நின்னே நெர நம்மினானுரா ஓ ராம ராமய்ய
அனுபல்லவி
1அன்னி கல்லலனுசு 2ஆடி3 பாடி3 வேடி3
பன்னக3 ஸ1யன நே சின்ன தனமு நாடே3 (நி)
சரணம்
சரணம் 1
வேத3 ஸா1ஸ்த்ர புராண வித்3யலசே 3பே4த3
வாத3முலு தீரக 4ப்4ரமயு வாரல ஜூசி (நி)
சரணம் 2
போ4க3முல கொரகு பு4விலோ 5ராஜஸம்முன
யாகா3து3லொனரிஞ்சி அலயு வாரல ஜூசி (நி)
சரணம் 3
ஈ ஜன்மமுன 6நின்னு ராஜி ஜேஸுகொன லேக
ராஜில்லரனி 7த்யாக3ராஜ ராஜ ராக4வ (நி)
பொருள் - சுருக்கம்
ஓ இராமா! இராமய்யா! அரவணையோனே! தியாகராசனின் தலைவா! இராகவா!
- உன்னையே மிக்கு நம்பினேனய்யா;
- மறைகள், சாத்திரங்கள், புராணங்களின் ஏட்டறிவினால், பேத வாதங்கள் தீராது திகைப்போரைக் கண்டு...
- இன்பங்களுக்காக, புவியில், இராசதத்துடன் வேள்விகள் முதலானவை இயற்றி அலைவோரைக் கண்டு...
- மறைகள், சாத்திரங்கள், புராணங்களின் ஏட்டறிவினால், பேத வாதங்கள் தீராது திகைப்போரைக் கண்டு...
- இப்பிறவியில், உன்னை ஒப்புக்கொள்ளச் செய்யாது, (மனிதர்) திகழாரென...
- (மற்று) அனைத்தும் உண்மையல்லவென்று...
- ஆடிப் பாடி, வேண்டி, நான் சிறு வயது முதலே, உன்னையே மிக்கு நம்பினேனய்யா.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நின்னே/ நெர/ நம்மினானுரா/ ஓ ராம/ ராமய்ய/
உன்னையே/ மிக்கு/ நம்பினேனய்யா/ ஓ இராமா/ இராமய்யா/
அனுபல்லவி
அன்னி/ கல்லலு/-அனுசு/ ஆடி3/ பாடி3/ வேடி3/
(மற்று) அனைத்தும்/ உண்மையல்ல/ என்று/ ஆடி/ பாடி/ வேண்டி/
பன்னக3/ ஸ1யன/ நே/ சின்ன/ தனமு/ நாடே3/ (நி)
அரவு/ அணையோனே/ நான்/ சிறு/ வயது/ முதலே/ உன்னையே...
சரணம்
சரணம் 1
வேத3/ ஸா1ஸ்த்ர/ புராண/ வித்3யலசே/ பே4த3/
மறைகள்/ சாத்திரங்கள்/ புராணங்களின்/ ஏட்டறிவினால்/ பேத/
வாத3முலு/ தீரக/ ப்4ரமயு வாரல/ ஜூசி/ (நி)
வாதங்கள்/ தீராது/ திகைப்போரை/ கண்டு/ உன்னையே...
சரணம் 2
போ4க3முல கொரகு/ பு4விலோ/ ராஜஸம்முன/
இன்பங்களுக்காக/ புவியில்/ இராசதத்துடன்/
யாகா3து3லு/-ஒனரிஞ்சி/ அலயு வாரல/ ஜூசி/ (நி)
வேள்விகள் முதலானவை/ இயற்றி/ அலைவோரை/ கண்டு/ உன்னையே...
சரணம் 3
ஈ/ ஜன்மமுன/ நின்னு/ ராஜி ஜேஸுகொன/ லேக/
இந்த/ பிறவியில்/ உன்னை/ ஒப்புக்கொள்ள/ செய்யாது/
ராஜில்லரு/-அனி/ த்யாக3ராஜ/ ராஜ/ ராக4வ/ (நி)
(மனிதர்) திகழார்/ என/ தியாகராசனின்/ தலைவா/ இராகவா/ உன்னையே...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், இப்பாடலின் ராகம் 'காமவர்த்தினி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.
4 - ப்4ரமயு - ப்4ரமஸே.
7 - த்யாக3ராஜ ராஜ - த்யாக3ராஜ வந்த்3ய.
Top
மேற்கோள்கள்
3 - பே4த3 வாத3முலு - பேத வாதங்கள் - பொதுப்படையாக, வேறுபாட்டு வாதங்கள் என்றோ, அல்லது, 'பேதம்'-'அபேதம்' ஆகிய வாதங்கள் என்றோ பொருள் கொள்ளலாம். மத்வாசாரியாரின் கோட்பாடாகிய, 'துவைதம்', 'பேத வாதம்' எனப்படும். 'அத்துவைதம்', 'அபேத வாதம்' எனப்படும். ‘பேத வாதமும், மத்வாசாரியாரும்’
Top
5 - ராஜஸம்முன யாகா3து3லொனரிஞ்சி - இராசதத்துடன் வேள்விகள் முதலானவை இயற்றி. இது குறித்து, கீதையில் (3-வது அத்தியாயம், 9-வது செய்யுள்), கண்ணன் கூறுவது -
"வேள்விக்கென்றே யல்லாது, இயற்றப்படும் அனைத்து பணிகளும், உலகோரைப் பிணைக்கின்றன;
எனவே, குந்தி மைந்தா! பற்றினைத் துறந்து, வேள்விக்கென்றே பணிகள் இயற்றுவாயாக.
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)
Top
விளக்கம்
1 - அன்னி கல்லலனுசு - அனைத்தும் உண்மையல்லவென்று - முதலிரண்டு சரணங்களில் கூறப்பட்டவை. அதாவது, ஏட்டறிவினைக் கொண்டு, இறைவனைப் பற்றிய வாதங்களும், உலக இன்பங்களுக்கென, இராசதத்துடன் இயற்றப்படும் வேள்விகள் முதலானவைகளும்.
2 - ஆடி3 பாடி3 - ஆடிப் பாடி - இசையினை, இறைவனை அடையும் சாதனமாகக் கருதும், பாகவதப் பரம்பரையினரின் பஜனைகளில், உத்தம பாகவதர்கள், பரவச நிலையில் நடமிடுவர். ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் வாழ்க்கைச் சரிதையில், அத்தகைய பரவச நடனங்களைப் பற்றிய விவரங்களைக் காணலாம். இதனைத் தான், 'ஆடிப் பாடி' என்று தியாகராஜர் குறிப்பிடுகின்றார். இஃது, இன்றைய இசைக் கச்சேரியினின்றும், முற்றிலும் மாறுபட்டது.
Top
6 - நின்னு ராஜி ஜேஸுகொன லேக - உன்னை ஒப்புக்கொள்ளச் செய்யாது - இறைவனின் கருணை வாராமல் என. முதல் சரணத்தில் கூறிய, 'ஞான நெறி'யாகிலும், இரண்டாவது சரணத்தில் கூறிய, 'கரும நெறி'யாகிலும், கீதையில் கண்ணன் கூறியபடி, பற்றினைத் துறந்து, கடைப்பிடிக்காவிடில், இறைவனை உணர்வதற்கு, அவனுடைய அருள் கிடைக்காது. இதனை, தியாகராஜர், '(அருள் வழங்க) ஒப்புக்கொள்ளச் செய்யாது' என்று கூறுகின்றார். கடைசில், 'எனவே உன்னையே நான் நம்பினேன்' என்று கூறி, மற்ற நெறிகளைவிட, பக்தி நெறியின் மேன்மையினை, அவர் உணர்த்துகின்றார்.
பேதம் - பரமான்மாவும் சீவான்மாவும் வேறெனும் வாதம்
அபேதம் - பரமான்மாவும் சீவான்மாவும் ஒன்றேயெனும் வாதம்
இராசதம் - முக்குணங்களிலொன்று - தற்பெருமை முதலானவை
Top
Updated on 10 Apr 2010
No comments:
Post a Comment