Sunday, April 11, 2010

தியாகராஜ கிருதி - பரம பாவன - ராகம் பந்துவராளி - Parama Paavana - Raga Pantuvarali

பல்லவி
பரம பாவன கு3ண-ஸா1லி நன்னு
பாலிம்பவே 1வனமாலி

சரணம்
சரணம் 1
அன்னி நீவையுண்ட3 லேதா3
நீவகி2லாண்ட3முல ப்3ரோவ லேதா3 (ப)


சரணம் 2
அன்ன நீகிக த3ய ராதா3
நின்னனுஸரிஞ்சின வாட3 காதா3 (ப)


சரணம் 3
நீவாட3னையாரு தூ3ர ராம
நீவு நன்னேசேதி3 மேர (ப)


சரணம் 4
பா4வமுனனு நீவேரா
மஹானுபா4வ மாகிதருலையேரா (ப)


சரணம் 5
தே3வுடை3னயா பா4னு குல
திலகா நீவாட3னு நேனு (ப)


சரணம் 6
தை3வமுலனு வேட3 லேனு நீகு
தகி3னட்டு லோகுவைனானு (ப)


சரணம் 7
வித்தமுலேல வெயி வேலு ராம
ஸத்த மாத்ரமா நீவே சாலு (ப)


சரணம் 8
4க்துல கோஸமு நீவு ராம
1க்துட3வை வெலஸினாவு (ப)


சரணம் 9
2ராஜபு ஜூபு ஸேயகுரா
த்யாக3ராஜ பூஜித மரவகுரா (ப)


பொருள் - சுருக்கம்
முற்றிலும் தூயோனே! குணசாலியே! வனமாலி! தந்தையே! இராமா! பெருந்தகையே! தெய்வமாகிய அந்த பரிதி குலத் திலகமே! சத்து மாத்திரமே! தியாகராசனால் தொழப் பெற்றோனே!

  • என்னைக் காப்பாயய்யா.

    • அனைத்தும் நீயாகியிருக்கவில்லையா?
    • நீ அனைத்தண்டங்களையும் காக்கவில்லையா?

    • உனக்கின்னும் தயை வாராதா?
    • உன்னைப் பின்பற்றினவனன்றோ?

    • உன்னவனாகியும், உட்பகை யாறினையும் ஒறுக்க, நீயென்னை ஏய்த்தல் தகுமா?

    • (எனது) உணர்வினில் நீயேயய்யா.
    • எமக்கு மற்றவர் (தெய்வங்கள்) ஒக்குமோ?

    • உன்னவன் நான்.

    • (இதர) தெய்வங்களை வேண்டுகிலேன்.
    • உனக்குத் தகுந்த வகையில் பணிந்தேன்.

    • செல்வங்களேன் ஆயிரக்கணக்கில்?
    • நீயே போதும்.

    • தொண்டர்களுக்காகவே நீ வல்லவனாய்த் தோன்றினை.

    • அரச பார்வை பார்க்காதேயய்யா.
    • மறவாதேயய்யா.


  • என்னைக் காப்பாயய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பரம/ பாவன/ கு3ண-ஸா1லி/ நன்னு/
முற்றிலும்/ தூயோனே/ குணசாலியே/ என்னை/

பாலிம்பவே/ வனமாலி/
காப்பாயய்யா/ வனமாலி/


சரணம்
சரணம் 1
அன்னி/ நீவை/-உண்ட3 லேதா3/
அனைத்தும்/ நீயாகி/ இருக்கவில்லையா/

நீவு/-அகி2ல/-அண்ட3முல/ ப்3ரோவ லேதா3/ (ப)
நீ/ அனைத்து/ அண்டங்களையும்/ காக்கவில்லையா/


சரணம் 2
அன்ன/ நீகு/-இக/ த3ய/ ராதா3/
தந்தையே/ உனக்கு/ இன்னும்/ தயை/ வாராதா/

நின்னு/-அனுஸரிஞ்சின வாட3/ காதா3/ (ப)
உன்னை/ பின்பற்றினவன்/ அன்றோ/


சரணம் 3
நீவாட3னை/-ஆரு/ தூ3ர/ ராம/
உன்னவனாகியும்/ (உட்பகை) ஆறினையும்/ ஒறுக்க/ இராமா/

நீவு/ நன்னு/-ஏசேதி3/ மேர/ (ப)
நீ/ என்னை/ ஏய்த்தல்/ தகுமா/


சரணம் 4
பா4வமுனனு/ நீவேரா/
(எனது) உணர்வினில்/ நீயேயய்யா/

மஹானுபா4வ/ மாகு/-இதருலு/-ஐயேரா/ (ப)
பெருந்தகையே/ எமக்கு/ மற்றவர் (தெய்வங்கள்)/ ஒக்குமோ/


சரணம் 5
தே3வுடை3ன/-ஆ/ பா4னு/ குல/
தெய்வமாகிய/ அந்த/ பரிதி/ குல/

திலகா/ நீவாட3னு/ நேனு/ (ப)
திலகமே/ உன்னவன்/ நான்/


சரணம் 6
தை3வமுலனு/ வேட3 லேனு/ நீகு/
(இதர) தெய்வங்களை/ வேண்டுகிலேன்/ உனக்கு/

தகி3னட்டு/ லோகுவ-ஐனானு/ (ப)
தகுந்த வகையில்/ பணிந்தேன்/


சரணம் 7
வித்தமுலு/-ஏல/ வெயி வேலு/ ராம/
செல்வங்கள்/ ஏன்/ ஆயிரக்கணக்கில்/ இராமா/

ஸத்த/ மாத்ரமா/ நீவே/ சாலு/ (ப)
சத்து/ மாத்திரமே/ நீயே/ போதும்/


சரணம் 8
4க்துல கோஸமு/ நீவு/ ராம/
தொண்டர்களுக்காகவே/ நீ/ இராமா/

1க்துட3வை/ வெலஸினாவு/ (ப)
வல்லவனாய்/ தோன்றினை/


சரணம் 9
ராஜபு/ ஜூபு/ ஸேயகுரா/
அரச/ பார்வை/ பார்க்காதேயய்யா/

த்யாக3ராஜ/ பூஜித/ மரவகுரா/ (ப)
தியாகராசனால்/ தொழப் பெற்றோனே/ மறவாதேயய்யா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், இப்பாடலின் ராகம் 'காமவர்த்தினி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.

2 - ராஜபு - ராஜஸபு : 'ராஜபு' என்ற சொல்லை, தியாகராஜர், தமது, 'ராம ராம ராம ராமயனி' என்ற மோகனம் ராக கீர்த்தனையிலும் பயன்படுத்துகின்றார். எனவே, 'ராஜபு' சரியெனக் கருதுகின்றேன்.

Top

மேற்கோள்கள்
1 - வனமாலி - துளசி, மல்லிகை, மந்தாரை, பாரிஜாதம் (பவழமல்லி) மற்றும் தாமரை மலர்களினால் தொடுக்கப்பட்ட, விஷ்ணு அணியும், 'வைஜயந்தி மாலை', 'வனமாலை' எனப்படும்.'வைஜயந்தி மாலை'.

Top

விளக்கம்
உட்பகை ஆறு - இச்சை, சினம், பேராசை, கருமித்தனம், மோகம், செருக்கு.
சத்து - பரம்பொருள் - சத்-சித்-ஆனந்தம் - இதில் சத்து என
சத்து மாத்திரம் - கேவலம் சத்தென
அரச பார்வை - பரிவின்றி அதிகாரமாக நோக்கல்

Top


Updated 11 Apr 2010

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
சரணம் 2- நின்னனுஸரிஞ்சின வாட3 காதா3 - நின்னனுஸரிஞ்சின வாடு3 /வாட3னு என்பது தானே பேச்சு வழக்கிலுள்ளது.
நன்றி
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
எல்லா புத்தகங்களிலும் 'வாட3' என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது. பொருள் வேறுபடாததனால், இது ஒரு கவிஞனுக்குள்ள விலக்கு என்று கருதுகின்றேன்.

வணக்கம்
கோவிந்தன்