Sunday, April 4, 2010

தியாகராஜ கிருதி - அந்து3ண்ட3கனே - ராகம் பந்துவராளி - Andundakane - Raga Pantuvarali - Prahlada Bhakti Vijayam

பல்லவி
1அந்து3ண்ட3கனே வேக3 வச்செத3னனி
நாபைனான பெட்டி போரா

அனுபல்லவி
மந்த3ர த42நீவாப்துலதோ கூடி3
மரசிதேயேமி ஸேதுனே ஓ ராக4வ (அ)

சரணம்
சரணம் 1
கனவலெனனு வேள 3லேகுன்ன கன்னீரு
காலுவகா3 பாருனே
இன குலாதி4ப நீவு ரானு தாமஸமைதே-
4நில்லு வாகிலியௌனே ஓ ராக4வ (அ)


சரணம் 2
நிருபமானந்த31ய்யபை லேகுண்டே
நிமிஷமு யுக3மௌனே
பரமாத்ம நீவு கானக ப்4ரமஸின வேள
பருலு நவ்வுடகௌனே ஓ ராக4வ (அ)


சரணம் 3
பரம ப4க்தியு நா ப்ராயமுலெல்ல த3னுஜுல
பாலுகா3 போனௌனே
வரத3 5ஸ்ரீ த்யாக3ராஜார்சித பத3 யுக3
6வாரிதி4 முந்த3 நே ஓ ராக4வ (அ)


பொருள் - சுருக்கம்
மந்தர மலையைச் சுமந்தோனே! ஓ இராகவா! இன குலத் தலைவா! ஒப்பற்றவனே! பரம்பொருளே! வரதா! தியாகராசன் தொழும் திருவடி இணையோனே!

  • அங்கேயே இருக்காமலே, விரைவில் வருகின்றேனென, என் மீதாணையிட்டுப் போவாயய்யா;
  • நீ, வேண்டியவர்களுடன் கூடி, (என்னை) மறந்தாலென்ன செய்வனே?

    • காணவேண்டுமெனும் போழ்து, (நீ) இல்லாதிருந்தால், கண்ணீர் கால்வாயாகப் பாயுமே;
    • நீ வருவதற்குத் தாமதமானால், வீடு வாயிலாகுமே;
    • ஆனந்த அணையினில் (நீ) இல்லாதிருந்தால், நிமிடமும் யுகமாகுமே;
    • உன்னைக் காணாது திகைக்கும் போழ்து, பிறர் நகைக்கலாகுமே;
    • (எனது) உயர் பக்தி, எனது வாழ்நாள், யாவும் அசுரர்களின் வசமாகப் போகலாகுமே;


  • கடலரசன் முன்னிலையில், நான் அங்கேயே இருக்காமலே, விரைவில் வருகின்றேனென, என் மீதாணையிட்டுப் போவாயய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அந்து3/-உண்ட3கனே/ வேக3/ வச்செத3னு/-அனி/ நாபைன/-
அங்கேயே/ இருக்காமலே/ விரைவில்/ வருகின்றேன்/ என/ என் மீது/

ஆன/ பெட்டி/ போரா/
ஆணை/ இட்டு/ போவாயய்யா/


அனுபல்லவி
மந்த3ர/ த4ர/ நீவு/-ஆப்துலதோ/ கூடி3/
மந்தர (மலையை)/ சுமந்தோனே/ நீ/ வேண்டியவர்களுடன்/ கூடி/

மரசிதே/-ஏமி/ ஸேதுனே/ ஓ ராக4வ/ (அ)
(என்னை) மறந்தால்/ என்ன/ செய்வனே/ ஓ இராகவா/


சரணம்
சரணம் 1
கனவலெனு/-அனு/ வேள/ லேக/-உன்ன/ கன்னீரு/
காணவேண்டும்/ எனும்/ போழ்து/ (நீ) இல்லாது/ இருந்தால்/ கண்ணீர்/

காலுவகா3/ பாருனே/
கால்வாயாக/ பாயுமே/

இன/ குல/-அதி4ப/ நீவு/ ரானு/ தாமஸமைதே/-
இன/ குல/ தலைவா/ நீ/ வருவதற்கு/ தாமதமானால்/

இல்லு/ வாகிலி/-ஔனே/ ஓ ராக4வ/ (அ)
வீடு/ வாயில்/ ஆகுமே/ ஓ இராகவா/


சரணம் 2
நிருபம/-ஆனந்த3/ ஸ1ய்யபை/ லேக/-உண்டே/
ஒப்பற்றவனே/ ஆனந்த/ அணையினில்/ (நீ) இல்லாது/ இருந்தால்/

நிமிஷமு/ யுக3மு/-ஔனே/
நிமிடமும்/ யுகம்/ ஆகுமே/

பரமாத்ம/ நீவு/ கானக/ ப்4ரமஸின/ வேள/
பரம்பொருளே/ உன்னை/ காணாது/ திகைக்கும்/ போழ்து/

பருலு/ நவ்வுடகு/-ஔனே/ ஓ ராக4வ/ (அ)
பிறர்/ நகைக்கல்/ ஆகுமே/ ஓ இராகவா/


சரணம் 3
பரம/ ப4க்தியு/ நா/ ப்ராயமுலு/-எல்ல/ த3னுஜுல/
(எனது) உயர்/ பக்தி/ எனது/ வாழ்நாள்/ யாவும்/ அசுரர்களின்/

பாலுகா3/ போனு/-ஔனே/
வசமாக/ போகல்/ ஆகுமே/

வரத3/ ஸ்ரீ த்யாக3ராஜ/-அர்சித/ பத3/ யுக3/
வரதா/ ஸ்ரீ தியாகராசன்/ தொழும்/ திருவடி/ இணையோனே/

வாரிதி4/ முந்த3ர/ நே/ ஓ ராக4வ/ (அ)
கடலரசன்/ முன்னிலையில்/ நான்/ ஓ இராகவா/ அங்கேயே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், இப்பாடலின் ராகம், 'காமவர்த்தினி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.

2 - ஆப்துலதோ - ஆப்துலலோ : இவ்விடத்தில் 'ஆப்துலதோ' என்பதே பொருந்தும்.

3 - லேகுன்ன - லேகுண்டே.

5 - ஸ்ரீ த்யாக3ராஜார்சித - த்யாக3ராஜார்சித.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்னும் நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும்.

1 - அந்து3ண்ட3கனே - அங்கேயே இருக்காமலே - 'அங்கே' என்பது, 'வைகுந்தத்தை'க் குறிக்கும். (இந்தப் பாடலுக்கு, முன்வரும் வசனத்தினை நோக்கவும்)

4 - இல்லு வாகிலியௌனே - வீடு வாயிலாகும் - பாதுகாப்பு இல்லாமற்போகும்

6 - வாரிதி4 முந்த3 - கடலரசன் முன்னிலையில். பிரகலாதன், இறைவனுடைக்கு ஆணைக்கு, கடலரசனை சாட்சியாக வேண்டுகின்றான்.

இப்பாடல் அரியைப் பிரிய மனமில்லாது பிரகலாதன் கூறுவதாக
இன குலம் - பரிதி குலம்

Top


Updated on 05 Apr 2010

1 comment:

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
உங்களுடைய comment-ஐ தவறுதலாக நீக்கிவிட்டேன்.
'நீவு கானக' என்பதற்கு 'உன்னைக் காணாது' என்று நான் பொருள் கொடுத்துள்ளது பற்றிக் கேட்டிருந்தீர்கள்.

எனக்குத் தெரிந்தவரை, இலக்கணப்படி, 'நின்னு கானக' 'உன்னைக் காணாது' என்றுதான் இருக்கவேண்டும். ஆனால், 'நீவு கானக' என்று பயன்படுத்தலாமா என்று தெலுங்கு பண்டிதர்கள்தான் விளக்கம் கூற முடியும். ஆனால், இவ்விடத்தில் 'நீவு' என்பதற்கு 'உன்னை' என்பதுதான் தமிழிலக்கணப்படி சரியாகும்.

வணக்கம்
கோவிந்தன்