Thursday, April 8, 2010

தியாகராஜ கிருதி - சூட3ரே செலுலார - ராகம் பந்துவராளி - Chudare Chelulara - Raga Pantuvarali

பல்லவி
சூட3ரே செலுலார யமுனா தே3வி
ஸொக3ஸெல்ல ஸந்தோஷமுன

சரணம்
1சரணம் 1
எர்ரனி பங்கே-ருஹமுலே அந்து3
இம்பைன ப்4ரு2ங்க3 நாத3முலே (சூ)


சரணம் 2
இஸுக தி3ன்னெலெந்த தெலுபே மேனு
இந்த்3ர நீலமுவண்டி நலுபே (சூ)


சரணம் 3
மேடிகலு வஜ்ரம்பு ஸி1லலே அந்து3
குடிலமைன சின்னயலலே (சூ)


சரணம் 4
ஹம்ஸல ரவளிசே சால தே3வி
அதி3கோ3 செலங்கெ3னீ வேள (சூ)


சரணம் 5
பொலதுலார பொத3ரிண்ட்3லே
தேனெலொலுகு க2ர்ஜூரபு பண்ட்3லே (சூ)


சரணம் 6
2லமுசே த்3ராக்ஷ லதலே அந்து3
பச்சனி சிலுகல ஜதலே (சூ)


சரணம் 7
விந்த விந்த விருல வான
மதி3கெந்தெந்தோ மருலய்யெனே (சூ)


சரணம் 8
கோகிலமுலு ம்ரோஸெனே மருடு3
குஸும 21ரம்பு3லேஸெனே (சூ)


சரணம் 9
சல்லனி மலய மாருதமே க்ரு2ஷ்ண
ஸ்வாமினி 3கூடு3னதி3 ஸதமே (சூ)


சரணம் 10
ராஜ வத3னலார கனரே
த்யாக3ராஜ ஸகு2னி பாட வினரே (சூ)


பொருள் - சுருக்கம்
தோழியரே! கன்னியரே! மதி வதனத்தோரே!

  • பாருங்களடி, யமுனா தேவியின் எழிலெல்லாம், களிப்புடனே!

    • செந்தாமரைகளடி! அவற்றில் இனிய வண்டோசைகளடி!
    • மணல் திட்டுக்கள் எவ்வளவு வெண்மையடி! (நதியின்) உடல், இந்திர நீலம் போன்ற கருமையடி!
    • படித்துறைகள் வைரக் கற்களடி! அவற்றினில் நெளியும் சிற்றலைகளடி!
    • கொடிப் பந்தல்களடி! தேனொழுகும் பேரீச்சைப் பழங்களடி!
    • பழங்களுடன் திராட்சைக் கொடிகளடி! அவற்றினில் பச்சைக்கிளிச் சோடுகளடி!


  • அன்னங்களின் கூவல்களுடன், மிக்கு, தேவி, அதோ, ஒளிர்கின்றனள், இவ்வேளை!
  • விதவிதமான மலர் மழை மனதிற்கு எத்தனையோ இன்பமூட்டுதடி!
  • குயில்கள் கூவுதடி! காமன் மலர்க்கணைகள் எய்தானடி!
  • குளிர்ந்த மலைய மாருதமடி!

  • கண்ண தேவனைக் கூடுவது உறுதியடி!
  • காணுங்களடி, தியாகராசனின் நண்பனின் பாடலைக் கேளுங்களடி.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
சூட3ரே/ செலுலார/ யமுனா/ தே3வி/
பாருங்களடி/ தோழியரே/ யமுனா/ தேவியின்/

ஸொக3ஸு/-எல்ல/ ஸந்தோஷமுன/
எழில்/ எல்லாம்,/ களிப்புடனே/


சரணம்
சரணம் 1
எர்ரனி/ பங்கே-ருஹமுலே/ அந்து3/
செந்நிற/ தாமரைகளடி/ அவற்றில்/

இம்பைன/ ப்4ரு2ங்க3/ நாத3முலே/ (சூ)
இனிய/ வண்டு/ ஓசைகளடி/


சரணம் 2
இஸுக/ தி3ன்னெலு/-எந்த/ தெலுபே/ மேனு/
மணல்/ திட்டுக்கள்/ எவ்வளவு/ வெண்மையடி/ (நதியின்) உடல்/

இந்த்3ர/ நீலமு/-அண்டி/ நலுபே/ (சூ)
இந்திர/ நீலம்/ போன்ற/ கருமையடி/


சரணம் 3
மேடிகலு/ வஜ்ரம்பு/ ஸி1லலே/ அந்து3/
படித்துறைகள்/ வைர/ கற்களடி/ அவற்றினில்/

குடிலமைன/ சின்ன/-அலலே/ (சூ)
நெளியும்/ சிறிய/ அலைகளடி/


சரணம் 4
ஹம்ஸல/ ரவளிசே/ சால/ தே3வி/
அன்னங்களின்/ கூவல்களுடன்/ மிக்கு/ தேவி/

அதி3கோ3/ செலங்கெ3னு/-ஈ/ வேள/ (சூ)
அதோ/ ஒளிர்கின்றனள்/ இந்த/ வேளை/


சரணம் 5
பொலதுலார/ பொத3ரு/-இண்ட்3லே/
கன்னியரே/ கொடி/ பந்தல்களடி/

தேனெலு/-ஒலுகு/ க2ர்ஜூரபு/ பண்ட்3லே/ (சூ)
தேன்/ ஒழுகும்/ பேரீச்சை/ பழங்களடி/


சரணம் 6
2லமுசே/ த்3ராக்ஷ/ லதலே/ அந்து3/
பழங்களுடன்/ திராட்சை/ கொடிகளடி/ அவற்றினில்/

பச்சனி/ சிலுகல/ ஜதலே/ (சூ)
பச்சை/ கிளி/ சோடுகளடி/


சரணம் 7
விந்த விந்த/ விருல/ வான/
விதவிதமான/ மலர்/ மழை/

மதி3கி/-எந்தெந்தோ/ மருலு-அய்யெனே/ (சூ)
மனதிற்கு/ எத்தனையோ/ இன்பமூட்டுதடி/


சரணம் 8
கோகிலமுலு/ ம்ரோஸெனே/ மருடு3/
குயில்கள்/ கூவுதடி/ காமன்/

குஸும/ ஸ1ரம்பு3லு/-ஏஸெனே/ (சூ)
மலர்/ கணைகள்/எய்தானடி/


சரணம் 9
சல்லனி/ மலய/ மாருதமே/ க்ரு2ஷ்ண/
குளிர்ந்த/ மலைய/ மாருதமடி/ கண்ண/

ஸ்வாமினி/ கூடு3னதி3/ ஸதமே/ (சூ)
தேவனை/ கூடுவது/ உறுதியடி/


சரணம் 10
ராஜ/ வத3னலார/ கனரே/
மதி/ வதனத்தோரே/ காணுங்களடி/

த்யாக3ராஜ/ ஸகு2னி/ பாட/ வினரே/ (சூ)
தியாகராசனின்/ நண்பனின்/ பாடலை/ கேளுங்களடி/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
ராகம் - சில புத்தகங்களில் 'காமவர்த்தனி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.

1 - சரணம் 1 - சில புத்தகங்களில் முதல் சரணம், 'அனுபல்லவி'யெனப்பட்டுள்ளது.

2 - 1ரம்பு3லேஸெனே - ஸ1ரம்பு3 வேஸெனே.

3 - கூடு3னதி3 - கூடே3தி3.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
இப்பாடல் நௌக சரித்ரம் எனப்படும் ஓடக்கதையின் அங்கமாகும்.

பின்னணி - ஆய்ச்சியர், கண்ணனைக் கூடுவதற்காக, யமுனைக் கரைக்கு வருகின்றனர். இப்பாடல், அங்குள்ள சூழ்நிலையை வருணித்து, ஆய்ச்சியர் பாடுவதாக அமைந்துள்ளது.

நதியின் உடல் - நீர்ப்பரப்பினைக் குறிக்கும்
இந்திர நீலம் - நீலக்கல்
தியாகராசனின் நண்பன் - கண்ணன்

Top


Updated on 08 Apr 2010

No comments: