Sunday, April 4, 2010

தியாகராஜ கிருதி - நீ சித்தமு நா - ராகம் விஜய வஸந்த - Nee Chittamu Naa - Raga Vijaya Vasanta

பல்லவி
நீ சித்தமு நா பா4க்3யமய்ய
1நிருபாதி4 நீ வாட3னய்ய

அனுபல்லவி
யோசிஞ்சி கார்யமு லேத3னுசு
ஒகபாரி ஸ1ரணனுகொண்டினய்ய (நீ)

சரணம்
பர தை3வமுல 2ஜூசினந்தனே
3பா4வமந்து3 நீவை பரகெ33வய்ய
4ர லோன நா ஸரி வாரலலோ
3ய ஜூட3வய்ய த்யாக3ராஜ நுத (நீ)


பொருள் - சுருக்கம்
உபாதிகளற்றோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • உனது திருவுளம் எனது பேறய்யா;
  • உன்னவனய்யா.

    • யோசித்துப் பயனில்லையென்று, ஒரேமுறைப் புகலடைந்தேனய்யா;
    • மற்ற கடவுளரைக் கண்டவுடன், உணர்வினில் நீயாகி ஒளிர்ந்தனை யய்யா;


  • புவியில் எனக்கு சரிசமமானவருள் கருணை காட்டுமய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீ/ சித்தமு/ நா/ பா4க்3யமு/-அய்ய/
உனது/ திருவுளம்/ எனது/ பேறு/ அய்யா/

நிருபாதி4க/ நீ வாட3னு/-அய்ய/
உபாதிகளற்றோனே/ உன்னவன்/ அய்யா/


அனுபல்லவி
யோசிஞ்சி/ கார்யமு/ லேது3/-அனுசு/
யோசித்து/ பயன்/ இல்லை/ என்று/

ஒகபாரி/ ஸ1ரணு/-அனுகொண்டினி/-அய்ய/ (நீ)
ஒரேமுறை/ புகல்/ அடைந்தேன்/ அய்யா;


சரணம்
பர/ தை3வமுல/ ஜூசின/-அந்தனே/
மற்ற/ கடவுளரை/ கண்ட/ உடன்/

பா4வமு-அந்து3/ நீவை/ பரகெ33வு/-அய்ய/
உணர்வினில்/ நீயாகி/ ஒளிர்ந்தனை/ அய்யா/

4ர லோன/ நா/ ஸரி வாரலலோ/
புவியில்/ எனக்கு/ சரிசமமானவருள்/

3ய/ ஜூடு3/-அய்ய/ த்யாக3ராஜ/ நுத/ (நீ)
கருணை/ காட்டும்/ அய்யா/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ஜூசினந்தனே - ஜூசுனந்தனே : 'ஜூசினந்தனே' என்பதே சரியான தெலுங்கு வழக்காகும்.

3 - பா4வமந்து3 - பா4வமுல.

Top

மேற்கோள்கள்
1 - நிருபாதி4 - உபாதிகளற்றோன் - இலக்கணங்களற்ற பரம்பொருள். லலிதா ஸஹஸ்ர நாமம் - 'நிருபாதி4:' (154) நோக்கவும்.

Top

விளக்கம்



Updated on 04 Apr 2010

No comments: