Sunday, October 10, 2010

தியாகராஜ கிருதி - எட்ல கனுகொ3ந்து3னோ - ராகம் க4ண்டா - Etla Kanugonduno - Raga Ghanta

பல்லவி
எட்ல கனுகொ3ந்து3னோ ஸ்ரீ ஹரினி நே(னெட்ல)

அனுபல்லவி
1சுட்டர 23டி3ய தோ3கு நா மதி3 லோனி
ஜாலி 3தெலிஸி விபு4னிதோ தெல்பு வாரி(னெட்ல)

சரணம்
சரணம் 1
4ரலோ கலுகு3 ஸம்பத3ல ரோஸி தனுவுனு
மரசி ஹரினி கூடு3 மஹாராஜுலகு கா3க (எட்ல)


சரணம் 2
மலயனி மத3முன தெலியகுண்டினி கானி
அல நாடே3 ஸத3யுனி அனுஸரிஞ்சக போதினே(னெட்ல)


சரணம் 3
சின்ன ப்ராயமு நாடே3 ஸ்ரீ ஹரி பைனாஸ
கொன்ன ஜீவுட3 கானு கோத3ண்ட3 பாணி நே(னெட்ல)


சரணம் 4
ஈ ஜன்மமீ பா4க்3யமீ ஸொம்முலெல்ல
ப்ரயோஜனமா த்யாக3ராஜ வினுதுனி நே(னெட்ல)


பொருள் - சுருக்கம்
கோதண்ட பாணி!

  • எப்படிக் கண்டுகொள்வேனோ அரியை நான்?

  • சுற்றிலும், நாழிகை வழிக்கு, எனது மனத்தினிலுள்ள துயரறிந்து, எங்கும் நிறைந்தோனிடம் தெரிவிப்போரை, எப்படிக் கண்டுகொள்வேனோ?

    • புவியிலுள்ள செல்வங்களை வெறுத்து,
    • உடலினை மறந்து,
    • அரியைக் கூடும் பெருந்தகைகளுக்கன்றி,

  • எப்படிக் கண்டுகொள்வேனோ அரியை?

    • விட்டகலாத செருக்கினால் அறியாதிருந்தேன்;
    • அல்லாது, அன்றே தயாளனைப் பின்பற்றாமற் போனேனே;
    • சிறு வயது முதலே, அரியின் மேலாசை கொண்ட சீவனல்லவோ நான்?
    • இப்பிறவி, இப்பேறு, இந்த சொத்துக்கள் யாவும் பயன் படுமோ?


  • தியாகராசன் போற்றுவோனை நானெப்படிக் கண்டுகொள்வேனோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எட்ல/ கனுகொ3ந்து3னோ/ ஸ்ரீ ஹரினி/ நேனு/-(எட்ல)
எப்படி/ கண்டுகொள்வேனோ/ ஸ்ரீ ஹரியை/ நான்/


அனுபல்லவி
சுட்டர/ க3டி3ய/ தோ3வகு/ நா/ மதி3/ லோனி/
சுற்றிலும்/ நாழிகை/ வழிக்கு/ எனது/ மனத்தினில்/ உள்ள/

ஜாலி/ தெலிஸி/ விபு4னிதோ/ தெல்பு வாரினி/-(எட்ல)
துயர்/ அறிந்து/ எங்கும் நிறைந்தோனிடம்/ தெரிவிப்போரை/ எப்படி...


சரணம்
சரணம் 1
4ரலோ/ கலுகு3/ ஸம்பத3ல/ ரோஸி/ தனுவுனு/
புவியில்/ உள்ள/ செல்வங்களை/ வெறுத்து/ உடலினை/

மரசி/ ஹரினி/ கூடு3/ மஹாராஜுலகு/ கா3க/ (எட்ல)
மறந்து/ அரியை/ கூடும்/ பெருந்தகைகளுக்கு/ அன்றி/ எப்படி...


சரணம் 2
மலயனி/ மத3முன/ தெலியக/-உண்டினி/ கானி/
விட்டகலாத/ செருக்கினால்/ அறியாது/ இருந்தேன்/ அல்லாது/

அல நாடே3/ ஸத3யுனி/ அனுஸரிஞ்சக/ போதினே/-(எட்ல)
அன்றே/ தயாளனை/ பின்பற்றாமற்/ போனேனே/


சரணம் 3
சின்ன/ ப்ராயமு/ நாடே3/ ஸ்ரீ ஹரி/ பைன/-ஆஸ/
சிறு/ வயது/ முதலே/ ஸ்ரீ ஹரியின்/ மேல்/ ஆசை/

கொன்ன/ ஜீவுட3/ கானு/ கோத3ண்ட3/ பாணி/ நேனு/-(எட்ல)
கொண்ட/ சீவன்/ அல்லவோ (நான்)/ கோதண்ட/ பாணி/ நான்/ எப்படி...


சரணம் 4
ஈ/ ஜன்மமு/-ஈ/ பா4க்3யமு/-ஈ/ ஸொம்முலு/-எல்ல/
இந்த/ பிறவி/ இந்த/ பேறு/ இந்த/ சொத்துக்கள்/ யாவும்/

ப்ரயோஜனமா/ த்யாக3ராஜ/ வினுதுனி/ நேனு/-(எட்ல)
பயன் படுமோ/ தியாகராசன்/ போற்றுவோனை/ நான்/ எப்படி...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - சுட்டர - சுட்லர : தியாகராஜரின் 'எட்ல தொ3ரிகிதிவோ' என்ற 'வசந்த' ராக கீர்த்தனையில், இதேபோன்ற சொல், 'சுட்லார' வருகின்றது. இந்த சொல்லின் வடிவம், சரிவர விளங்கவில்லை. 'சுட்டர' என்பது ஒரே சொல்லா, அல்லது, அந்த சொல்லின் கடைசியில் வரும், 'அர' என்பதனை, 'சுட்டு'+'அர' என்று பிரித்து, அடுத்து வரும், 'க3டி3ய' என்ற சொல்லுடன் சேர்த்து, 'சுட்டு அர க3டி3ய' என்ற பொருள் கொள்ளலாமா என்று தெரியவில்லை. ஆனால், 'சுட்லர' என்பது சரியானால், அப்படிப் பிரிக்க இயலாது என்று கருதுகின்றேன். எனவே, 'சுட்டர' என்பதற்கு ஒரு சொல்லாகவே பொருள் கொள்ளப்பட்டது.

3 - தெலிஸி - தெலிபி : அடுத்து வரும் 'தெலுபு வாரினி' என்ற சொற்களினால், இவ்விடத்தில் , 'தெலிஸி' என்றுதான் இருக்கவேண்டும்.

Top

மேற்கோள்கள்
2 - 3டி3 - நாழிகை - 24 நிமிடங்கள். இந்திய முறைப்படி, 24 நிமிடங்கள் கொண்ட, 60 நாழிகைகள் ஒரு நாள் என்று கணக்காகும். இதற்கு மாறாக, மேற்கத்திய முறைப்படி, 60 நிமிடங்கள் கொண்ட, 24 மணிகள், ஒரு நாள் என்று கணக்காகும்.

Top

விளக்கம்
2 - 3டி3ய தோ3 - நாழிகை வழி. தமிழ் அகராதியின் படி, 'காதம்' என்பது, 7.5 நாழிகைகளில் (180 நிமிடங்கள்) கடக்கும் தூரம் - அதாவது தற்போதைய, 10 மைல்கள் அல்லது 16 கி.மீ. ஆகும். அந்த கணக்குப்படி, 'நாழிகை வழி' என்பது, 2.1 கி.மீ. ஆகும். இதற்கு முன் வரும் சொல்லிலிருந்து, 'அர' என்பதனைப் பிரித்து, 'அர க3டி3ய தோ3வ' (அரை நாழிகை வழி) என்பதற்கு, 1.05 கி.மீ என்று கொள்ளலாம்.

இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இப்பாடலில், பிரகலாதன், இறைவனைக் காண்பதற்கு எங்ஙனம் ஏங்குகின்றான் என்பதனைத் தியாகராஜர் சித்தரிக்கின்றார்.

எங்கும் நிறைந்தோன் - தயாளன் - தியாகராசன் போற்றுவோன் - அரி

Top


Updated on 11 Oct 2010

No comments: