Saturday, April 3, 2010

தியாகராஜ கிருதி - லீலகா3னு ஜூசு - ராகம் தி3வ்யமணி - Leelaganu Joochu - Raga Divyamani

பல்லவி
லீலகா3னு ஜூசு கு3ண ஸீ1லுல நா
பால கல்க3 ஜேஸி பாலிம்புமய்ய

அனுபல்லவி
பாலுமாலின 1பாமருலனொல்ல
பரமாத்மயீ லோகமுலனு (லீ)

சரணம்
நர 2கின்னர கிம்புருஷாஸுர
நிர்ஜர ராஜ ஸி1வாதி3 ரமா பதுல
தரு 3பூ4-த4ரானேகாண்ட3முல ஸ்ரீ
த்யாக3ராஜ நுத ஸ்ரீ ராம நீ (லீ)


பொருள் - சுருக்கம்
  • பரம்பொருளே! தியாகராசனால் போற்றப் பெற்ற இராமா!

    • திருவிளையாடலாக நோக்கும் நற்பண்பினரை என் பங்கில் உண்டாகச் செய்து, பேணுவாயய்யா
    • சோம்பித்திரியும் மூடர்களை யொறுக்க, இவ்வுலகங்களினை (உனது) திருவிளையாடலாக நோக்கும் நற்பண்பினரை என் பங்கில் உண்டாகச் செய்து, பேணுவாயய்யா
    • மனிதர், கின்னரர், கிம்புருடர், அசுரர், மூப்பற்றோர் அரசன், சிவன், இரமை மணாளன் முதலானோர், மரங்கள், மலைகள், பற்பல அண்டங்களையும், உனது திருவிளையாடலாக நோக்கும் நற்பண்பினரை என் பங்கில் உண்டாகச் செய்து, பேணுவாயய்யா



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
லீலகா3னு/ ஜூசு/ கு3ண ஸீ1லுல/ நா/
திருவிளையாடலாக/ நோக்கும்/ நற்பண்பினரை/ என்/

பால/ கல்க3/ ஜேஸி/ பாலிம்புமு/-அய்ய/
பங்கில்/ உண்டாக/ செய்து/ பேணுவாய்/ அய்யா/


அனுபல்லவி
பாலுமாலின/ பாமருலனு/-ஒல்ல/
சோம்பித்திரியும்/ மூடர்களை/ ஒறுக்க/

பரமாத்ம/-ஈ/ லோகமுலனு/ (லீ)
பரம்பொருளே/ இந்த/ உலகங்களினை/ (உனது) திருவிளையாடலாக...


சரணம்
நர/ கின்னர/ கிம்புருஷ/-அஸுர/
மனிதர்/ கின்னரர்/ கிம்புருடர்/ அசுரர்/

நிர்ஜர/ ராஜ/ ஸி1வ/-ஆதி3/ ரமா/ பதுல/
மூப்பற்றோர்/ அரசன் (இந்திரன்)/ சிவன்/ முதலானோர்/ இரமை/ மணாளன்/

தரு/ பூ4/-த4ர/-அனேக/-அண்ட3முல/ ஸ்ரீ/
மரங்கள்/ புவி/ சுமப்போன் (மலைகள்)/ பற்பல/ அண்டங்களையும்/ ஸ்ரீ/

த்யாக3ராஜ/ நுத/ ஸ்ரீ ராம/ நீ/ (லீ)
தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ ஸ்ரீ ராமா/ உனது/ திருவிளையாடலாக...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் இந்த கீர்த்தனையின் ராகம் 'து3ந்து3பி4' என்று கொடுக்கப்பட்டுள்ளது.

1 - பாமருலனொல்ல (பாமருலனு-ஒல்ல) - பாமருலனெல்ல (பாமருலனு-எல்ல) : தியாகராஜர், பல்லவியில் வேண்டுவது, 'நற்பண்புடையோருடைய இணக்கம்'. அதற்கு, காரணத்தினை அனுபல்லவியில் கூறுகின்றார் - அதாவது - 'மூடர்களை ஒறுக்க' - அவரது இணக்கத்தினைத் தவிர்க்க. 'ஒல்ல' என்ற தெலுங்கு சொல்லுக்கு, 'ஒறுத்தல்', 'வெறுத்தல்' என்று பொருளாகும். எனவே, 'பாமருலனு-ஒல்ல' என்பதே பொருந்தும்.

Top

மேற்கோள்கள்
2 - கின்னர கிம்புருஷ - கின்னரர், கிம்புருடர் - குபேரனின் பணியாட்கள்

Top

விளக்கம்
3 - பூ4-த4 - புவி சுமப்போன் - இது மலைகளையும், ஆதிசேடனையும் குறிக்கலாம். ஆனால், இச்சொல் வரும் வரிசையினைக் கருத்தில் கொண்டு (மரங்கள் ...) 'மலைகள்' என்ற பொருள் கொள்ளப்பட்டது.

மூப்பற்றோர் - வானோர் : அவர்தம் அரசன் - இந்திரன்
இரமை மணாளன் - விஷ்ணு

Top


Updated on 03 Apr 2010

No comments: