Tuesday, March 9, 2010

தியாகராஜ கிருதி - பாஹி பரமாத்ம - ராகம் வராளி - Pahi Paramatma - Raga Varali

பல்லவி
பாஹி பரமாத்ம ஸததம் மாம்

சரணம்
சரணம் 1
ராம ஸகல ரிபு பீ4ம முனி
மனோத்3-தா4ம த்ரி-ஜக33பி4ராம (பா)


சரணம் 2
பா4க்3ய தா3யகாரோக்3ய கர
ஸு-வைராக்3ய ப4க்த ஜன யோக்3ய (பா)


சரணம் 3
ராம சந்த்3ர நீ நாமமந்து3 நிஜ
ப்ரேம லேனி ப்3ரதுகேமி (பா)


சரணம் 4
ஸந்ததம்பு3 தனயந்தரம்பு3ன நீ
சிந்த லேனி வாடெ3ந்த (பா)


சரணம் 5
தொ3ரக ரானி நீ சரண ப4க்தி-
யேமரின மானவுட3ஸுருடே3 (பா)


சரணம் 6
ஆரு ஸ1த்ருலனு 1தூ3ர சேஸி நனு
கா3ரவிஞ்சு-வாரு லேரு (பா)


சரணம் 7
மனஸுனனொகடி வசனமுன 2வேரை
வினயமுலாடு3கொனினானா (பா)


சரணம் 8
பா3கு3கா3னு ஸ்ரீ த்யாக3ராஜ நுத
நாக3ரீக நனு வேக3 (பா)


பொருள் - சுருக்கம்
  • பரம்பொருளே!
  • இராமா! அனைத்து பகைவருக்கும் அச்சமூட்டுவோனே! முனிவர் உள்ளத்துறைவோனே! மூவுலகிற்கும் களிப்பூட்டுவோனே!
  • பேறருள்வோனே! உடல் நலமருள்வோனே! உலகப் பற்றற்ற உயர் தொண்டர்களுக்கு உகந்தவனே! (அல்லது) உலகப் பற்றற்றோனே! தொண்டர்களுக்கு உகந்தவனே!
  • இராம சந்திரா!
  • தியாகராசனால் போற்றப் பெற்றோனே! சீரிய பண்புகளுடைத்தோனே!

  • காப்பாய், எவ்வமயமும் என்னை;

    • உனது நாமத்தினில் உண்மையான காதலற்ற பிழைப்பென்ன?
    • எவ்வமயமும் தனதுள்ளத்தினில் உனது நினைவற்றவன் எம்மாத்திரம்?
    • கிடைத்தற்கரிய, உனதுத் திருவடிப் பற்றினைத் தவறவிட்ட மனிதன் அரக்கனே;

    • ஆறு உட்பகைவரை விலகச் செய்து, என்னிடம் கனிவு கொள்வோரிலர்;
    • மனத்திலொன்றும், சொல்லில் வேறுமாகி (கள்ள) ஒழுக்கம் பயின்றேனா?


  • சிறக்க, விரைவில் என்னைக் காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாஹி/ பரம-ஆத்ம/ ஸததம்/ மாம்/
காப்பாய்/ பரம்பொருளே/ எவ்வமயமும்/ என்னை/


சரணம்
சரணம் 1
ராம/ ஸகல/ ரிபு/ பீ4ம/ முனி/
இராமா/ அனைத்து/ பகைவருக்கும்/ அச்சமூட்டுவோனே/ முனிவர்/

மனோ/-தா4ம/ த்ரி/-ஜக3த்/-அபி4ராம/ (பா)
உள்ளத்து/ உறைவோனே/ மூன்று/ உலகிற்கும்/ களிப்பூட்டுவோனே/


சரணம் 2
பா4க்3ய/ தா3யக/-ஆரோக்3ய/ கர/
பேறு/ அருள்வோனே/ உடல் நலம்/ அருள்வோனே/

ஸு/-வைராக்3ய/ ப4க்த ஜன/ யோக்3ய/ (பா)
உயர்/ உலகப் பற்றற்ற (பற்றற்றோனே)/ தொண்டர்களுக்கு/ உகந்தவனே/


சரணம் 3
ராம/ சந்த்3ர/ நீ/ நாமமு-அந்து3/ நிஜ/
இராம/ சந்திரா/ உனது/ நாமத்தினில்/ உண்மையான/

ப்ரேம/ லேனி/ ப்3ரதுகு/-ஏமி/ (பா)
காதல்/ அற்ற/ பிழைப்பு/ என்ன/


சரணம் 4
ஸந்ததம்பு3/ தன/-அந்தரம்பு3ன/ நீ/
எவ்வமயமும்/ தனது/ உள்ளத்தினில்/ உனது/

சிந்த/ லேனி வாடு3/-எந்த/ (பா)
நினைவு/ அற்றவன்/ எம்மாத்திரம்/


சரணம் 5
தொ3ரக/ ரானி/ நீ/ சரண/ ப4க்தி/-
கிடைத்தற்கு/ அரிய/ உனது/ திருவடி/ பற்றினை/

ஏமரின/ மானவுடு3/-அஸுருடே3/ (பா)
தவறவிட்ட/ மனிதன்/ அரக்கனே/


சரணம் 6
ஆரு/ ஸ1த்ருலனு/ தூ3ர/ சேஸி/ நனு/
ஆறு/ (உட்)பகைவரை/ விலக/ செய்து/ என்னிடம் (என்னை)/

கா3ரவிஞ்சு-வாரு/ லேரு/ (பா)
கனிவு கொள்வோர்/ இலர்/


சரணம் 7
மனஸுன/-ஒகடி/ வசனமுன/ வேரை/
மனத்தில்/ ஒன்றும்/ சொல்லில்/ வேறுமாகி/

வினயமுலு/-ஆடு3கொனினானா/ (பா)
(கள்ள) ஒழுக்கம்/ பயின்றேனா/


சரணம் 8
பா3கு3கா3னு/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/
சிறக்க/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/

நாக3ரீக/ நனு/ வேக3/ (பா)
சீரிய பண்புகளுடைத்தோனே/ என்னை/ விரைவில்/ காப்பாய்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தூ3ர சேஸி - விலகச் செய்து - எல்லா புத்தகங்களிலும் 'தூ3ரு சேஸி' என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு, 'விலகச் செய்து' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய பொருள், இவ்விடத்தில் பொருந்தும். 'தூ3ரு சேஸி' என்பதற்கு அந்த பொருளில்லை; எனவே அது தவறாகும்.

2 - வேரை - வேர : இவ்விடத்தில், 'வேரை' என்பதே பொருந்தும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
தொண்டர்களுக்கு உகந்தவன் - தியானத்திற்கு உகந்தவன்
ஆறு உட்பகைவர் - காமம் முதலானவை

Top


Updated on 10 Mar 2010

No comments: