Friday, April 9, 2010

தியாகராஜ கிருதி - நாரத3 முனி - ராகம் பந்துவராளி - Narada Muni - Raga Pantuvarali - Prahlada Bhakti Vijayam

பல்லவி
நாரத3 முனி வெட3லின
ஸு-கு3ணாதிஸ1யமு வினரே

அனுபல்லவி
ஸாரெகு ஸ்ரீ ஹரி பத3 ஸாரஸமுல
த்4யானிஞ்சுசு நாராயண நாமமுலனு
பாராயணமொனரிஞ்சுசு (நா)

சரணம்
சரணம் 1
1பே4தா3பே43 ரஹிதமகு3 வேதா3ந்த
ரஸ ப4ரித
ுடா3ஹ்லாத3மு மீரக3னு
2ப்ரஹ்லாது3னிகி ஸு14மு தெலுபனு (நா)


சரணம் 2
கடு3 தெல்ல தே3ஹமுன பஸிடி3
வீணெ மெரயக3 தானெட3பா3யனி
ப்ரேமதோனடு33டு3கு3கு வாயிஞ்சுசு (நா)


சரணம் 3
ராஜில்லின ஸ்ரீ த்யாக3ராஜ ஸகு2னி
மர்மமுலனு ஈ ஜக3தினி வின்னவாரிகே
3ஜயமு ஜயமு ஜயமனி (நா)


பொருள் - சுருக்கம்
  • பேத, அபேதங்களற்ற வேதாந்த சாரம் நிறைந்தோனாகிய, நாரத முனிவர்,
    • தூய வெண்ணிற உடலினில், பொன்னிற வீணையொளிர,
    • தன்னைவிட்டகலாத காதலுடன், ஒவ்வோரடிக்கும் (வீணையை) மீட்டிக்கொண்டு,
    • எவ்வமயமும், அரியின் திருவடித் தாமரைகளை தியானித்துக் கொண்டு,
    • நாராயணனின் நாமங்களினை பாராயணம் செய்துகொண்டு,


  • பிரகலாதனுக்கு நற்செய்தி தெரிவிக்க,
  • ஒளிரும், தியாகராசனுக்கு இனியோனின் மருமங்களினைச் செவிமடுத்தோருக்கு, இவ்வுலகத்தினில் வெற்றி, வெற்றி, வெற்றியென்று முழங்கி,
  • களிப்பு மிக, எழுந்தருளிய பெருஞ்சிறப்பினைக் கேளீரே!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நாரத3/ முனி/ வெட3லின/
நாரத/ முனிவர்/ எழுந்தருளிய/

ஸு-கு3ண-அதிஸ1யமு/ வினரே/
பெருஞ்சிறப்பினை/ கேளீரே/


அனுபல்லவி
ஸாரெகு/ ஸ்ரீ ஹரி/ பத3/ ஸாரஸமுல/
எவ்வமயமும்/ ஸ்ரீ ஹரியின்/ திருவடி/ தாமரைகளை/

த்4யானிஞ்சுசு/ நாராயண/ நாமமுலனு/
தியானித்துக் கொண்டு/ நாராயணனின்/ நாமங்களினை/

பாராயணமு/-ஒனரிஞ்சுசு/ (நா)
பாராயணம்/ செய்துகொண்டு/ நாரத...


சரணம்
சரணம் 1
பே43/-அபே43/ ரஹிதமகு3/ வேதா3ந்த/
பேத/ அபேதங்கள்/ அற்ற/ வேதாந்த/

ரஸ/ ப4ரிதுடு3-/ஆஹ்லாத3மு/ மீரக3னு/
சாரம்/ நிறைந்தோன்/ களிப்பு/ மிக/

ப்ரஹ்லாது3னிகி/ ஸு14மு/ தெலுபனு/ (நா)
பிரகலாதனுக்கு/ நற்செய்தி/ தெரிவிக்க/ நாரத...


சரணம் 2
கடு3/ தெல்ல/ தே3ஹமுன/ பஸிடி3/
தூய/ வெண்ணிற/ உடலினில்/ பொன்னிற/

வீணெ/ மெரயக3/ தானு/-எட3பா3யனி/
வீணை/ ஒளிர/ தன்னை/ விட்டகலாத/

ப்ரேமதோனு/-அடு33டு3கு3கு/ வாயிஞ்சுசு/ (நா)
காதலுடன்/ ஒவ்வோரடிக்கும்/ (வீணையை) மீட்டிக்கொண்டு/ நாரத...


சரணம் 3
ராஜில்லின/ ஸ்ரீ த்யாக3ராஜ/ ஸகு2னி/
ஒளிரும்/ ஸ்ரீ தியாகராசனுக்கு/ இனியோனின்/

மர்மமுலனு/ ஈ/ ஜக3தினி/ வின்னவாரிகே/
மருமங்களினை/ இந்த/ உலகத்தினில்/ செவிமடுத்தோருக்கு/

ஜயமு/ ஜயமு/ ஜயமு/-அனி/ (நா)
வெற்றி/ வெற்றி/ வெற்றி/ யென்று முழங்கி/ நாரத...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், இப்பாடலின் ராகம் 'காமவர்த்தினி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.

2 - ப்ரஹ்லாது3னிகி - ப்ரஹ்லாது3னகு.

Top

மேற்கோள்கள்
1 - பே4த - மத்வாசாரியரின் கோட்பாடாகிய 'துவைதம்', பேத வாதம் எனப்படும். பேத வாதமும், மத்வாசாரியாரும்.

1 - அபே4 - அத்துவைதம்.

1 - பேத-அபே4 - துவைத-அத்துவைதம்

ஆதி சங்கரர் இயற்றிய, 'ஷட்பதீ' தோத்திரத்தில் 'பேத-அபேத' கொள்கையின் சாயல் தெரிகின்றது -

"தலைவா! (நமக்குள்) வேறுபாடுகள் மறைந்தாலும், நான் உன்னவனாவேனே யொழிய, நீ என்னவனாவதில்லை.
எங்ஙனம், அலைகள், கடலைச் சேர்ந்தவையே யன்றி, கடல், அலைகளைச் சேர்ந்தததாகாதோ, அங்ஙனமே." (3)

Top

விளக்கம்
1 - பே4தா3பே43 ரஹிதமகு3 வேதா3ந்த ரஸ ப4ரிதுடு3 - பேத-அபேதகங்களற்ற வேதாந்த சாரம் நிறைந்தோன் -

இரண்டாவது சரணத்தில், 'தன்னைவிட்டகலாத காதலுடன்' என்று கூறப்பட்டுள்ளது. நாரதரால் இயற்றப்பெற்ற 'நாரத பக்தி சூத்திர'ங்களில், 'பர-பக்தி' அல்லது 'முக்ய பக்தி' அல்லது 'அனுராகம்' எனப்படும், இறைவனிடம், தொண்டன் கொள்ளும் பெருங்காதலைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. என் சிற்றறிவுக்கு எட்டியவரை, 'பேத-அபேதகங்களற்ற வேதாந்தம்' என்பது, அத்தகைய 'பர-பக்தி'யினைக் குறிக்கும்.

3 - ஜயமு ஜயமு ஜயமனி - வெற்றி, வெற்றி, வெற்றி யென - மும்முறை கூறுதல் உறுதிப்படுத்துவதாகும்.

இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும். இப்பாடலில், நாரதர், அரி, பிரகலாதனைக் காண வரப்போகும் நற்செய்தியினை, பிரகலாதனுக்குத் தெரிவிக்க, புறப்படுவதனை தியாகராஜர் விவரிக்கின்றார்.

Top

பாராயணம் செய்துகொண்டு - இடைவிடாது ஓதுதல்
பேதம் - பரமான்மாவும் சீவான்மாவும் வேறெனல்
அபேதம் - பரமான்மாவும் சீவான்மாவும் ஒன்றேயெனல்
வேதாந்த சாரம் நிறைந்தோன் - நாரதரைக் குறிக்கும்
ஒளிரும் - அரியைக் குறிக்கும்
தியாகராசனுக்கினியோன் - அரி

Top


Updated on 10 Apr 2010

No comments: