தோனுக்கு,
- நல் விரதத்தோனுக்கு,
- முல்லை நிகர் பற்களோனுக்கு,
- குட முனியால் பாடப் பெற்றோனுக்கு,
- மந்தர மலை சுமந்தோனுக்கு,
- மது (யாதவ) குலத்தோன்றலுக்கு (அல்லது) இலக்குமி மணாளனுக்கு,
- காமனை யீன்றோனுக்கு,
- விரும்பிய நற்பயன் அருள்வோனுக்கு,
- வானோர் பகைவருக்கு அச்சமூட்டுவோனுக்கு,
- அனைத்துலகிற்கும் இனியோனுக்கு,
- அயோத்தி நகருறைவோனுக்கு,
- மாற்றமற்றோனுக்கு,
- மதிக்கப் பெற்ற பண்புகளுடைத்தோனுக்கு,
- அனைத்தண்டம் ஆள்வோனுக்கு,
- தியாகராசனைப் பேணுவோனுக்கு,
- முத்திப் பயனருள்வோனுக்கு,
- களங்கமற்றோனுக்கு,
- கருணை ரசக் கண்களோனுக்கு,
- ஜய மங்களம்! என்றும் சுபமங்களம்!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஜய/ மங்க3ளம்/ நித்ய/ ஸு1ப4/ மங்க3ளம்/
ஜய/ மங்களம்/ என்றும்/ சுப/ மங்களம்/
சரணம்
சரணம் 1
கருணா/ ரஸ/-அக்ஷாய/ காம/-அரி/ வினுதாய/
கருணை/ ரச/ கண்களோனுக்கு/ காமன்/ பகைவன்/ புகழ்வோனுக்கு/
தருண/-அருண/-அதி/ ஸுந்த3ர/ பதா3ய/
இளங்/ காலை பரிதி/ (நிகர், சிவந்த,) மிக்கெழில்/ திருவடியோனுக்கு/
நிருபம/ ஸ1ரீராய/ நிகி2ல/-ஆக3ம/ சராய/
ஒப்பற்ற/ உடலோனுக்கு/ அனைத்து/ ஆகமங்கள்/ உள்ளுறைவோனுக்கு/
ஸுர/ வினுத/ சரிதாய/ ஸு-வ்ரதாய/ (ஜய)
அமரர்/ புகழும்/ ஒழுக்கத்தோனுக்கு/ நல் விரதத்தோனுக்கு/ ஜய...
சரணம் 2
குந்த3/ ஸம/ ரத3னாய/ கும்ப4ஜ/ ஸு-கே3யாய/
முல்லை/ நிகர்/ பற்களோனுக்கு/ குட முனியால்/ பாடப் பெற்றோனுக்கு/
மந்த3ர/-அக3/ த4ராய/ மாத4வாய (மா/-த4வாய)/
மந்தர/ மலை/ சுமந்தோனுக்கு/ மது (யாதவ) குலத்தோன்றலுக்கு (இலக்குமி/ மணாளனுக்கு/)
கந்த3ர்ப/ ஜனகாய/ காமித/ ஸு-ப2லதா3ய/
காமனை/ யீன்றோனுக்கு/ விரும்பிய/ நற்பயன் அருள்வோனுக்கு/
ப்3ரு2ந்தா3ரக/-அராதி/ பீ4-கராய/ (ஜய)
வானோர்/ பகைவருக்கு/ அச்சமூட்டுவோனுக்கு/ ஜய...
சரணம் 3
ஸர்வ/ லோக/ ஹிதாய/ ஸாகேத/ ஸத3னாய/
அனைத்து/ உலகிற்கும்/ இனியோனுக்கு/ அயோத்தி நகர்/ உறைவோனுக்கு/
நிர்விகாராய/ மானித/ கு3ணாய/
மாற்றமற்றோனுக்கு/ மதிக்கப் பெற்ற/ பண்புகளுடைத்தோனுக்கு/
ஸார்வபௌ4மாய/ போஷித/ த்யாக3ராஜாய/
அனைத்தண்டம் ஆள்வோனுக்கு/ பேணுவோனுக்கு/ தியாகராசனை/
நிர்வாண/ ப2லதா3ய/ நிர்மலாய/ (ஜய)
முத்தி/ பயனருள்வோனுக்கு/ களங்கமற்றோனுக்கு/ ஜய...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஜய மங்க3ளம் நித்ய ஸு1ப4 மங்க3ளம் - சில புத்தகங்களில் இச்சொற்கள் இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
2 - தருணாருணாதி - தருணாருணாராதி : பிற்கூறியது 'தருண+அருண+அராதி' என்று பிரிக்கப்படும். இவ்விடத்தில், 'அராதி' (பகைவன்) என்ற சொல்லுக்குப் பொருளேதும் இல்லை. எனவே 'தருணாருணாதி' ஏற்கபட்டது.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
கருணை ரசம் - நவரசங்களிலொன்று
காமன் பகைவன் - சிவன்
குட முனி - அகத்தியர்
மாற்றமற்றோன் - பரம்பொருளைக் குறிக்கும்.
Top
Updated on 13 Oct 2010
No comments:
Post a Comment