ரகு4 வர நன்னு மரவ 1தகு3னா
அனுபல்லவி
நக3 த4ர ப4க்த ஜனாக4 நிவாரண (ர)
சரணம்
சரணம் 1
தல்லி தண்ட்3ருலன்ன 2தம்முலுன்னா
பொலதிகியொகடு3 3புருஷுண்டௌ3னா (ர)
சரணம் 2
பர தை3வமுலு பா3கு3 ஸொம்முலு
ஸுர நுத 4மங்க3ள ஸூத்ரமுலௌனா (ர)
சரணம் 3
சேஸின புண்ய சயமு 5ப்3ரஹ்மண்ய
ஆஸனொஸங்கி3தி அனுபம லாவண்ய (ர)
சரணம் 4
மனஸுன நீகே மருலு-கொன்னானு
ஸஜ்ஜன ஹித 6த்யாக3ராஜ நுத 7ஸு1பா4கர (ர)
பொருள் - சுருக்கம்
இரகுவரா! மலை சுமந்தோனே! தொண்டர் பாவங்களைக் களைவோனே! வானோரால் போற்றப் பெற்றோனே! அந்தணருக்கினியோனே! ஒப்பற்ற எழிலோனே! நல்லோருக்கினியோனே! தியாகராசன் போற்றும், மங்களச் சுரங்கமே!
- என்னை மறக்கத் தகுமா?
- பெற்றோரும், உடன் பிறந்தோரும் இருந்தாலும், பெண்ணுக்கு ஒருவன் கணவனாவானா?
- பிற தெய்வங்களும், சிறந்த நகைகளும், தாலிக் கயிறாகுமா?
- பெற்றோரும், உடன் பிறந்தோரும் இருந்தாலும், பெண்ணுக்கு ஒருவன் கணவனாவானா?
- (நான்) செய்த புண்ணியங்களோ, (எனது) அவாவினை யளித்தாய்;
- உள்ளத்தினில், உன்மீதே காதல் கொண்டேன்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ரகு4 வர/ நன்னு/ மரவ/ தகு3னா/
இரகுவரா/ என்னை/ மறக்க/ தகுமா/
அனுபல்லவி
நக3/ த4ர/ ப4க்த ஜன/-அக4/ நிவாரண/ (ர)
மலை/ சுமந்தோனே/ தொண்டர்/ பாவங்களை/ களைவோனே/
சரணம்
சரணம் 1
தல்லி/ தண்ட்3ருலு/-அன்ன/ தம்முலு/-உன்னா/
தாய்/ தந்தையர் (பெற்றோரும்)/ அண்ணன்/ தம்பியர் (உடன் பிறந்தோரும்)/ இருந்தாலும்/
பொலதிகி/-ஒகடு3/ புருஷுண்டு3/-ஔனா/ (ர)
பெண்ணுக்கு/ ஒருவன்/ கணவன்/ ஆவானா/
சரணம் 2
பர/ தை3வமுலு/ பா3கு3/ ஸொம்முலு/
பிற/ தெய்வங்களும்/ சிறந்த/ நகைகளும்/
ஸுர/ நுத/ மங்க3ள/ ஸூத்ரமுலு/-ஔனா/ (ர)
வானோரால்/ போற்றப் பெற்றோனே/ தாலி/ கயிறு/ ஆகுமா/
சரணம் 3
சேஸின/ புண்ய சயமு/ ப்3ரஹ்மண்ய/
(நான்) செய்த/ புண்ணியங்களோ/ அந்தணருக்கினியோனே/
ஆஸனு/-ஒஸங்கி3தி/ அனுபம/ லாவண்ய/ (ர)
(எனது) அவாவினை/ அளித்தாய்/ ஒப்பற்ற/ எழிலோனே/
சரணம் 4
மனஸுன/ நீகே/ மருலு/-கொன்னானு/
உள்ளத்தினில்/ உன்மீதே/ காதல்/ கொண்டேன்/
ஸஜ்ஜன/ ஹித/ த்யாக3ராஜ/ நுத/ ஸு1ப4/-ஆகர/ (ர)
நல்லோருக்கு/ இனியோனே/ தியாகராசன்/ போற்றும்/ மங்கள/ சுரங்கமே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், இப்பாடலின் ராகம் 'காமவர்த்தினி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.
1 - தகு3னா - தகு3னா ஓ.
2 - தம்முலுன்னா - தம்முலுயுன்னா.
3 - புருஷுண்டௌ3னா - புருஷுடு3யௌனா.
6 - த்யாக3ராஜ நுத - த்யாக3ராஜ வினுத.
7 - ஸு1பா4கர - ஸு1ப4கர : 'ஸு1ப4கர' என்பது சரியென்றால், இதனை 'ஸு1ப4'+'கர' என்று பிரித்து, 'மங்களமருள்வோனே' என்று பொருள் கொள்ளப்படும்.
Top
மேற்கோள்கள்
5 - ப்3ரஹ்மண்ய - அந்தணர்களுக்கு இனியோன். விஷ்ணு ஸஹஸ்ர நாமம் (661) நோக்கவும்.
Top
விளக்கம்
4 - மங்க3ள ஸூத்ரமு - தாலிக் கயிறு - தாலிக் கயிற்றினில், ஒரு மஞ்சளைக் கட்டி, அணிவதுதான் பரம்பரை வழக்கம். இது ஒரு நகையல்ல. ஆனால், பிற்காலத்தில், இது ஒரு காட்சிப் பொருளாக மாறிவிட்டது. அதனால்தான், தியாகராஜர், 'நகைகள் தாலிக்கயிறாகுமா' என்று கேட்கின்றார்.
இப்பாடல், 'நாரத பக்தி சூத்திர'ங்களில் கூறியபடி, எங்ஙனம், மனைவி, கணவனுக்குத் தொண்டு செய்வாளோ, அங்ஙனம், இறைவனைத் தொண்டன் அணுகும், 'காந்தாஸக்தி' எனப்படும் பக்தி நெறியினைச் சேர்ந்ததாகும்.
Top
Updated on 12 Apr 2010
No comments:
Post a Comment